இணையம் என்பது முன்பு நமக்கெல்லாம் அந்நிய சாதனமாக இருந்தது. தற்போது காலமாற்றத்தில் இணையம் இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற அளவிற்கு மாறிவிட்டது. அதன் தேவையும், பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே போல அதைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஒவ்வொருநாளும் புதிய புதிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
உலக அளவில் இணைக்கப்பட்ட பல கம்ப்யூட்டர்களை நாம் இணையம் (Internet) என அழைக்கிறோம். ஆனால் இமைப்பொழுதில், எப்படி எங்கோ ஒரு மூலையில் உள்ள கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள தகவல்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடை கின்றன? இன்டர்நெட்டை முதலில் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் இந்த சந்தேகம், வியப்பு எழுவது இயற்கையே. ஒரு சிலர் மேலும் துருவி ஆய்வு செய்து பல நூல்களைப் படித்துத் தெரிந்துகொள்கின்றனர். சிலரோ இன்டர்நெட்டில் கிடைக்கும் தகவல்களைப் பற்றிய சுவராஸ்யத்தில் ஆழ்ந்து மறந்து விடுகின்றனர்.
நம் கைகளுக்குள் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தகவல்கள், படங்கள், வீடியோக்கள் எப்படி நம் இல்லத்தில் ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டருக்குள் வருகிறது என்று இங்கே மேலும் பார்க்கலாம்.
கிளையண்ட் (Client)
கம்ப்யூட்டரை இயக்கி, இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், சபாரி, குரோம், என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்" என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்" (Client) என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர், நீங்கள் தேவை என்று சொன்ன, (இணைய தளம் வேண்டும் என்று சொன்ன) உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப் பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி.(ISP) சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்" என்னும் அதிவேக வழியில் செல்கிறது.
சர்வர் (Server)
இப்படியே சென்று, நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்"(Server) என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் (Server), பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி, தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட்(Data Packets) பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. (Internet Service Provider) (ISP) நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர், பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவை அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.
இணைய வழி நெறிமுறை (Internet protocol)
நாம் ஓர் இணையதளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான், கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் மொழியில் மாற்றி அனுப்ப வேண்டியுள்ளது. இதற்கு புரோட்டோகால் (protocol) என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வைஃபி (TCP,IP, HTTP, FTP, SMTP & WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி ஐ.பி. TCP-IP பயன்படுத்துவதால் அது குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.
டி.சி.பி.- ஐ.பி (TCP-IP)
இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் (முகவரி) தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 விலிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது யாஹூ வளைதளத்தின் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர், நெட்டில் இணையும்போது, உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர் நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஓர் ஐ.எஸ்.பி.ISP, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால், அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோர்வை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை (IP Address) வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது? எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (TCP) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு. ஐபி(IP) அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு (TCP & IP) வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை (Data Transfer) உறுதி செய்கின்றன.
தகவல் பாக்கெட் (Data packets)
இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' (Packet Switched Network) என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' (Circuit Switched Network) என அழைக்கப்படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். உதாரணமாக அகலமான திறப்பு கொண்ட கடைகளில், அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால், சிறு சிறு பலகைகளாக செய்து, மேலும் கீழும் அவற்றைக் அசைத்து பொருத்துவதற்காக சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி, பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்து, மீண்டும் கடையைப் பூட்டுகையில் முன்பே கதவில் போடப்பட்ட எண் அல்லது வேறு குறியீடுகளை வைத்து சரியாக பொருத்துவார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன.
ஒவ்வொரு ஹெடரிலும் செக்சம் (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்துவிட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது. இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர் (Internet Service Provider Server), டொமைன் நேம் சர்வர் (Domain Name Server) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல் பாக்கெட்(Data Packets) உங்கள் கம்ப்யூட்டருக்கு கிடைக்கின்றன.
பேஸ்புக் (Facebook)
பேஸ்புக் அதிக அளவில் பயன்படும் ஒரு சமூக தளம். பேஸ்புக் நிறுவனம் Facebook lite என்ற வசதியை Low Band width உள்ளவர்களுக்காக அறிமுகப்படுத்தியது. இது பலரிடையே வரவேற்பை பெற்றது. அதிக ஒப்பனைகள் இல்லாமல் மிக எளிமையாக இருந்ததும் ஒரு காரணம். தற்போது குயஉநடெடிம இந்த வசதியை நீக்குவதாக அறிவித்தது அதை செயல் படுத்தியும்விட்டது. இணைய ஜாம்பவானான கூகிள்-ஐ விட அதிகம் பயன்படுத்தும் ஒரு தளமாக Facebook மாறிவிட்டது. Facebook ல் வரும் விளம்பரங்களை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் க்ளிக் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
ட்விட்டர் (Twitter)
ட்விட்டர் தற்போது இணையத்தில் அதிக அளவில் பயன்படும் ஒரு சமூக தளம். இன்று ட்விட்டர் இல்லை என்றால் கை உடைந்ததை போல பலர் ஆகிவிடுமளவிற்கு அதற்கு அடிமையாகி விட்டனர். இணைய ஜாம்பவானான கூகிள் இதை வாங்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள், அந்த அளவிற்கு குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது. தற்போது இதன் முகப்பு பக்கத்தை மாற்றி, வணிகத்துக்காக இதை பயன் படுத்துபவர்களுக்கு ஆலோசனை பகுதி என்று பல புதிய மாற்றங்களை செய்துள்ளது.
லிங்க்டுஇன் (Linked in)
இதுவும் போஸ்புக் போல வளர்ந்து வரும் ஒரு சமூக வலைதளமாகும். டிசம்பர் 2002 இல் நிறுவப்பட்டு, மே 2003 இல் தொடங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம், ஸ்பானிஷ், டச்சு, ஸ்வேதேச், ரோமானியம், ரஷியன், டர்கிச், ஜப்பனீஸ், செக் மற்றும் போலந்து ஆகிய மொழிகளில் பார்வையிடலாம். இத்தளத்தில் நாம் வேலை செய்யும் பணி பற்றிய தகவல்களை சேமித்து வைத்துக்கொண்டால் தங்களது தகுதிக்கேற்ப பல நிறுவனங் களிலிருந்து வேலைக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தெளிவாகும். 2011ல் பங்குகள் வர்த்தகத்தில் சேர்ந்து 65 சதவீதம் வளர்ச்சியும், 35 மில்லியன் பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.
கூகுள் (Google)
தற்போது இணையத்தில் கூகிள் தான் முன்னணியில் இருக்கிறது. கூகுளின் எண்ணற்ற வசதிகள் நம்மை திக்குமுக்காட வைக்கிறது. அதாவது, கூகுள்+, கூகுள்பஸ், கூகுள்குரோம், கூகுள் ஓஎஸ், கூகுள்மேப்ஸ், கூகுள்சாட், கூகுள்அப்ஸ், கூகுள் ப்ளாக்கர், கூகுள்பிக்நிக், கூகுள்ஜிமெயில், கூகுள் எர்த், கூகுள்யூடியூப், கூகுள் பிகாசோ, கூகுள்டிரைவ், கூகுள் ப்ரபைல், கூகுள் ஆண்ட்ராய்டு, கூகுள் எபிசோடிக், கூகுள் லேப்ஸ், கூகுள் ட்ரேன்சிலேஷன், கூகுள் ஆர்குட் போன்ற அனைத்து அம்சங்களும் இணையதளத்தில் நமக்காக காத்திருக்கிறது. நம் அன்றாட வாழ்வில் பல புதிய யுத்திகளைக் கையாளவும், நம் வாழ்வில் ஒரு அங்கமாக கூகுள் திகழ்கிறது. தினமும் பல பல புதிய மாற்றங்களை செய்து தன்னை புதுப்பித்துக் கொண்டே உள்ளது. குறுகிய காலத்தில் பல மில்லியன் மக்களை தன் பக்கம் இழுத்ததில் கூகிள்க்கு நிகர் கூகிள் தான், எளிமை, வேகம், புதுமை, பாதுகாப்பு இதுவே இதன் தாரக மந்திரம். ஏதாவது ஒன்றை கண்டு பிடித்தால் அதோடு நிறுத்திவிடாமல், மேலும் மேலும் அதில் புதிய உத்திகளை புகுத்துவது மாற்றம் செய்வது என்று அதன் ஆர்வம் சற்றும் குறையாமல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கூகிள் அளவிற்கு பயனாளர்களுக்கு வசதியை செய்து கொடுப்பது போல வேறு எந்த நிறுவனமும் இல்லை.
கூகுள்+ (Google+)
கூகுள் + பற்றி ஏற்கனவே பலர் அறிந்து இருப்பீர்கள். இது எதற்கு என்றால் ஏதாவது ஒரு தளத்தில் நீங்கள் படித்த ஒரு இடுகை (post) நன்றாக இருக்கிறது என்றால் அதை +1 கொடுக்கலாம். (இதற்கு நீங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து இருக்க வேண்டும்) இதைப்போல பலர் கொடுக்கும் போது தரமான லிங்க் (link) என்று கூகுள் தன்னுடைய தேடல் பக்கங்களில் முன்னுரிமை கொடுக்கும். இதன் மூலம் தரமான லிங்க்குகள் (links) நமது தேடலில் முன்னணி வகிக்கும்.
தற்போது இதில் ஒரு புதிய வசதியை சேர்த்துள்ளது. அதாவது நீங்கள் இதை க்ளிக் செய்தால் அதற்கு ஓட்டு விழுவதுடன் நீங்கள் படிக்கும் பக்கத்தை உங்கள் கூகுள் + ல் எளிமையாக பகிரவும் வசதி தருகிறது. தவறுதலாக ஓட்டுப்போட்டு விட்டோம் என்று கருதினால் மறுபடியும் அழுத்தினால் நீங்கி விடும்.
கூகிள் பஸ் (Google buzz) கூகிள் பஸ் தற்போது பலரை கவர்ந்துள்ளது. கூகிள் வழக்கம் போல தனது குறைகளை சரி செய்வதிலும் புதிய வசதிகளை தருவதிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது (தற்போது கம்மன்ட்ஸ் கொலப்சை சரி செய்துள்ளது). இதன் மீது கூறப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டான பயனாளர்களின் விருப்பம் இல்லாமல் அவர்கள் பற்றிய செய்திகளை மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதை தற்போது சரிபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் buzz க்ளிக் செய்தால் உங்கள் அனுமதி வேண்டி நிற்கும். விரைவில் உங்களைப் பற்றி பஸ்ஸில் தேட வேண்டும் என்றால் அதற்காக ஜிமெயில் உள்ளே சென்று தேட வேண்டும் என்ற அவசியமில்லை. http://buzzy.com சென்று உங்கள் பெயரை தேடலில் குறிப்பிட்டால் போதும். உங்கள் பெயர் மற்றும் அதே பெயரில் உள்ள மற்றவர்கள் buzz செய்திகள் அனைத்தையும் பார்க்கலாம்.
கூகிள் செய்தி இல்லாத ஒரு இணையம் என்பது இயலாத காரியம். அந்த அளவிற்கு ஏதாவது ஒன்றை அறிமுகப் படுத்துவது, மேம்படுத்துவது, என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறது. கூகிள் அதிகாரபூர்வமாக கூகிள் பஸ் போஸ்ட் sharing button மற்றும் follow buttonஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குண்டான நிரலை (script) நீங்கள் மிக எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம்.
கூகுள் பிக்நிக் (Google picnik)கூகிள் பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. அதில் தற்போது வாங்கி இருக்கும் நிறுவனம் தான் பிக்நிக். http://www.picnik.com இதன் பயன்பாடு என்னவென்றால், நமது படங்களை ஆன்லைனி லேயே எடிட் செய்யலாம். இதை யாஹூ வின் flickr.com தளம் தான் பயன்படுத்திக்கொண்டு இருந்தது. தற்போது கூகிள் வாங்கி விட்டது. கூகிள் பிரபலம் என்றாலும், அதன் மூலம் எடிட் செய்ய முடியாது. எனவே அதை சரி செய்ய இந்த நிறுவனத்தை வாங்கி உள்ளது.
கூகிள் க்ரோம் (Google Chrome)
கூகிள் க்ரோம் உலவி (Browser) பலரும் பயன்படுத்திக் கொண்டு இருப்பீர்கள், அதன் பயன்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. தற்போது இது பல நீட்சிகளை (நுஒவநவேடைளே) அறிமுகம் செய்து வருகிறது. எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியாத அளவிற்கும், போதும் போதும் என்கிற அளவிற்கும் மேல் வசதிகளை குவித்து விட்டது.
கூகிள் க்ரோம் அண்ட் அடோப் ப்ளாஷ்
(Google Chrome & Adobe Flash)
அடோப்-ப்ளாஷ்-ன் பயன்பாடு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். மென்பொருள் இல்லாமல் நம்மால் இணையத்தில் இருப்பது என்பது இயலாத ஒன்று. பெரும்பாலான தளங்கள் வீடியோவிற்கு முக்கிய தேவையாக ப்ளாஷை தான் வைத்துள்ளன. அதை விட முக்கியமாக இணைய விளையாட்டுகளுக்கு இது அவசியம் தேவை. நாமே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இருக்கும் போது கூகிள் உணராமல் இருக்குமா! எனவே தான் தற்போது அடோபுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. கூகிள் க்ரோம் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.இதில் அடோப் ப்ளாஷை, க்ரோம் உடன் இணைத்து க்ரோம் பயனாளர்களுக்கு இன்னும் பல வசதியை தர கூகிள் திட்டமிட்டுள்ளது.
இனி க்ரோம் நிறுவினாலே உடன் அடோப் ப்ளாஷ்ம் இணைந்து வந்து விடும். அடோப் ப்ளாஷ் தனியாக நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அடோப் ப்ளாஷில் புதிதாக அப்டேட் வந்தால் க்ரோம் உலவியே தானியங்கியாக அப்டேட் செய்து விடும். நீங்கள் இதற்காக எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. தற்போது இந்த வசதி Developer version ல் மட்டுமே வந்துள்ளது. விரைவில் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும்.
க்ரோம் ஓஎஸ் Vs டாக்ஸ்.காம்
(Chrome OS Vs Docs.com)
எதிர்காலத்தில் இணையம் தான் வாழ்க்கை என்றாகி விட்டது, அந்த அளவிற்கு அதன் முக்கியத்துவம் அதிகரித்து விட்டது. இதனை நன்கு உணர்ந்த கூகிள் தன்னுடைய Chrome OSஐ இணையத்தை அடிப்படையாக வைத்து தயாரித்து வருகிறது. இதனால் பலரால் விரும்பி பயன் படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே அனைத்து தகவல்களும் இணையத்தில் என்பதாகும். நீங்கள் உலகத்தின் எந்த இடத்திற்கு சென்றாலும் உங்கள் தகவல்களை, கோப்புகளை பயன்படுத்த முடியும் என்பதே இதன் சிறப்பு. அனைத்து இடத்திலும் google OSஐ பயன்படுத்த இணையம் அவசியம் என்பதை மறக்கக்கூடாது. இதை நன்கு உணர்ந்த மைக்ரோசாப்ட் இதற்கு போட்டியாக ஆரம்பித்துள்ளது தான் Docs.com. இங்கு நமது கோப்புகளை online லையே பார்க்கலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். Docs.com நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை தருகிறது. கூகிள் போல மைக்ரோசாப்ட்டும் இதற்கான பயன்பாட்டை உடனே தந்து விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழைப்பிதழ் மூலம் தருகிறது. எனவே இதன் மூலம் இயல்பாகவே இதன் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது.
கூகிள் வரைபட விளம்பரங்கள்
(Google Maps Advertisement)
விளம்பரத்தில் கூகிள் ஒரு புரட்சியே செய்து விட்டது என்று தான் கூற வேண்டும். எங்கெல்லாம் கண்களை உறுத்தாத விளம்பரம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தி அதிக லாபம் பார்த்துக்கொண்டு வருகிறது. கூகிள் விளம்பரத்தால் பயனடைந்தோர் ஏராளம். கூகிள் தற்போது தான் காட்டும் வரைபடத்தில் நிறுவனங்களின் லோகோவையும் காட்ட தீர்மானித்துள்ளது. அதாவது ஒரு இடத்தில் கடை இருக்கிறது என்றால் அந்த இடத்தில் அவர்களுடைய லோகோவை காட்டுவது, அதற்கு என்று கட்டணம் வசூலித்துக்கொள்வது. இதை தற்போது ஆஸ்திரேலியா வரைபடத்தில் செயல்படுத்தி உள்ளது. அனைத்து நாடுகளிலும் இதை விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. ஏதாவது நிறுவனம் அல்லது வங்கியின் இடம் தெரிய வேண்டும் என்றால் அவர்கள் கூகிளிடம் இதற்கு கட்டணம் செலுத்தினால் அவர்கள் அந்த இடத்தில் இவர்கள் லோகோவை போட்டு விடுவார்கள். வரைபடத்தை பார்ப்பவர்கள் எளிதாக தங்களுக்கு தேவையான இடத்தை கண்டுபிடிக்க முடியும்.
கூகிள்அப்ஸ் (Google Apps)
கூகிள்அப்ஸ் (Google Apps) இது பற்றி சிலர் தெரிந்து இருக்கலாம் பலர் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இது கூகிள் மற்ற நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் பல வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பு. பல நிறுவனங்கள் குறிப்பாக பள்ளி நிறுவனங்கள் தங்கள் மின்னஞ்சல் சேவை உட்பட பல சேவைகளை (Google Apps) நிறுவனத்துடன் செய்து வருகிறது. இதற்கு கூகிள் தனியாக கட்டணம் வசூலிக்கிறது. குறைந்த வசதியுடன் இலவசமாகவும் இதைப் பயன்படுத்தலாம். பணம் பெற்று சேவை தருவதால் மின்னஞ்சல் உட்பட அனைத்து சேவைகளும் தங்கு தடையின்றி 100சதவீதம் உத்திர வாதத்துடன் கிடைக்கும். இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 35 மில்லியன் ஆகிவிட்டது என்று அறிவித்துள்ளது. இதை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்த முடியாது. குறிப்பாக வங்கிகள், காரணம் பாதுகாப்புதான். என்னதான் கூகிள் பாதுகாப்பு தரும் என்றாலும் தங்களை பற்றி விவரங்களை தங்கள் பயனாளர் கள் விவரங்களை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க வங்கிகள் விரும்ப மாட்டார்கள்.
கூகிள் சாட் (Google chat)
கூகிள் பல புதிய வசதிகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகிறது. கூகிள் உரையாடியில் (chat) ஏற்கனவே இதன் வீடியோ மற்றும் பேச்சு உரையாடல் (voice chat) மிகவும் பிரபலமாக உள்ளது. தொலைபேசியில் பேசுவதைவிட இதில் மிகத்தெளிவாக இருக்கும். தற்போது ஃபைல்களை அனுப்பும் வசதியை தந்துள்ளது. இதன் மூலம் படங்கள் ஃபைல்கள் போன்றவற்றை எளிதாக அனுப்பலாம். இந்த வசதி இல்லாமல் இருந்தது பலருக்கு சிரமமாக இருந்தது. தற்போது இந்த வசதி அனைவரிடமும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக நீங்கள் எந்த மென்பொருளையும் தனியாக நிறுவ வேண்டிய அவசியமில்லை.
கூகிள் ப்ளாக்கர் vs வோர்ட் பிரஸ்
Google Blogger vs Wordpress
எப்படி மைக்ரோசாப்ட் விண்டோசை விரும்பாமல் ஒரு சிலர் (பலர்) லினக்ஸ் (Linux) விரும்புகிறார்களோ, அதே போல ப்ளாக்கரை விரும்பாமல் அதன் போட்டி தளமான வோர்ட் பிரஸ்(Wordpress) ஐ பலர் விரும்புகிறார்கள். இதன் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. வழக்கமான ப்ளாக்கர்கள் தவிர இதையே தொழிலாக வேலையாக செய்பவர்கள் வோர்ட் பிரஸ் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். இவர்கள் மூலம் பலர் தற்போது வோர்ட் பிரஸ் க்கு மாறி வருகிறார்கள். இருந்தாலும் இன்னும் பிளாக்கர் தான் முன்னணி வகிக்கிறது. மற்றும் பயன்பாடு எளிதாக உள்ளது. வோர்ட் பிரஸ் தளங்களே ஒரு தொழில்முறை தோற்றத்தைத் (professional look) தருகிறது.
நீங்கள் வேலைக்கு செல்லாமல் இணையத்தின் மூலமாக சம்பாதிப்பவராக இருந்தால் நிச்சயமாக ப்ளாக்கர் தளம் இல்லாமல் வோர்ட் பிரஸ் தளம் தான் வைத்து இருப்பீர்கள். இது ஆங்கில வலை பூக்களுக்கு தான் அதிகம் பொருந்தும். காரணம், அவர்கள் தான் அதிகம் தொழில்நுட்ப தளங்கள் வைத்துள்ளார்கள். மற்றும் அதை விட முக்கிய காரணம். கூகிள் மற்றும் பல நிறுவனங்கள் ஆங்கில வலைப்பூக்களுக்கே விளம்பரங்களை பிரச்சனை இல்லாமல் தருகின்றனர்.
டம்ளர்(Tumblr) ப்ளாக்கர்கள், வோர்ட் பிரஸ் (Blogger, Wordpress) போல வலையுலகில் கலக்கி வரும் இன்னொரு தளம் டம்ளர் (Tumblr) ஆகும். 2007 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. வோர்ட் பிரஸ் (Wordpress)க்கே போட்டியாக உள்ளது. அந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 28 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகிறார்களாம். இணையத்தில் யாரும் நிரந்தரம் இல்லை என்பதற்கு உதாரணமாக டம்ளர் உள்ளது
கூகுளும் Vs சீனாவும்
சீன கம்யூனிச அரசு கடுமையான கட்டுப்பாடுகளை கூகிள்க்கு விதித்ததாலும், பல ஹேக்கர்கள் கூகிள் தளத்தில் "விளையாடியதால்" லும் சீனாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்து விட்டது. சீனாவில் கூகிள் தேடுதலை விட, அவர்களுடைய சொந்த நாட்டுன் தேடுதல் தளத்தை (Search Engine) தான் மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அவர்களும், இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. கூகிளுடன் பிரபல கள பெயர் - டொமைன் நேம் (domain name) வழங்கியான Godaddy.com சீனாவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் இனிமேல் .cn வழங்கு வதை நிறுத்திக்கொள்ள போவதாக அறிவித்து விட்டது. சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வில்லை என்றால், தற்போது இல்லை என்றாலும் பின்னாளில் இதற்காக கண்டிப்பாக வருத்தப்படும். இதனால் இந்தியாவிற்குத் தான் ரொம்ப லாபம்.
கூகிள் மின்னஞ்சல் பாதுகாப்பு
கூகிள் தனது மின்னஞ்சலுக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்க நினைக்கிறது. அதை அவ்வப்போது செயல்படுத்தியும் வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய வசதி என்னவென்றால், நமது மின்னஞ்சலை வேறு வேறு நாட்டிலிருந்து யாராவது பயன்படுத்தினால், தற்போது இந்த நாட்டில் இருந்து இதை யார் பயன்படுத்தி உள்ளார்கள் என்று கூறும் (இந்த வசதி ஏற்கனவே Facebookல் உள்ளது). நாம் எங்கும் செல்ல வில்லை இடம் மாறவில்லை என்றால், யாரோ நம் மின்னஞ்சலை ஹேக் செய்கிறார்கள் என்று புரிந்து உடனடி யாக நமது கடவுச்சொல்லை மாற்றி விடலாம். ஒருவேளை நீங்கள் வேறு நாட்டிற்கு சென்று இருந்தால் இந்த அறிவிப்பை ஒதுக்கி விடலாம்.
கூகுள்+ vs பேஸ்புக்
கூகுள்+ வந்ததும், பேஸ்புக் (Facebook)ல் தினம் தினம் புதிய வசதிகளை கொடுத்து வருகிறது. இவர்கள் சண்டையால் இதைப் பயன்படுத்துபவர்களுக்கு ரொம்ப நல்லதாக உள்ளது. புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. போட்டி இருந்தால் தான் எவரும் சிறப்பான சேவைகளைத் தருவார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். தற்போது தரும் சேவைகளை எல்லாம் பேஸ்புக் (Facebook) நினைத்து இருந்தால் எப்போதோ தந்து இருக்க முடியும். எப்போதுமே போட்டி இருந்தால் தான் எதிலும் தரம் இருக்கும் என்பதை அனைவரும் உணரலாம்.
முன்பு குழப்பமாக இருந்த பல விஷயங்கள் தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. கூகுள் பயன்படுத்துபவர்கள் சமீபமாக பல மாற்றங்களை கவனித்து இருக்கலாம். இவை அனைத்துமே கூகுள்+ வந்த பிறகு வந்த மாற்றங்கள்தான். தற்போது தனித்துவ (Privacy) முறையில் மாற்றத்தை செய்துள்ளது. இதன் மூலம் (எவரும் பார்க்க முடியும்) நண்பர்கள் என்று நமது வசதிக்கேற்ப ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யலாம். அதோடு படங்களை நம்முடைய ஃப்ரொபைலில் இனி யாராவது செய்ய வேண்டும் என்றால், நம்முடைய அனுமதி பெறவேண்டும். இதன் மூலம் நமக்கு ஏற்படும் தர்மசங்கடங்களை தவிர்க்கலாம். 1 ட்ரில்லியன் (Facebook) பக்கங்கள் (ஒரு மாதத்தில்) இணையத்தில் பார்க்கப்பட்டு சாதனை புரிந்து இருக்கிறது.
கூகுள்+ போலியாக பெயர்
கூகுள்+ ல் போலியாக பெயர் வைத்து இருந்தவர்கள் பலரது கணக்குகளை கூகுள் முடக்கி விட்டது. உண்மையான பெயர் உள்ளவர்கள் மட்டுமே தற்போது கூகுள்+ ல் கணக்கு துவங்க முடியும். வேறு பெயர் வைத்து துவங்கினாலும் ஒன்றும் பிரச்சனை இருக்காது. ஆனால் பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டால் உங்களிடம் கூறாமல் கணக்கு முடக்கப்படும். இது குறித்து பல சர்ச்சைகள் உள்ளது. ஆனால் கூகுள் சேர்மன் Eric Schmidt உண்மையான பெயரோட இருந்தால் இருங்கள் என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கு சில விதிவிலக்குகளுடன் கூடிய விதிமுறைகளை கூகுள் கூறியுள்ளது.
தற்போது பிரபலங்களுக்கு ட்விட்டர் (twitter) போல. இவர் உண்மையான ஆளு தான், உண்மையான பெயர் தான் என்று கூறும் வசதியை கூகுள்+ ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒபாமா ஒரு கணக்கு வைத்து இருந்தால், இவர்தான் உண்மையான ஒபாமா என்று கூகுள் உறுதிப்படுத்தி இருக்கும். இவர் பெயரை பயன்படுத்தி தவறு செய்ய முடியாது.
Inserting Images: இதன் பயன் என்னவென்றால் படங்களை நமது விருப்பப்படி மின்னஞ்சல் அனுப்பும் போது அமைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பார்வர்ட் மின்னஞ்சல்களுக்கு மிகவும் பயன் தரும். படத்தை பற்றி விளக்கம் பிறகு படம், இதே போல விளக்கங்கள் கூறி படங்களை இணைக்கலாம், இல்லை என்றால் மொத்த படங்களும் இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும். அதன் விளக்கங்கள் எதற்கு என்று தெரியாமல் அணிவகுத்து இருக்கும்.
Default Reply to all: ஒரு சிலர் குழுவாக (தனி குழும மின்னஞ்சல் இல்லாமல்) அடிக்கடி தனது நண்பர்களுக்குள் மின்னஞ்சல் செய்பவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இதை இணைத்தால் Reply to all என்பது வலது ஓரத்தில் மேலே வந்து விடும் (வழக்கமாக இருக்கும் Reply ம் இருக்கும்) இதனால் எளிதாக அனைவருக்கும் அனுப்பலாம்.
Hide Unread Counts: முன்பெல்லாம் மின்னஞ்சல் வருவது குறைவு. தற்போதெல்லாம் நண்பர்கள் மின்னஞ்சல், குழும மின்னஞ்சல், பல தளங்களில் சப்க்ரைப் (subscribe) செய்து இருந்தால் அந்த மின்னஞ்சல்கள் என ஏகப்பட்டது வருகிறது. இது எத்தனை வந்துள்ளது என்ற எண்ணிக்கை Inboxல் தெரியும், இது உறுத்தலாக தெரிந்தால் இந்த எண்ணிக்கையை இதை இணைப்பதின் மூலம் மறைக்கலாம்.
Right side chat:கூகிள் உரையாடியில் (chat)மறைந்து இருக்கும் (Invisible mode) வசதி இல்லை, ஆனால் கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் இது உள்ளது. இதனால் பலர் இந்த வசதியை பயன்படுத்த கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் தான் இணைந்து இருப்பார்கள். இது வழக்கமாக இடது புறத்தில் இருக்கும், அதனுடன் டுயடெநகள் இருப்பதால் ரொம்ப கீழே இருக்கும். இதை தவிர்க்க இதை இணைத்தால் உரையாடி பகுதி வலது புறத்தில் மாறி விடும்.
Pictures in chat: இதை இணைப்பதின் மூலம் நம்முடன் உரையாடுபவர் படம் (அவர்கள் இணைத்து இருந்தால்) நமக்கு தெரியும்.
Mark as read: தேவையற்ற மின்னஞ்சல்கள் பல நமக்கு வரும் அல்லது அந்த மின்னஞ்சலில் என்ன இருக்கும் என்று முன்பே தெரியும். எனவே படிக்காத மின்னஞ்சல்களாக (unread mails) இருப்பது எரிச்சலை தரலாம். எனவே அவை அனைத்தையும் மொத்தமாக தேர்வு செய்து Mark as read பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்தும் படிக்கப்பட்ட மின்னஞ்சல்களாக (read) மாறி விடும்.
You Tube Previews in mail : இது நமக்கு You Tube சுட்டி (link) மின்னஞ்சலில் வந்தால் அதன் முன்னோட்டத்தை நமக்கு மின்னஞ்சலின் கீழ் பகுதியில் சிறிய அளவில் காட்டும். நாம் மவுஸை எடுத்துச் (mouse) செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதைப்போல வசதி ஞைஉயளய மற்றும் Flickr க்கு உண்டு.
Undo Send: இது மிகவும் பயனுள்ள ஒன்று, நாம் எப்போதும் அவசரமாக ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மாற்றி தவறுதலாக மற்ற ஒருவருக்கு அனுப்பி விடுவோம். இதற்கு தான் கூகிள் தரும் இந்த வசதி. நாம் மின்னஞ்சல் அனுப்பிய பிறகு அதை கூகிள் அனுப்பாமல் சில நொடிகள் வைத்து இருக்கும், அதற்குள் நம் தவறை உணர்ந்து விட்டால் Undo Send ஐ அழுத்துவதன் மூலம் அதை அனுப்பாமல் தவிர்க்கலாம்.
ஜிமெயில் (Gmail)
மின்னஞ்சலுக்கான அணுகுமுறை
மின்னஞ்சலானது மிக இயல்பான தாகவும், அதிக திறனுடனும், பயனுள்ள தாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டது.
அதிக இடம், இலவச சேமிப்பிடம். குறைந்த ஸ்பேம், தேவையற்ற செய்திகளை உங்கள் இன்பாக்ஸிற்கு வெளியே வைக்கும். விரைவான தேடல், தேடலைப் பயன்படுத்தி, எப்பொழுது அனுப்பியது அல்லது பெற்றது என்ற கவலையின்றி உங்களுக்கு தேவையான செய்தியைக் கண்டறியலாம்.
ஜிமெயில் ஒரு அற்புதமான மின்னஞ்சல் சேவை என்பது இதைப்பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். பயன் படுத்தாதவர்கள் கூட இது பற்றி பல விஷயங்கள் தெரிந்து வைத்து இருப்பார்கள்.
இதில் கூறப்படும் சேவைகள்/வசதிகள் சில நீங்கள் தற்போது பயன்படுத்தும் மின்னஞ்சலில் (Yahoo , Hotmail , Rediff) இருக்கலாம். இருப்பினும் இது போல அனைத்து வசதிகளும் நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சலில் இருக்காது என்பதை உறுதியாகக் கூற முடியும். இதில் உள்ள முக்கிய பயன்கள்.
வேகம் (SPEED)
எப்போதுமே நாம் பயன்படுத்தும் மென்பொருளா கட்டும், கணினியாகட்டும், வேகமாக இருந்தால் தான் நமக்கும் பயன்படுத்த விருப்பம் இருக்கும். இல்லை என்றால் ஒன்றை க்ளிக் செய்து விட்டு அது திறப்பதற்க்காக காத்துக்கொண்டு இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனை ஜிமெயிலில் கிடையாது. தேவையற்ற விஷயங்களை நீக்கி, மல்டிமீடியா சம்மந்தப்பட்ட விஷயங்களை குறைத்து, எவ்வளவு விரைவாக திறக்க முடியுமோ அந்தளவு துள்ளியமாக உதவி செய்கிறது. ஜிமெயில் அஜக்ஸ் (Ajax) என்ற தொழில்நுட்ப முறையை சிறப்பாக பயன்படுத்துகிறது. எனவே அதனுடைய வேகம் மற்ற மின்னஞ்சல்களை விட அதிவேகத்தில் உள்ளது. புது மின்னஞ்சல் வந்தாலோ, Reply செய்தாலோ, Forward செய்தாலோ தாமதம் செய்யாமல் அடுத்த நொடியே நடக்கும். மற்ற மின்னஞ்சல்களில் சில நொடிகளுக்கு பிறகே எதுவும் நடக்கும்.
எளிமை (SIMPLICITY)
கூகுள் என்றாலே எளிமை தான். இதை கூகுள் தளத்தின் முகப்புப் பகுதியில் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இதையே தான் தன்னுடைய ஜிமெயில் சேவைக்கும் பின்பற்றுகிறது. அனைத்தையும் நீக்கி தேவைப்படும் நேரங்களில் மட்டும் அந்த வசதி நமக்கு தெரியும்படி மாற்றி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக இடது புறம் Inbox, sent mail, Compose mail மட்டுமே இருக்கும் மற்றவை தேவை என்றால் அங்கே நமது மவுசை கொண்டு சென்றால் போதும் அவை தெரியும்படி அமைத்து இருப்பார்கள். அது போல Delete, Forward spam என்று எதுவும் முகப்பில் இருக்காது. நீங்கள் ஒரு மின்னஞ்சலை தேர்வு செய்தால் மட்டுமே அவை தெரியும். காரணம் தேர்வு செய்யாமல் நாம் Delete, forward அல்லது வேறு லேபிள் செய்ய முடியாது. அப்புறம் எதற்கு அவை தெரிய வேண்டும். பல முறை யோசித்து செய்த ஏற்பாடு அனைவரையும் மலைக்கவைக்கிறது.
ஸ்பாம் (Spam)
மிகப்பெரிய பிரச்சனை இது தான். நமக்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் இருந்து எல்லாம் மின்னஞ்சல் வரும். லாட்டரி பரிசு சீட்டு விழுந்ததாக, உங்கள் வங்கி விவரங்களைக் கேட்டு, வயாகரா மாத்திரை வாங்கக்கூறி, ஆபாச மின்னஞ்சல்கள் என்று வந்து குவியும். இவை ஜிமெயிலில் கிடையாது. அல்லது மிகக் குறைவான அளவு வருகிறது. மிகத் திறமையான தொழில்நுட்ப முறையில் இவற்றை வடிகட்டி விடும். இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. விஷயம் தெரிந்தவர்கள் ஓரளவு சமாளிக்கலாம். ஒன்றுமே தெரியாதவர்கள் ஸ்பாம் விஷயத்தில் ஏமாற அதிக வாய்ப்புள்ளது. இதைவிட முக்கியமான ஒன்று. நம் அனுமதி இல்லாமலே நாம் அனுப்பவது போல வயாகரா விளம்பரங்கள் நம்முடைய உடிவேயஉவல் உள்ளவர்களுக்கு சென்று விடும். இதை சந்திக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக யாஹூ வில் இருந்து அதிகம் வரும்.
போல்டர் / லேபிள் (Folder/Label)
யாஹூல் இருந்த போல்டர் வசதி ரொம்ப உபயோகமாக இருந்தது. மின்னஞ்சல்களை பிரிக்க எளிதாக இருந்தது. ஜிமெயிலில் போல்டர் வசதி இல்லை. ஆனால் அதற்கு இணையாக லேபிள் வசதி உள்ளது. இதுவும் போல்டர் போலத் தான். ஆனால் வேறு மாதிரி. ஜிமெயில் பயன்படுத்திய பிறகு தான் இது எவ்வளவு எளிமை, இதனால் எப்படி எளிதாக அனைத்தையும் பிரிக்க முடியும் என்று புரியும்.
தேடல் (Search)
கூகுள் என்றால் தேடல் தான் பிரபலம். தனது ஜிமெயிலிலும் இதை உட்புகுத்தியுள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையான மின்னஞ்சல்களை நொடியில் கண்டறிய முடியும். அட்வான்ஸ் தேடுதல் முறையில் தேடுதலை இன்னும் எளிமை ஆக்குகிறது. கூகுள்க்கு பிடிக்காத ஒரே வார்த்தை சிரமம். சங்கடமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியும். நாம் சில நேரங்களில் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை தவறுதலாக மற்றொருவருக்கு அனுப்பி விடுவோம். SEND பட்டனை அழுத்திய பிறகே உணர்வோம் ஆனால் மின்னஞ்சல் சென்று விடும். அதே போல அவசரமாக தட்டச்சு செய்யும் போது சில விஷயங்களை மறந்து அனுப்பி இருப்போம். இதைத் தடுக்க நீங்கள் 30 நொடி வரை இதை ஜிமெயிலில் தாமதிக்க வைக்கலாம். அதாவது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியும் 30 நொடி வரை செல்லாமல் இருக்கும். உங்களுக்கு காத்திருக்க தேவையில்லை என்றால் Inbox அல்லது வேறு எதை க்ளிக் செய்தாலும் உடனே சென்று விடும். இதன் மூலம் தர்மசங்கடமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியும்.
குழும மின்னஞ்சல்கள் (மெயில் லூப்)
ஜிமெயிலில் உள்ள ஒரு அற்புதமான வசதி. இது ஒன்றிக்காகவே இதைப் பயன்படுத்துபவர்கள் பலர். இதன் வசதி என்னவென்றால் குழும மின்னஞ்சல்கள் ஒரே தலைப்பில் வரும் போது தனித்தனியாக இல்லாமல், ஒரே மின்னஞ்சலிலேயே ஒன்று இரண்டு என்று சேர்ந்து கொண்டு இருக்கும். இதன் மூலம் எடுத்துக்காட்டாக பத்து பேர் இந்தத் தலைப்பில் அனுப்பி இருந்தால், ஒரே பக்கத்தில் ஒரே முறையில் படிக்க முடியும். நமக்கு வரிசையாக படிக்க எளிதாக இருக்கும். ஒவ்வொன்றாக திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதனால் உங்கள் மின்னஞ்சல் எண்ணிக்கையின் அளவு குறைவாகத் தெரியும். இதே யாஹூ, ஹாட்மெயில் என்றால் குழும மின்னஞ்சல்களில் இருந்து மின்னஞ்சல்கள் வந்து குப்பை மாதிரி சேர்ந்து குவிந்து விடும்.
ஜிமெயில் மீட்டர்
இந்த வசதி தற்போது தான் கொண்டு வந்துள்ளார்கள். இதன் மூலம் நாம் மாதாமாதாம் என்ன செய்து இருக்கிறோம் என்ற அறிக்கையை தானியங்கியாகப் பெற முடியும். அதாவது எத்தனை மின்னஞ்சல் வந்துள்ளது, யாருக்கு அதிகம் அனுப்பி இருக்கிறோம், யார் உங்களுக்கு அதிகம் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்கள், எந்த நேரத்தில் மின்னஞ்சல் பயன்பாடு அதிகம் உள்ளது என்று விவரமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் கிராப் (Graph) முறையிலும் தகவல்கள் தரப்படும். எனவே புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். நாம் விரும்பினால் வருடத்திற்கு ஒரு முறை கூட விவரங்கள் பெற முடியும். எடுத்துக்காட்டாக 2005 ல் இருந்து எவ்வளவு மின்னஞ்சல்கள் வந்துள்ளன என்று மேற்கூறிய முறையில் பார்க்க முடியும். ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கே பலருக்கு இந்த வசதி இருப்பது தெரியாது.
பாதுகாப்பு
எல்லாவற்றையும் விட முக்கியமானது பாதுகாப்பு. நீங்கள் எதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இதை உங்களால் மறுக்க முடியாது. பாதுகாப்பில் நம்மை தயார் படுத்துவதில் ஜிமெயில்க்கு நிகர் எந்த மின்னஞ்சல் நிறுவனமும் இருக்க முடியாது. நீங்கள் வழக்கமாக ஒரு இடத்தில் லாகின் செய்கிறீர்கள் என்றால் உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து பயன்படுத்திக்கொண்டு இருந்தால் நம்மை உஷார் படுத்தும். வேறு IP-யில் இருந்து லாகின் செய்து இருக்கிறார்கள் என்று.
இன்டர்நெட் சென்டர் செல்கிறீர்கள். Login லாகின் செய்து விட்டு மறந்து லாஃகவுட் Logout செய்யாமல் வந்து விடுகிறீர்கள். உடனே வேறு இடத்தில் லாகின் செய்து மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள அமர்வுகளை (session) நீங்கள் லாஃகவுட் செய்து விடலாம். திரும்ப அங்கேயே சென்று இதைச் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. அதே போல Account Activity யில் சென்று எந்தெந்த IP யில் இருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் உடனடியாக நமது கடவுச்சொல்லை Password மாற்றி விடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் கணக்கு திறந்து இருந்தால் நமக்கு எச்சரிக்கைப்படுத்தும். நாட்டின் பெயருடன் இருப்பதால் நம்மால் எளிதாக அறிய முடியும்.
இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!
2 step verification என்ற வசதி இருக்கிறது. இது தான் முதன்மை வசதி ஆகும். இது என்ன வசதி என்றால் வழக்கமாக நாம் எல்லோரும் கடவுச்சொல் (Password) கொடுத்து உள்ளே செல்வோம். இந்த வசதியை செயல்படுத்தி விட்டால் அதன் பிறகு நமக்கு ஒரு SMS வரும் அதை இதில் கொடுத்த பிறகு தான் நுழைய முடியும். இதன் மூலம் உங்கள் (Password) கடவுச்சொல்லை தெரிந்து கொண்டாலும், உங்கள் SMS பார்க்க முடியவில்லை என்றால் யாரும் ஹேக் செய்ய முடியாது. உதாரணத்திற்கு உங்கள் வங்கிக்கணக்கில் நுழைய சில வங்கிகள் SMS மூலம் code அனுப்புவார்கள் அதே முறை தான் இதற்கும்.
ஹேக் என்பது ஒரு திறமையான செயல். உங்கள் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தம் இல்லை. உங்களை யாரும் ஹேக் செய்ய முயற்சிக்கவில்லை என்று அர்த்தம். இந்த இரட்டை அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஹேக் செய்பவர்கள் இருப்பார்கள். விக்கி லீக்ஸ் அசாங்கே பற்றி எல்லாம் தெரிந்து இருப்பீர்கள். கடுமையான பாதுகாப்பு களைக் கொண்ட பல இடங்களையே ஆட்டிப்படைத்தவர்கள். எப்படி இருந்தாலும் ஹேக் செய்து விடுவார்கள் என்று அசட்டையாக இருப்பதை விட இது போல பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொள்வது நமக்கு நல்லது. ஹேக் வாய்ப்புகளை குறைக்கும்.
மின்னஞ்சலில் கூடுதல் வசதி
நீங்கள் ஒரு மின்னஞ்சல் தட்டச்சு செய்யும் போது உங்களுடைய ஐேடெஒ செல்ல வேண்டும் என்றால் அதாவது வேறு மின்னஞ்சலை சரி பார்க்க வேண்டும் என்றால் இதை னுசயகவ ல் போட்டு விட்டு தான் போக முடியும், ஒரே சமயத்தில் செய்ய முடியாது. இதற்கு கூகிள் தரும் புதிய வசதி தான் Fast Window. நீங்கள் புதிய மின்னஞ்சல் தட்டச்சு செய்யும் போதே உங்கள் Inbox செல்ல விரும்பினால் நீங்கள் கம்போஸ் செய்யும் ஜன்னலில் வலது பக்கம் இரு சிறு பெட்டி இருக்கும் அதை க்ளிக் செய்தால் உங்களுடைய தற்போதைய ஜன்னல் (compose window) தனியாகவும் உங்கள் மின்னஞ்சல் முகப்பு பக்கம் அதாவது Inbox பகுதி முழுமையாகவும் வந்து விடும், பிறகு உங்களுக்கு தேவையான தகவல்களை அங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்.
கூகுள்ப்ரோபைல் (Google Profile)
கூகுள் தன்னுடைய பயனாளர்கள் ப்ரோபைலை மேம்படுத்தியுள்ளது. நம் விருப்பப்படி எளிதாக மாற்றிக்கொள்ள வசதி ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு பழைய வடிவமைப்பை விட இது அழகாகவும் உள்ளது.
பழைய மின்னஞ்சல்களை ஜிமெயில்க்கு கொண்டு வருவது?
இது மிக மிக அடிப்படையானது. ஏனென்றால் அனைத்தையும் மாற்றுவது என்பது ஒரு அலுவலகத்தை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு மாற்றுவதற்கு நிகரானது. முகவரி, தொலைபேசி எண், பொருட்கள், கணினி, நெட்வொர்க் என்று அனைத்தையும் மாற்றம் செய்வது போல சிரமமான பணி.
ஜிமெயில் இதற்காகவே ஒரு வசதி தந்துள்ளது. உங்களுடைய தற்போதைய மின்னஞ்சல் முழுவதையும் ஒன்று விடாமல் உங்கள் புதிய ஜிமெயில் கணக்கில் இம்போர்ட் செய்ய முடியும், அதாவது எந்த வித மாற்றமுமில்லாமல் தேதி, நேரம், உட்பட. மிக மிக எளிதானது. இதை தொடங்கி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். உங்களின் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். முடிந்தவுடன் உங்களுக்கு தானியங்கியாக அறிவிப்பு வரும். இதில் மின்னஞ்சல் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள் முகவரிகளையும் இதுபோல செய்து விடலாம். உங்கள் மின்னஞ்சல்கள் ஒரு லேபிளில் வகைப்படுத்தப்படும் எடுத்துக்காட்டு contact@gmail.com இதன் மூலம் நீங்கள் பழைய முகவரி மின்னஞ்சல்களை எளிதாக இனம் காண முடியும்.
பழைய மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவித்து உபயோகிக்க தொடங்குவது:
உங்களுடைய புதிய மின்னஞ்சல் கணக்கில் இருந்து உங்கள் contact ல் உள்ள அனைவருக்கும் நான் இந்த புதிய முகவரிக்கு மாறி விட்டேன். எனவே உங்கள் contact ல் இந்த முகவரியை அப்டேட் செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விடுங்கள்.
ஜிமெயில்க்கு மாறினாலும் தொடர்ந்து பழைய மின்னஞ்சலுக்கே அனுப்புவார்களே?
இது நடைமுறை பிரச்சனை தான். நீங்கள் ஜிமெயில்க்கு மாறிய பிறகு Auto Reply / Vacation response Enable செய்து விடலாம். அதிக பட்சம் ஒரு மாதம் உங்கள் பழைய மின்னஞ்சல் கணக்கில் பதில் அளிக்கலாம். அது கூட இனி இதற்கு அனுப்பாதீர்கள்! என்னுடைய புதிய ஜிமெயில் ஐடிக்கு அனுப்பி விடுங்கள், என்று கூறி விடுங்கள். அப்புறமும் ஒரு சிலர் தங்கள் contact அப்டேட் செய்யாமல் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். அதற்கு பதில் தராதீர்கள். பின் அவர்களே அதற்கு அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள். நீங்கள் பதில் அனுப்பிக்கொண்டு இருந்தால், இதிலேயே தான் வந்து கொண்டு இருக்கும். எப்படி உங்கள் மொபைல் எண்ணை மாற்றினால் நீங்கள் அறிவித்தும் உங்கள் பழைய எண்ணையே தொடர்பு கொள்வார்கள். அது போலத் தான். எனவே இந்தத் தவறை செய்யாதீர்கள். இதோடு மிக முக்கியமான விஷயம் பல்வேறு இடங்களில் (வங்கி, மொபைல் நிறுவனம்) உங்களுடைய பழைய மின்னஞ்சல் முகவரியே இருக்கும். இங்கே சென்று உங்கள் புது முகவரியை மறக்காமல் அப்டேட் செய்ய வேண்டும்.
மேற்கூறியவை எல்லாம் மிக முக்கியமான வசதிகள் மட்டுமே. இவை அல்லாமல் ஏராளமான வசதிகளை ஜிமெயில் தருகிறது. வாரம் ஒரு புது வசதி வந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு சிறப்புள்ள ஜிமெயிலை பயன்படுத்தி புதிய வசதிகளை, தொழில்நுட்பங்களை அனுபவியுங்கள். இது ஜிமெயில் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமல்ல பயன் படுத்துகிறவர்களுக்குக் கூட, காரணம் பலர் இதன் அருமை தெரியாமலே பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிறப்பான மின்னஞ்சலை பயன்படுத்திக்கொண்டு இருக் கிறோம் என்று தெரிந்து பயன்படுத்துங்கள். பணம் கொடுத் தால் கூட இவ்வளவு வசதி தருவார்களா என்பது சந்தேகம் தான்.
யூ டியூப் (YouTube)
இணையத்தை பயன்படுத்துபவர்களில் யூடியூப் (YouTube) பற்றி தெரியாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு. தற்போது தினமும் ஒரு பில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த தளம் துவங்கப்பட்டது ஏப்ரல் 23, 2005அன்று. இந்த வீடியோ உடன், இது வரை பல கோடி பேர் இதை பார்த்துள்ளனர். அதன் பிறகு 2005 அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக துவங்கப்பட்டது. இதன் பிறகு 2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்ததளத்தை கூகிள் கையகப்படுத்தியது. தற்போது கூகிளின் மார்க்கெட் தந்திரத்தால் பணம் கொழிக்கும் ஒரு தளமாக உள்ளது.
யூடியூப் இல்லாத இணையத்தை நினைத்து பார்க்கவே முடியாது, என்ற நிலையில் இதன் பயன்பாடு நிறைந்துள்ளது. உலகளவில் பாண்ட் விட்த்தை (Band Width) ஐ அதிகம் எடுத்துகொள்ளும் ஒரு தளமாகவும், அதிகளவில் பயனாளர் களால் பயன் படுத்தப்படும் தளமாகவும் புகழ்பரப்பி வருகிறது.
யூடியூப்-ல் உள்ள காணொளிகளை தரவிறக்கம் (Download) செய்ய எளிதான இலவசமான மென்பொருள் YouTube Downloader உங்களுக்கு பிடித்த காணொளியை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், அந்த காணொளியின் முகவரியை காப்பி செய்து இந்த மென்பொருள் முகவரி இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே கொடுத்தால் போதுமானது. இதை நீங்கள் உங்களுக்கு பிடித்த ஃபார்மட்டில் (AVI, WMV, MP3, MP4, 3GP) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையத்தில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் இருக்கும் என்றால் அதில் குறிப்பிடத்தக்க இடம் யூடியூப்க்கு நிச்சயம் உண்டு. கூகிள் இதை கையகப்படுத்தியதில் இருந்து இதை சிறப்பாக கையாண்டு வருகிறது. இதன் மூலம் விளம்பரத்தில் பெருமளவு சம்பாதித்துக்கொண்டுள்ளது, உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு சூடான செய்தி என்றாலும் உடனே இதில் பயனாளர் களால் ஏற்றப்படும். இதில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். சமீபத்தில் ஐபிஎல் கிரிகெட் (IPL Criket) போட்டிகளை கூகிள் தனது தளத்தில் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
கூகிள் என்றாலே அது மாற்றம் தான். அதற்கேற்ப தற்போது தன் வடிவமைப்பிலும் தரத்திலும் சில மாற்றங்களை செய்துள்ளது, சரியாக கவனித்தவர்கள் உணர்ந்து இருப்பார்கள். அனுமதி இல்லாத வீடியோக்களை ஏற்றுவது தொடர்ந்தால் அந்த யூடியூப்-ஐ முடக்கி விடுகிறார்கள். இது முன்பே இருந்தாலும், தற்போது இதை கண்டறிவதில் தொழில் நுட்பத்தை அதிகம் பயன் படுத்துகிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு வீடியோ ஃபைல் ஏற்றப்பட்ட பிறகு அது பப்ளிஷ் ஆக நீண்ட நேரம் எடுக்கும். தற்போது நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. வீடியோ சப்ஸ்க்ரைப் செய்யவும், வீடியோ பற்றிய தகவலை படிக்கவும், (முன்பு இது வலது பக்கம் மேலே இருந்தது. தற்போது வீடியோ அடியி லேயே கொடுக்கப்பட்டுள்ளது) வசதி ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஓட்டு போட 5 நட்ஷட்திரங்கள் இருந்தது. தற்போது இது விரல் போன்று (Thump Style) அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய முறையை விட ஓட்டளிக்க எளிதாக உள்ளது.
எபிசோடிக் (www.episodic.com)
கூகிள் சமீபத்தில் எபிசோடிக் (www.episodic.com) என்ற வீடியோ தளத்தை கையகப்படுத்தியுள்ளது. தற்போது அதன் வீச்சு என்னவென்பதை நாம் அறிவோம். இணையத்தில் வீடியோவிற்கு இருக்கும் சிறப்பான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூகுள் இந்த தளத்தையும் வாங்கியுள்ளது.
முன்பு ஒவ்வொரு படமாக தேர்வு செய்து அப்லோடு செய்ய வேண்டும். (Easy Up loader இல்லாமல்) தற்போது எத்தனை படங்களை வேண்டும் என்றாலும் மொத்தமாக தேர்வு செய்து இணைக்கலாம். இது ரொம்ப எளிதாக உள்ளது.
கூகுள் டிரைவ்(Google Drive)
கூகுள் தனது அடுத்த முயற்சியாக கூகுள் டிரைவ் (Google Drive)வசதியை ஆரம்பித்துள்ளது. இணையத்தில் உலவிக்கொண்டுள்ள முக்கிய செய்தியே கூகுள் டிரைவ்தான்.
தற்போது இணையம் அனைவரிடையே மிக வேகமாக பிரபலமாகி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எப்போதுமே ஒரு விஷயம் பிரபலம் ஆகிறது என்றால் அதனோடு தொடர்புடைய விஷயங்களும் வளர்ச்சியடைந்து வரும். எடுத்துக்காட்டாக அனிமேசன் 3D கிராபிக்ஸ் மற்றும் சினிமாத்துறை என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. இவை எல்லாம் வரும் என்று கருப்பு வெள்ளை காலங்களில் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
இது போல இணையத்திலும் கணக்கில் அடங்கா தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இன்றைய புதிய வசதி ஒரு வருடத்தில் பழையதாகி விடுகிறது. அந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில்நுட்பம் தான்
கிளவுட் கம்ப்யூட்டிங்.
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்பது நமது தகவல்களை ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு அதை நாம் எந்த இடத்தில் இருந்தும் இணையம் அல்லது வழக்கமான நமது நெட்வொர்க் மூலம் பயன்படுத்தும் ஒரு வசதியாகும். இதன் மூலம் எந்த இடத்தில் இருந்து வேண்டும் என்றாலும் நாம் தகவல்களை பெற முடியும்.
எவ்வாறு நமது மின்னஞ்சலை எங்கே இருந்து வேண்டும் என்றாலும் நம்மால் எந்த வித சிக்கலும் இல்லாமல் நமது தகவல்கள் யாஹூ, ஜிமெயில், ஹாட்மெயில் போன்ற வழங்கிகளில்(server) பயன்படுத்த முடியுமோ அதேவாறு.
கொஞ்சம் பெரிய அளவில் அதாவது உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் இது போன்ற இடத்தில் இருந்தால்! இது தான் மேககணினி (கிளவுட் கம்ப்யூட்டிங்). உங்கள் தகவல்கள் அனைத்தும் எடுத்துக் காட்டாக கூகுள் வழங்கியில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் இருந்தால் போதும். உங்கள் தகவல்களைப் பெற முடியும். அதாவது உங்கள் வீட்டில் இருக்கும்போது தான் இதை பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இல்லை. எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் கோப்பை (file) அப்டேட் செய்ய முடியும்.
உங்களில் ஒரு சிலர் சில முக்கிய கோப்புகளை மின்னஞ் சல்களிலோ அல்லது வேறு தளங்களிலோ சேமித்து வைத்து இருப்பீர்கள். அவசரமாக தேவைப்படும் போது பயன்படுத்து வதற்காக. உதாரணத்திற்கு உங்கள் பிறப்பு சான்றிதழ் அவசரமாக தேவைப்படுகிறது. ஆனால் அதனுடைய கோப்பு (file) உங்கள் வீட்டு கணினியில் இருக்கிறது. ஆனால் வீட்டிற்கு சென்று எடுத்து வரும் அளவிற்கு நேரமில்லை அல்லது நீங்கள் தொலைவில் இருக்கிறீர்கள் என்ன செய்வது? இதை நீங்கள் கூகுள் பிகாசாவிலோ அல்லது வேறு இடத்திலோ சேமித்து வைத்து இருந்தால் உடனடியாக உங்களால் அருகில் உள்ள ஏதாவது ஒரு பிரவுசிங் சென்டர் சென்று பிரிண்ட் செய்து பயன்படுத்த முடியும். எவ்வளவு நேரம் மிச்சம்! அதோடு வேலையும் விரைவாக முடியும்.
முன்பு இணையத்தின் வேகத்தின் அளவு மிக மிக மெதுவாக இருந்தது. ஆனால் தற்போது இதன் வேகம் அதிகரித்து இருக்கிறது. எனவே இது போன்ற வசதிகள் உருவாகி வருகின்றன.
ட்ராப்பாக்ஸ் (Dropbox)
ட்ராப்பாக்ஸ் என்பது ஒரு தளம். இதில் இலவசமாக நமக்கு 2 GB இடம் தருகிறார்கள். மற்றும் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் இன்னும் சில MB களை பெற முடியும். பணம் கட்டினால் மேலும் நமக்கு தேவையான அளவு இட வசதியைப் பெற முடியும்.
இது எப்படி வேலை செய்கிறது என்றால் இவர்கள் தரும் ஒரு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் (வீட்டுக்கணினி அலுவலக கணினி என்று எங்கு தேவையோ அங்கு) இதை நிறுவியவுடன் உங்களுடைய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைந்து கொண்டால் உங்களது கணினியில் ட்ராப்பாக்ஸ் (Dropbox) என்ற பெயரில் ஒரு ஃபோல்டர் வந்து விடும். இதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவு வரை சேமிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டு கணினியில் JPG கோப்பை சேமிக்கிறீர்கள். பின் அலுவலகம் வந்து உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் நீங்கள் வீட்டுக் கணினியில் சேமித்த கோப்பு இங்கேயும் வந்து விடும். இணையம் அவசியம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
இணையம் இல்லாமலும் உங்கள் கணினியில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும். ஆனால் அப்டேட் செய்தால் இங்கே மட்டுமே அப்டேட் ஆகும். மற்ற இடங்களில் ஆகாது காரணம் இணைய இணைப்பு இல்லாதது.
அதே போல நீங்கள் ஒரு TEXT கோப்பை அடிக்கிறீர்கள் அதை வேறு கணினியில் அப்டேட் செய்தால் உங்கள் வீடு அலுவலகம் என்று அனைத்து இடத்திலும் அப்டேட் ஆகி விடும். காரணம் உண்மையாக அந்த கோப்பு இருக்கும் இடம் வழங்கி ஆகும். நீங்கள் இதைப் பயன்படுத்த கண்டிப்பாக இணையம் அவசியமாகும். iPhone, Android என்று தொலைபேசிகளிலும் இந்த வசதி உள்ளது. எனவே இணையம் இருந்தால் எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் தகவல்களை பார்க்க முடியும்.
இதை விண்டோஸ், மேக்ஸ், லினஸ்(Windows, Mac, Linux) மற்றும் கைபேசி (Mobile)-ல் பயன்படுத்தலாம். உங்கள் ஹார்ட்டிஸ்க் செயலிழந்து விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் தகவல்கள் மற்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்கும், இதுவும் இந்த சேவையின் மிக முக்கிய பயன்.
மைக்ரோசாப்ட் கூட இது போல தருகிறது. ஆனால் இது போல மென்பொருள் வைத்தல்ல. சென்ற வருடம் iOS5 மூலம் Cloud Storage வந்த ஆப்பிள் நிறுவனம் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனாளர்களைப் பெற்று இந்த தொழில் நுட்பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. அதிலும் கடைசி 15 மில்லியன் பயனாளர்களை 21 நாட்களில் பெற்று இருக்கிறது.
இந்த Dropbox வசதியைத் தான் கூகுள் தரப்போகிறது. கூகுள் ஏற்கனவே தனது Google Docs என்ற வசதி மூலம் இதை தருகிறது. ஆனால் Dropboxபோன்று இதற்கு என்று தனியாக மென்பொருள் வைத்து அல்ல. தற்போது இதற்கு வரவேற்பு அதிகமாவதை உணர்ந்து இந்த வசதியைத் தர திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
இலவசமாக 1 GB கொடுக்கிறார்கள். நமக்கு அதிக அளவில் இடம் வேண்டும் என்றால் பணம் கட்டி இதில் பெற்றுக்கொள்ளலாம். இனி வரும் காலங்களில் நமது கணினிகளில் ஹார்ட் டிஸ்க் இயங்கு தளத்திற்கு (OS) மட்டுமே பயன்படும் என்று கருதப்படுகிறது. நம் தகவல்கள் எல்லாம் ஊடடிரன Cloud Computing முறையில் வந்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு இது போல வர சில வருடங்கள் ஆகும். காரணம் இணைய வேகம் தான். தென் கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற இணைய வசதி சிறப்பாக உள்ள நாடுகள் இதில் முதலில் வர வாய்ப்பு உள்ளது. அதோடு நமது நாட்டில் இன்னும், இணையம் செலவு மிக்கதாகவே உள்ளது. அளவில்லாத (Unlimited) வசதி இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். இல்லை என்றால் மிகுந்த செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கும். ஊடடிரன ஊடிஅயீரவைபே என்பது மிகப்பெரிய விஷயம் அதில் ஏகப்பட்ட தகவல்கள் விஷயங்கள் அடங்கி உள்ளது.
ஆன்ட்ராய்டு (Android)
மொபைல் மற்றும் Tablet PC மென்பொருளான ஆன்ட்ராய்டு (Android) தற்போது அதிகளவில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஏற்கனவே ஆப்பிள்க்கு கடும் சவாலாக உள்ளது. தற்போது வளர்ச்சியில் ஆப்பிளை மிஞ்சி விட்டதாக சர்வேக்கள் கூறுகின்றன. ஆன்ட்ராய்டு(Android) நிறுவனம் கூகுளால் ஆகஸ்ட் 2005 ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.
மொபைல் இயங்குதளத்தில் (os) தற்போது ஆன்ட்ராய்டு (Android) சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் எளிமை மற்றும் வசதிகள் காரணமாக தற்போது இதனுடைய பயனாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் சென்றால் 2015 ல் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.
இது ஒரு சுதந்திர மென்பொருள் (Open Source) என்பதும் இது மிக பிரபலமானதிற்கு முக்கிய காரணமாகும். இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் இன்று வரை தமிழ் மொழியை புறக்கணித்தே வருகிறது. பலர் இது குறித்து குற்றம் சாட்டியும் இன்னும் தமிழை படிக்க வசதி ஏற்படுத்தாமல் இருப்பது பல Android தமிழ் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. வேறு வழியில் தமிழை படிக்க முடியும் என்றாலும் ஆப்பிள் உடன் ஒப்பிடும் போது அது நிறைவானதாக இல்லை. கூகுள் விரைவில் இந்த வசதியை தரும் என்று நம்புவோமாக.
கூகுளின் ஆன்ட்ராய்டு (Google -Android)
கூகுளின் ஆன்ட்ராய்டு வேகமாக வளர்ந்து வரும் மொபைல் இயங்கு தளம் ஆகும். இது வரை 200 மில்லியன் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம். மிகக்குறைந்த நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. தற்போது ஆப்பிளின் iOSக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. விரைவில் முதல் இடத்தைப் பிடித்து விடும் என்று கூறி இருக்கிறார்கள். தினமும் 550000 சாதனங்களில் Android இயங்கு தளம் நிறுவப்படுகிறது.
ஸ்மார்ட் ஃபோன் இயங்குதளத்தில் (OS) கூகுள் சாதனை செய்து வருகிறது. குறுகிய காலத்தில் பலரிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது மொத்த ஸ்மார்ட் ஃபோன் இயங்குதள சந்தையில் 39 சதவீத இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம் இயங்குதளத்தை சாம்சங்,எச்டிசி, மோட்டோரோலா (Samsug, HTC, Motorala), மற்றும் சில நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் ஆப்பிள் டைளு ஒரு தொலைபேசியிலேயே இந்த சதவீதத்தை எட்டி இருக்கிறது. தற்போது ஆன்ட்ராய்டுக்கும், ஆப்பிள்க்கும் தான் கடும் போட்டி. 2015ல் ஆன்ட்ராய்டு இயங்குதளமே முன்னணியில் இருக்கும் என்று கூறுகிறார்கள் வல்லுனர்கள்.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இது தான் சூப்பர் என்பார்கள். ஆப்பிள் ஃபோன் பயன்படுத்து பவர்கள் iOS தான் சூப்பர் என்பார்கள். ஆனால் இரண்டுமே சிறப்பான இயங்கு தளம்தான். அது பயன்படுத்துவோரின் தன்மையைபொறுத்தது.
ஆன்ட்ராய்டு - ஐஓஎஸ் (iOS Vs Android)
தற்போது மொபைல் மற்றும் Tablet PCயில் பயன்படுத்தப் படும் ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ஐஓஎஸ் இயங்குதளமான iOSம் கடும் போட்டியை சந்தித்து வருகின்றன. குறுகிய காலத்தில் கூகுள் இயங்கு தளம் பலரின் விருப்பமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. வேகமாகவும் அதே சமயம் சுதந்திர மென்பொருளாகவும் (open source) இருப்பதால் பலரையும் கவர்ந்துள்ளது. தற்போது Blaze என்ற நிறுவனம் இந்த இரு இயங்கு தளங்களுக்கும் சோதனை நடத்தி iOSஉலவியை விட Android உலவி 52 சதம் வேகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் இது ஒரு தவறான சோதனை இவர்கள் கூறுவதைப்போல எதுவுமில்லை சிறப்பாகவே செயல் படுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
டால்பின் உலவி (Dolphin Browser)
iPhone பயன்படுத்துபவர்கள் இணைய உலவிக்கு சஃபாரியை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். Androidல் பிரபலமான டால்பின் உலவியை பலரும் iPhoneல் எப்போதும் வரும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். தற்போது இதிலும் வந்துவிட்டது. இதை iPadலும் பயன்படுத்தலாம். விரைவில் வரும் iOS5ல் சஃபாரியை ஆப்பிள் மேம்படுத்தியுள்ளதாக கூறி உள்ளது. எனவே அதிலும் விரைவில் புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்.
யாஹூ மெயில்(Yahoo Mail)
ஒரு நேர்த்தியான தோற்றம், அதிக சேமிக்கும் திறன், நாள்காட்டி போன்ற பயன்பாடுகள் கொண்டது, முன் எப்போதும் இல்லாத வகையில் அனுபவரீதியாக வழங்கப்படும் ஒரு இலவச மின்னஞ்சல் சேவை.
மறக்கமுடியாத அனுபவத்தையும், முக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நம்ப முடியாத விஷயங்களை இலவசமாகவே வழங்கிடும் மின்னஞ்சல் சேவையே யாஹூவின் முக்கிய அம்மசங்கள்.
டொமைன்கீஸ்
டொமைன்கீஸ் குறியாக்க மின்னஞ்சல் அங்கீகார தீர்வு என்பது மின்னஞ்சல் மோசடியான பிரச்சினையை யாஹூ சிறப்பாக செய்கிறது. நாம் டொமைன்கீஸ் மின்னஞ்சல் மோசடி மற்றும் பிஷிங் எதிர்த்து ஒரு பயன்மிக்க மற்றும் அளவிடக் கூடிய தொழில்நுட்ப தீர்வை யாஹூவில் பெறமுடிகிறது.
எளிமை
இணைய மின்னஞ்சல் கணக்குகள் என வரும் போது பல விருப்பங்களை நிறைவுசெய்கிறது. எளிமையான தோற்றத் துடன் Mac போன்ற ஒரு மின்னஞ்சல் நிரலை மென் பொருளாக கொண்டு சில நன்மைகளை அளிக்கிறது.
அணுகல்
அணுகல் - இது ஒரு இணைய மின்னஞ்சல் நிரலில் முக்கிய நன்மையாகும். உங்கள் மின்னஞ்சல் எந்த நேரத்திலும், எந்த கணினியில் இருந்தும் இன்பாக்ஸ் ல் அணுக முடியும். தேவையான அனைத்து புகுபதிவும் மற்றும் கடவுச்சொல்லும் (Username & Password) போதுமானது.
மற்ற மின்னஞ்சல் கணக்கு
மற்ற மின்னஞ்சல் கணக்கு - யாஹூ பெரும்பாலான மற்ற மின்னஞ்சல் வழங்குநர்கள் கணக்கை வழங்க கூடாது என்ற ஒரு விருப்பத்தை கொண்டிருந்தாலும் நீங்கள் அவர்களை அங்கே சேர்ப்பதன் மூலம், யாஹூவில் அனைத்தும் உங்கள் POP மின்னஞ்சல் கணக்குகளில் பார்க்கலாம். அதே இடத்தில் உங்கள் வேலையில் இருந்துகொண்டே தனிப்பட்ட மின்னஞ்சலை சரிபார்க்கலாம்.
வடிகட்டிகள் (பில்ட்டர்)
வெவ்வேறு கோப்புறைகளுடன் மின்னஞ்சல்களை அனுப்புவது அல்லது வண்ணங்களில் அவர்களை குறிக்க வடிகட்டிகள் (பில்ட்டர்) அமைக்கவும் யாஹூவில் முடியும்.
பலதரப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து உங்கள் தேர்வு: நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கிலிருந்து மின்னஞ்சல் பெரும்போதும், யாஹூவி லிருந்து பதில் அனுப்பும்போதும் எது முதலில் என்பதை வரையரை செய்கிறது. எப்போதும் ஒன்றே பயன்படுத்தலாம், அல்லது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பப்டும் கணக்கைப் பொறுத்து இது மாறுபடும்.
கோப்புறைகளை - உங்கள் மின்னஞ்சல் ஏற்பாடு வைத்திருக்க உதவும் கோப்புறைகளை அமைக்கவும் முடியும். நீங்கள் குறிப்பிட்ட கோப்புறைகளை நேரடியாக செல்ல வடிகட்டப்பட்டு அங்கேயே நகர்த்த முடியும்.
பெரிய கோப்புகளை இணைக்க - சில மின்னஞ்சல் வழங்குநர்கள் உங்கள் கணக்கு மூலம் அனுப்ப அல்லது பெற முடியும் என்று கோப்புகளை அளவை வரம்புகளை கொண்டிருக்கலாம். Yahoo அவர்களை வெளியே அனுப்புவதற்கான பெரிய கோப்புகளை சுருக்க ஒரு வழிமுறையாக வழங்குகிறது. நீங்கள் இந்த வசதியை 2 ஜிபி வரை கோப்புகளை அனுப்ப முடியும்.
வரம்பற்ற சேமிப்பிடம்
வரம்பற்ற சேமிப்பிடம் - பெரும்பாலான ஆன்லைன் மின்னஞ்சல் கணக்குகள் சேமிக்க குறிப்பிட்ட தொகை தரவேண்டும். இந்த சேமிப்பு தொப்பிகளை பெரும்பாலான பயனர்களுக்கு நிறைய உள்ளன, ஆனால் அனைத்து கோப்புகளும் உங்கள் கணக்கில் மின்னஞ்சல்களுக்கு வரம்பற்ற சேமிப்பிடம் கொடுக்கிறது.
யாஹூ-ல் உங்களுக்கு பிடித்தமான,உங்கள் நாட்காட்டி யில், புகைப்படங்கள், மற்றும் பல பிரபலமான ஆன்லைன் பயன்பாடுகள் இணைந்து இன்பாக்ஸ் பட்டியலிடப் பட்டுள்ளன. ஒரே ஒரு கிளிக் தான் அனைத்தும் கிடைக்கும்.
மெயில் பிளஸ்
மெயில் பிளஸ் - நீங்கள் யாஹூ இலவச மின்னஞ்சல் கணக்கை கொண்டு (எந்த இன்னும் பல) மேலே பட்டியலிடப் பட்ட அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும், ஆனால் நீங்கள் ஒரு சிறிய ஆண்டுசந்தா செலுத்தவும், மேம்படுத்தல் தொகையாகவும் பெற்று யாஹூ மெயில் பிளஸ் தனது சேவையை அளிக்கிறது. அவுட்லுக் போன்ற வேறு மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் யாஹூ மின்னஞ்சலை அனுப்பமுடியும். மின்னஞ்சல் வாடிக்கை யாளர்களுக்கு மின்னஞ்சல். மிக தெளிவான தோற்றம், உங்கள் கணக்கில் இலவச விளம்பரம். தேவையில்லா முகவரிகளை அழிக்க உதவும் மற்றொரு பெரிய அம்சம். இது ஸ்பேம் ஜெனரேட்டர் களாகவும் இருக்கலாம். வலை தளங்கள் உள்நுழைந்து பயன்படுத்த உங்களுக்கு தற்காலிக மின்னஞ்சல் முகவரிகளை அமைக்க அனுமதிக்கிறது.
யாஹூ மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை! மின்னஞ்சலில், கூகிள் தனது பல புதிய உத்திகளை புகுத்தியதன் மூலம், யாஹூவின் இடத்தை தற்போது பிடித்து விட்டது. யாஹூ இதை செய்யத்தவறியதால் தன் இடத்தை மட்டுமல்ல தன் பெயரையே இழந்து வருகிறது.
கூகிள் தினமும் ஒரு மாற்றம் என்று அசத்திக்கொண்டு வரும் வேளையில், வருடத்திற்கு சில மாற்றங்கள் கூட இல்லாமல் இன்னும் பழைய வசதிகளையே அப்படியே பயன்படுத்திவருவது வருத்தமளிக்கிறது. பத்து வருடங்களாக யாஹூ மின்னஞ்சலை பயன்படுத்தி எந்த ஒரு குறிப்பிடத் தக்க முன்னேற்றமும் தராததால் பொறுத்து பொறுத்து பொறுமை இழந்து தற்போது கூகிள் மின்னஞ்சலுக்கு மாறிக்கொண்டுவருகிறார்கள். இருந்தாலும் யாஹூ மின்னஞ்சல் பயன்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு, பயனுள்ளதாக இருக்கும் சிலவற்றை காணலாம்.
யாஹூ மின்னஞ்சலின் இடது புறத்தில் கீழே application என்ற வசதி உள்ளது. இதை சிலர் கவனித்து பயன்படுத்திக் கொண்டு இருப்பார்கள். பலர் கவனித்து இருக்க மாட்டார்கள். அல்லது கவனித்தும் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். அதில் உள்ள முக்கியமான இரு வசதிகள்.
யாஹூ தரும் இந்த வசதிகள் யாஹூ வின் சொந்த வசதிகள் இல்லை. மற்ற நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுடன் இந்த சேவையை உங்களுக்கு தருகிறது. (அதாவது) External application இதை பயன்படுத்த விரும்பினால் உங்கள் அனுமதியை கேட்டு நீங்கள் அனுமதித்தபிறகே செயல்படும். யாஹூ பரிந்துரைப்பதால் இவர்கள் நம்மை தவறாக பயன்படுத்தமாட்டார்கள் என்பதால், நம்பிக்கையுடன் இவற்றை பயன்படுத்தலாம். ஏனென்றால் யாஹூ இதை எல்லாம் உணர்ந்தே இருக்கும், அதனால் நீங்களும் இதை தைரியமாக பயன்படுத்தலாம்.
இந்த வசதிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது நம்பிக்கையில்லை என்று நீங்கள் கருதினால், எப்போது வேண்டும் என்றாலும், இந்த வசதிகளை உங்கள் மின்னஞ்சலில் இருந்து நீக்கிக் கொள்ளலாம்.
யாஹூ - பேஸ்புக் (Yahoo & Facebook)
யாஹூ, கூகிள் மற்றும் மற்ற மின்னஞ்சல்களின் போட்டியை சமாளிக்க அவ்வப்போது சில மாற்றங்களை செய்து வருகிறது. யாஹூல் உள்ள குயஉநடெடிம நண்பர்களை மின்னஞ்சல்களை இம்போர்ட் செய்ய அனுமதித்து இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் வசதியானது, நீங்கள் யாஹூவில் இருந்தபடியே உங்கள் (Facebook Status)ஸ்டேட்டஸ் மெசேஜ்ஐ அனுப்பவும். அதோடு உங்கள் நண்பர்கள் யாராவது உங்களுக்கு மின்னஞ்சல் செய்தால் அவர்களது ஃப்ரோபைல் படம் தெரியும்படியும் அமைக்கப்பட்டுள்ளது. யாஹூவும் இதைப்போல மாற்றங்கள் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
சூமோ ட்ரைவ் (Zumo Drive)
இதை நாம் இணைத்துக்கொண்டால் 1 ஜிபி அளவுக்கு உங்கள் தகவல்களை நீங்கள் இங்கே சேமித்து வைக்க முடியும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்தில் உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு ஏற்படுத்த வேண்டியது மட்டுமே. ஒருமுறை நீங்கள் இதை செய்து விட்டால், நீங்கள் யாஹூ கணக்கில் நுழைந்தாலே போதுமானது. ஒவ்வொரு முறையும் இதை பயன்படுத்தும் போதும், பயனர் கடவுச்சொல் (password) கொடுக்கத் தேவையில்லை.
நீங்கள் யாஹூ கணக்கில் இருந்து எந்த ஃபைல் (setup, doc) வேண்டும் என்றாலும் அப்லோட் செய்து கொள்ளலாம். ஒரு ஃபைல் அளவு 100எம்பி வரை மட்டுமே இருக்க முடியும், இதை பின்னாளில் மாற்ற வாய்ப்புண்டு.
100எம்பி ஃபைலை விட அதிகமாக எப்படி அப்லோட் செய்வது?
அதற்கும் வழி இருக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சூமோட்ரைவ்-ல் சென்று அங்குள்ள மென் பொருளை தரவிறக்கி நிறுவ வேண்டியது மட்டுமே. இதை நீங்கள் செய்து விட்டால் உங்கள் சூமோட்ரைவ்-ல் உள்ள தகவல் உள்ள இடம் உங்கள் கணிப்பொறியில் Z:\ (Virtual) டிரைவாக வந்து விடும். இதில் வழக்கமாக நீங்கள் காப்பி, பேஸ்ட் செய்வது போல செய்தால் போதும். அதுவே செய்து விடும். வழக்கமாக அப்லோட் செய்யும் போது ஆகும் நேரம் போல் ஆகாது.
இதில் உள்ள ஒரு ஃபைலை (தரவிறக்க சுட்டியை) நீங்கள் யாருக்கு வேண்டும் என்றாலும் யாஹூ மின்னஞ்சலில் இருந்தே அனுப்பலாம். இடது புறம் உள்ள மைட்ரைவ்ஐ க்ளிக் செய்து அதில் உள்ள உங்கள் ஃபைலை தேர்வு செய்து பொத்தானை க்ளிக் செய்தால் போதும். பின் நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்கள் மின்னஞ்சலை வழக்கம் போல கொடுத்து அனுப்பிட வேண்டியது தான்.
இதன் முக்கியமான சேவை உங்களுக்கு இலவசமாக இடம் கொடுப்பது மட்டுமே! மின்னஞ்சலில் அனுப்புவது எல்லாம் அவர்கள் தரும் கூடுதல் வசதி. இவர்கள் 1ஜிபி இடம் கொடுத்தாலும் அதன் பின் சில போட்டிகள் வைக்கிறார்கள் அதில் நீங்கள் வெற்றி பெற்றால் இன்னும் 1ஜிபி தருகிறார்கள், ஆகமொத்தம் 2ஜிபி. இந்தப் போட்டி கூட நீங்கள் அதில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற் காகவே. எளிதான ஒன்றுதான். அதிக இடம் வேண்டும் என்றால் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
ட்ராப்.ஐஓ (Drop I.O)
இதுவும் மேற்கூறிய ஒன்றைப் போலவே தான் ஆனால் மின்னஞ்சலுக்காக மட்டுமே. 100 எம்பி அளவிற்கு நீங்கள் இதில் ஃபைலை அனுப்பலாம் என்பதே இதன் பயன்.இதை இணைத்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டியது இடது புறம் உள்ள Attach Large Filesஐ க்ளிக் செய்தால் வரும் Select Files ஐ க்ளிக் செய்து உங்கள் ஃபைலை தேர்வு செய்து பின் Upload and Compose E-mail - என்ற பொத்தானை அழுத்த வேண்டியது தான். பின் உங்கள் அப்லோட் ஆன ஃபைலை நீங்கள் யாருக்கு அனுப்ப விரும்புகிறீர்களோ, அவர்கள் மின்னஞ்சலை அதில் வழக்கம் போல கொடுக்க வேண்டியது தான்.
இந்த ஃபைல் 30 நாட்களுக்கு மட்டுமே இருக்கும், அதற்குள் நீங்கள் மின்னஞ்சல் செய்த நபர் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் அதில் உள்ள தகவல்கள் காலாவதியாகி விடும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, ஃபைல் இவர்களது தளத்திலே இருக்கும். எனவே 100 ஃபைலை நீங்கள் மின்னஞ்சல் செய்தால் உங்கள் நண்பருக்கு செல்வது தரவிறக்க சுட்டி மட்டுமே. உங்கள் ஃபைல் அல்ல. நீங்கள் எதிர்பாராதவிதமாக ஒருவருக்கு அனுப்ப வேண்டிய ஃபைலை இன்னொரு வருக்கு அனுப்பி விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கவலைப்பட வேண்டாம், திரும்பி அதே பகுதிக்கு வந்து அங்கே உள்ள ஃபைலை நீங்கள் நீக்கி விடலாம். இதன் மூலம் அவர் இதை தரவிறக்கம் செய்ய முடியாது.
ஆப்பிள் (Apple)
உலகம் முழுவதும் குறிப்பாக மேலை நாடுகளில் தற்போதைய பரபரப்பு ஆப்பிள் தொலைபேசி, (iPhone, iPod, iPod Touch) போன்ற சாதனங்கள் தான். தனது தயாரிப்பை ஒவ்வொரு முறை வெளியிடும் போதும், மக்களிடையே அதை வாங்க அதிக வரவேற்பு இருக்கிறது. ஆப்பிள் நிறுவனமும் பல்வேறு வகையான விளம்பரங்கள் மூலம், அதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. சமீபமாக ஒரு சிறு குழந்தையும் ஒரு வயதான பெண்மணியும் இதை பயன்படுத்துவதைப்போல வெளியிட்ட விளம்பரங்கள் பலரை வெகுவாக கவர்ந்து விட்டது. தற்போது ஜப்பானில் அசைக்க முடியாமல் இருந்த Smart Phoneஐ ஆப்பிள் விற்பனை தாண்டிவிட்டது.
ஆப்பிளும் Vs அடோபும்
பிரபல நிறுவனங்களான அடோப் மற்றும் ஆப்பிள் சண்டைப் போட்டு பிரிந்து விட்டன. இனி அடோப் ப்ளாஷ் தனது ஐபோனில் பயன்படுத்தப் போவதில்லை என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்து விட்டது. இதற்கு ஆப்பிள் கூறும் காரணங்கள் பாதுகாப்பின்மை, பல குறைபாடுகள் மற்றும் அதிகளவில் சக்தியை எடுத்துக் கொள்வது போன்றவை. இந்த இரண்டு நிறுவனங்களும் மறுபடியும் இணைய வேண்டும் என்பது இதைப் பயன்படுத்தும் ரசிகர்களது விருப்பம்.
ஆப்பிள் டேபிளட் பிசிஅறிமுகம்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2010 ல் முதன் முதலில் அறிமுகப்படுத்திய சாதனம் இதுவாகும். நோட்புக் என்ற சிறிய கணினி சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருந்தபோது அதை இன்னும் சுருக்கி வித்தியாசமாக டேபிளட் பிசி என்று அறிமுகப்படுத்தினார். இதை அறிமுகப்படுத்திய போது இதற்கு வரவேற்பு சுத்தமாக இல்லை. பலரும் இதை தோல்வி அடைந்த தயாரிப்பு என்று கூற துவங்கினார்கள். ஆனால் அதன் பிறகு இதனுடைய எளிமை மற்றும் பயன்பாடு ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களே வியக்கும் அளவிற்கு வெற்றி பெற்று விட்டது. சாதாரண வெற்றி எல்லாம் இல்லை மாபெரும் வெற்றி. நோட்புக்கையே பின்னுக்கு தள்ளி தனது மாபெரும் வளர்ச்சியை அடைந்துவருகிறது. நோட்புக் வாங்கியவர்கள் எல்லாம் டேபிலேட் பிசி வாங்கி அதன் பயனை அடைந்தே ஆகவேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அளவு 9.73, பிக்செல் 1024 க்கு 768 ஆகும். இது ஐஓஎஸ் ((iOS))என்ற இயங்குதளத்தில் (Operating System)ல் செயல்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தாரின் பலமே புதுமை, எளிமை மற்றும் கவர்ச்சி தான். இதனால் தான் போட்டிகள் பல இருந்தாலும் இதற்கு என்ற அசைக்க முடியாத ரசிகர் கூட்டம் உள்ளது. இதனுடைய அடுத்த வெளியீடு ஐபேட் 2 (iPad-2) விரைவில் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் இது பற்றிய பரபரப்பு இப்போதே பலரை தொற்றிக்கொண்டது. முதல் மாடலில் இல்லாத front facing camera (for Video chat) உட்பட பல வசதிகளை தரப்போகிறது.
டேபிளட் பிசியின் பயன்பாடு
இது பெரும்பாலும் இணையம், அலுவலக மின்னஞ்சல்கள்(Outlook). விளையாட்டுகள் போன்ற வற்றிற்காகவே உருவாக்கப்பட்டது. இதில் நாம் விண்டோஸ் இயங்கு தளத்தில் நிறுவும் (Install) மென்பொருளைப் போல இதில் நாம் நிறுவ முடியாது. இதற்க்கென்று உள்ள மென்பொருளை மட்டுமே நிறுவ முடியும். அலுவலக மின்னஞ்சல் மற்றும் இணையம் மட்டுமே பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள எளிமையான ஒன்றாகும்.
டேபிளட் பிசி என்றால் ஆப்பிள் மட்டும் தானா?
இல்லை. தற்போது இதில் பிரபலமாக இருப்பது ஆப்பிள் உடன் சாம்சங், மோட்டாரோலா, மற்றும் பல நிறுவனங் களாகும். ஆனால் இன்று வரை முதலிடத்தில் இருப்பது ஆப்பிள் தான்.
டேபிளட் பிசி யின் இயங்குதளம் (Operating System)
ஆப்பிள் iOS என்ற இயங்குதளத்திலும், Samsung, Motorala போன்றவை கூகுள் உடைய இயங்கு தளமான Androidல் இயங்குகிறது. இவை மட்டுமல்லாமல் பல டேபிளட் பிசி க்களுக்கு ஆன்ட்ராய்டு(Android) இயங்குதளமாக பயன்படுத்தப் படுகிறது. ஆப்பிள் தனது அடுத்த இயங்கு தளத்தை (Operating System) அறிமுகப்படுத்தியுள்ளது. இது Mac OS X Lion என்று கூறப்படுகிறது.
சாம்சங் டேபிலேட் பிசி (Samsung Tablet PC)
ஆப்பிள் ஞையன க்கு ஓரளவு போட்டியாக வளர்ந்து கொண்டு இருக்கும் ஒரு நிறுவனம் சாம்சங் (ளுயஅளரபே)ஆகும். இதனுடைய முதல் வெளியீடு ழுயடயஒல கூயெ யின் அளவு 7" மட்டுமே ஆகும். இது பேட் குஹகூ32 ல் இயங்குவதால் 4ழுக்ஷ க்கு மேல் உங்களால் ஒரு பைலை காபி செய்ய முடியாது. இதனால் படங்களை காப்பி (copy) செய்வதில் சிக்கல் உண்டு. ஆப்பிள் அளவிற்கு இல்லை என்றாலும் இதற்கும் ஓரளவு ஆதரவு உள்ளது. இதனுடைய அடுத்த வெளியீடான Samsung Galaxy 10.1 ல் பல அதி நவீன உத்திகள் கையாளப்பட்டுள்ளன.
ஆன்ட்ராய்டு (Andriod) இது வரை தொலைபேசிகளுக்கு தயாரித்த இயங்கு தளத்தையே டேபிலேட் பிசி ((Tablet PC)) க்கும் பயன்படுத்தி வந்தது. ஹனேசடைன ன் அடுத்த வெளியீடான "“Honeycomb” Tablet PC" க்கு என்றே தயாரிக்கப்பட்ட இயங்கு தளமாகும். இது சாம்சங் (Samsung) ல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே Motorola லும் இந்த இயங்கு தளம் பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிள் டேபிலேட் பிசி தமிழ் பான்ட் வசதியை செய்துள்ளது. ஆனால் ஹனேசடைனல் அது இல்லை. ஆனால் ஒபரா உலவியின் (browser) மூலம் தமிழ் படிக்க முடியும். இணையத்தில் பலரும் தமிழ் வசதியை ஆன்ட்ராய்டு((Andriod) ) இன்னும் ஏற்படுத்தாமல் இருப்பது பற்றி தமிழ்மக்கள் கவலை கொண்டுள்ளார்கள். ஆனால் கூகுள் இதை கவனிக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இதனாலே சிலர் வர யோசிக்கிறார்கள். கூகுளின் தாமதம் தமிழ் பயனாளிகளுக்குதான் ஏமாற்றமாக உள்ளது.
நோக்கியா (Nokia)
நோக்கியா நிறுவனம் செல் போன் தயாரிப்பில் புகழ்பெற்றது அனைவரும் அறிந்தது. இந்தியாவில் அசைக்க முடியாத விற்பனையை கொண்டு இருந்தது. ஆனால் தற்போது போட்டிகள் மற்றும் ஸ்மார்ட் போன் வருகை போன்றவற்றால் உலகளவில் லாபத்தின் அளவில் 2009 ஐ விட 2010 ல் அளவு குறைந்துள்ளது. தற்போது மேலும் ஒரு சோக செய்தியாக நோக்கியாவின் செல் போன் மென் பொருளான சிம்பியானை ஆன்ட்ராய்டு மென்பொருள் பயன்பாட்டில் மிஞ்சியுள்ளது.
டேபிலேட் பிசி (Tablet PC •Application )
டைளுக்கான இயங்கு தளத்திற்கு http://store.apple.com/ மற்றும் Andriodஇயங்கு தளத்திற்கு https://market.android.com/ இதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. நமக்கு தேவையான அனைத்து மென்பொருளையும் இங்கே சென்று தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனம் Apple Store அறிமுகப்படுத்தியதும் அது மிகப்பெரிய வெற்றியடைந்தது. 10 பில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை செய்துள்ளது.
ஆப்பிள் ஐபேட் (Apple iPad)
ஆப்பிள் அறிமுகப்படுத்திய போது ஆப்பிள் நிறுவனர் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். இந்த அளவிற்கு அசூர வெற்றி பெரும் என்று. ஆப்பிள் ஐபேட் வெளியிட்டபோது இதை எல்லாம் யார் வாங்கப்போகிறார்கள் என்று நினைத்த வர்கள் அதிகம். அப்படி நினைத்தவர்களை வியப்பில் ஆழ்த்தி சாதனை புரிந்து விட்டது. இதன் மாபெரும் வெற்றி. கிறிஸ்துமஸ் அன்று அமெரிக்காவில் அதிகம் பேருக்கு பரிசளிக்கப்பட்ட பொருள் iPad என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகெங்கும் பலர் ஐபேட்-ன் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆப்பிள் ஐட்யூன் (Apple iTunes)
ஆப்பிள் நிறுவனம் (Apple) தனது ஐபாட் மற்றும் ஆப்பிள் கணிப்பொறியில் பல சாதனைகளை செய்து வருவது, அனைவருக்கும் தெரிந்ததே! இதன் ஐபாட் (iPad) மற்றும் அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் பயன்படுத்த ஐட்யூன் (iTunes) என்ற மென்பொருள் தேவை. இது இல்லாமல் நீங்கள் பாடலோ படமோ எதையும் பயன்படுத்த முடியாது. சில நேரங்களில் இது மிகவும் கடினமாக இருந்தாலும் இந்த மென்பொருள் கொடுக்கும் வசதிகள் அளவில்லாதது. இது தற்போது தனது புதிய வெளியீடான ஐட்யூன் 9.1 ஐ அறிமுகப் படுத்தியுள்ளது. ஐபாட் போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் இதை அப்டேட் செய்துகொள்ளுங்கள். இதில் குறிப்பிடத்தக்க புதிய மாற்றம் எது என்றால் நீங்கள் உங்கள் கணிப்பொறியில் உங்கள் ஐபாட்ஐ இணைத்தவுடன் இது வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
மைக்ரோசாப்ட் (Microsoft)
ஒரு வர்த்தகத்தை வளர்க்கும் சாதனமாக பெர்சனல் கம்ப்யூட்டர் மாறுவதற்கு இரண்டு மா மனிதர்கள், பால் ஆலன் (Paul Alan) மற்றும் பில்கேட்ஸ் (Bill Gates) ஆகியோரே காரணமாக இருந்தனர். 1975ல் இவர்கள் பேசிக் ((Basic) என்னும் புரோகிராமிங் மொழியை உருவாக்கி மைக்ரோசாப்டை (Microsoft) நிறுவினார்கள்.
இன்றைக்கு 37 ஆண்டுகள் கழித்து எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும், எத்தனை ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வந்தாலும், இன்னும் மைக்ரோசாப்ட் தான் முதல் இடத்தில் உள்ளது. இந்த கால கட்டத்தில் பால் ஆலன் மற்றும் பில் கேட்ஸ் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றனர். 2008 ஆம் ஆண்டில் 1800 கோடி டாலர் நஷ்டம் அடைந்த பின்னரும், பில் கேட்ஸ் தொடர்ந்து பணக்காரராக உள்ளார்.
பில்கேட்ஸ் நிறுவனமான மைக்ரோசாப்ட் வெறும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை (Operating System) மட்டும் தயாரிக்கவில்லை. உலகெங்கும் பிரபலமாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் எம்.எஸ். ஆபீஸ் (Microsoft), எக்ஸ் பாக்ஸ் வீடியோ கேம் விளையாட்டு சாதனம் (Xbox Video Games), ஸூன் போர்ட்டபிள் மியூசிக் பிளேயர் என இன்னும் பல டிஜிட்டல் சாதனங்களை முதல் முதலாக உருவாக்கி மக்களிடையே விற்பனை செய்து வருகிறது.
ஸ்லீப் மற்றும் ரெஸ்யூம் (Sleep and Resume)
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஸ்லீப் மற்றும் ரெஸ்யூம் (தற்காலிகமாக நிறுத்திப் பின் மீண்டும் இயக்கும் வசதி) செயல்பாடு மிக நேர்த்தியாகவும் எந்த பிரச்சனையுமின்றியும் செயல்படுகிறது. இதனால் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தினை அடிக்கடி நிறுத்தி இயக்க வேண்டிய தேவை இல்லை. விண்டோஸ் லோகோ கீயுடன் வலது மற்றும் இடது ஆரோ கீகளை இயக்குகையில் அப்போதைய விண்டோ அந்த திசைகளில் ஒதுங்கி இடம் பிடித்து மற்ற விண்டோக்களுக்கு இடம் தருகிறது. இதனால் இரண்டு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு விண்டோவில் இன்டர்நெட் பிரவுஸ் செய்து கொண்டே, இன்னொன்றில் இமெயில் தொடர்புகளைக் காணலாம். ஒரே டாகுமெண்ட்டில் இரு வேறு இடங்களில் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம்.
ஸ்நிப்பிங் டூல் (Snipping Tool)
திரைக் காட்சியை அப்படியே படம் பிடித்து பைலாக மாற்ற பல வழிகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்நிப்பிங் டூல் (ளுேயையீீைபே கூடிடிட) என்ற ஒரு வசதியைத் தருகிறது. ஸ்நாப் சாட் எடுப்பது போல ஒரே கீ அழுத்தத்தில் இதனை மேற்கொள்ள முடிகிறது.
புரஜக்சன் ஸ்கிரீன் (Projection Screen)
விண்டோஸ் 7, கம்ப்யூட்டரை புரஜக்டர் ஒன்றுடன் இணைத்து இயக்குவதை எளிதாக்குகிறது. விண்டோஸ் + பி (றைே மநல +யீ) கீகளை அழுத்தினால், காட்சி கம்ப்யூட்டருக்கும் புரஜக்ஷன் ஸ்கிரீனுக்குமாக மாறுகிறது.
இதில் இணைத்துத் தரப்படும் கால்குலேட்டரில் புதிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன. சயின்டிபிக் புரோகிராமர், புள்ளியியல் செயல்பாடுகள், யூனிட் மாற்றுதல் (கி.மீ-மைல், லிட்டர்-காலன், செல்சியல் -பாரன்ஹீட்) போன்றவை தரப்பட்டுள்ளன.
எக்ஸ்பி மோட் (XP Mode)
இதில் தரப்பட்டுள்ள எக்ஸ்பி மோட் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. எக்ஸ்பியில் மட்டும் இயங்கும் பல தேர்ட்பார்ட்டி புரோகிராம்களை (Third Party Program) எளிதில் இதன் மூலம் இயக்க முடிகிறது. விண்டோஸ் 7 விஸ்டா போலவே பல வழிகளில் இருந்தாலும் மேலே தரப்பட்டுள்ள பல புதிய வசதிகள், கூடுதல் பாதுகாப்பு, நிலையாக இயங்கும் தன்மை ஆகியவற்றிற்காக நிச்சயம் இதற்கு நம் கம்ப்யூட்டரை மேம்படுத்திக் கொள்ளலாம். விண்டோஸ் 7 தரும் சில புதிய டூல்களை இங்கு காணலாம்.
கிரெடென்சியல் மேனேஜர் (Credential Manager)
இது விண்டோஸ் 7 இயக்கத்தில் தரப்பட்டுள்ள ஒரு புதிய வசதி. விஸ்டாவில் யூசர் அக்கவுண்ட்டில் தரப்பட்ட பாஸ்வேர்ட் மேனேஜர் போன்ற வசதியை விரிவாகத் தருகிறது. இந்த டூல் மூலம் நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் நுழைந்தாலும் அந்த செயல்பாட்டிற்கான கிரெடென்சியல் உருவாக்கப்பட்டு ஒரு போல்டரில் தக்கவைக்கப்படுகிறது. இதே போல இமெயில் அக்கவுண்ட் மற்றும் வெப் அக்கவுண்ட் ஆகியவற்றிற்கும் உருவாக்கலாம். இவற்றை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்துக் கொண்டால், சிஸ்டம் கிராச் ஏற்படுகையில் இவற்றை மீண்டும் புதுப்பித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிஸ்டம் கிராஷ் (System Crash) ஆனால் இந்த டிஸ்க்கை எடுத்து, அதன் டிரைவில் போட்டு இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன் ரெக்கவரி ஆப்ஷன்ஸ் ஒரு பட்டியல் கிடைக்கும். இதில் Startup repair, System restore, System image recovery, Windows memory diagnostic and Command prompt எனப் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்களுக்கு எது தேவையோ அதனைக் கிளிக் செய்து, சிஸ்டத்தினை சரி செய்து கொள்ளலாம்.
பேக் அப் டூல் (Backup utility): விஸ்டாவில் ஒரு பேக் அப் டூல் கிடைத்தது. அது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிறைய ஆப்சன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் (Hard Disk) உள்ள பைல்களின் பேக் அப் காப்பியை அதே ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு பகுதி, செருகி எடுத்துச் செல்லக்கூடிய ஹார்ட் டிஸ்க், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவ் ஆகிய ஒன்றில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பேக் அப் செய்திடுகையில், பேக் அப் தேவையற்ற போல்டர்கள் மற்றும் டிரைவ்களை விலக்கியும் எடுக்கலாம்.
திரைத் தோற்றத்தை அமைத்தல் (Text tuning and color calibration):
விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் நல்ல டூல்களில் இதுவும் ஒன்று. நம்மில் பலர் சிஸ்டம் மானிட்டரில் என்ன காட்சி கிடைக்கிறதோ, அதனை அப்படியே வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை இயக்குகிறோம். நம் கண்களுக்கு இந்த தோற்றம் சரியாக உள்ளதா, எரிச்சலைத் தருகிறதா, வண்ணக் கலவை சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. கிடைக்கின்ற இமேஜை ஒன்றும் செய்திட முடியாது என்ற எண்ணத்துடன் செயலாற்றுகிறோம்.
விண்டோஸ் 7 இந்த இமேஜை எடிட் செய்திடும் டூல் ஒன்றை நமக்குத் தருகிறது. இந்த டூல் பெயர் Clear Type Text Tuner . இதனை கண்ட்ரோல் பேனல் சென்று இயக்கலாம். இந்த டூல் மூலம், மானிட்டரில் தெரியும் காட்சியினை ட்யூன் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட் டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்கள் இணைக்கப் பட்டிருந்தால், ஒவ்வொரு மானிட்டரின் இமேஜையும் ட்யூன் செய்து வைத்திடலாம்.
இவ்வாறு எடிட் செய்திடுகையில் வண்ணக் கலவை யினை சரி செய்திட விண்டோஸ் 7 Display Color Calibration என்ற டூலைத் தருகிறது. கலர் இணைப்பு, பிரைட்னெஸ், காண்ட் ராஸ்ட் ஆகிய வசதிகள் இந்த டூல் மூலம் பெற்று வண்ணக் கலவையை நம் கண்கள் விரும்பும் வகையில் சரி செய்திடலாம்.
மேட் இன்புட் பேனல் (Math Input Panel) விண்டோஸ் 7 தொகுப்பை உங்கள் டேப்ளட் பிசி அல்லது டச் ஸ்கிரீன் (Touch Screen) கொண்ட மானிட்டருடன் இயக்கு கிறீர்களா? அப்படியானால் சில மேத்ஸ் கால்குலேசனை மேற்கொள்கையில் அதற்கான சிறப்பு கீகளைத் தேடிப் பயன்படுத்த வேண்டியதில்லை. திரையில் மேத்ஸ் சிம்பல்(Maths Symbol) மற்றும் பார்முலாக்களை அமைத்தால், இந்த மேத் இன்புட் டூல் தானாக அதனை அறிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றி, கணக்கினை செயல்படுத்துகிறது. சாதாரண வழக்கமான திரை கொண்டு இயக்கிக் கொண்டிருந்தால், திரையில் மவுஸ் மூலம் இந்த பார்முலாக்களை எழுதியும் இந்த டூல் மூலம் முயற்சிக்கலாம்.
பிரைவேட் கேரக்டர் எடிட்டர் (Private Character Editor)
ஒரு சிலரின் கையெழுத்து அழகாக இருக்கும். அச்சிடுவதற்குப் பதிலாக இதனையே வைத்துக் கொள்ள லாமே என்று விரும்புவார்கள். கம்ப்யூட்டரில் ஒரு சில எழுத்துக்களில் நீங்கள் சிறிய மாற்றங்களை விரும்புவீர்கள். அல்லது எழுத்து வகைகளை நீங்களே மாற்றி அமைக்க ஆசைப்படலாம். அப்படிப்பட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த கேரக்டர் எடிட்டர் டூல் உதவுகிறது. கேரக்டர்களை எடிட் செய்து, பின் கேரக்டர் மேப் (Character Map) மூலம் இவற்றை இன்புட் செய்து டாகுமென்ட்களிலும் பிற பைல்களிலும் பயன்படுத்தலாம்.
சில வேறுபாடுகள்:நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்திருந்தாலும், புதிய கம்ப்யூட்டர் ஒன்றை விண்டோஸ்-7 சிஸ்டத்துடன் வாங்கி இருந்தாலும், பெரும்பாலானவர்கள், விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்துதான் விண்டோஸ்-7 சிஸ்டத்திற்கு மாறுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சந்திக்க நேரும் சில அடிப்படை வேறுபாடுகளை இங்கு காணலாம்.
1. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை குயிக் லாஞ்ச் பாரில் (Quick Launch) கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கிளிக் செய்து, புரோகிராமினை இயக்கிச் செயல்படுவார்கள். இதற்காகவே சிலர் கீழாக உள்ள டாஸ்க் பாரில் அதிக ஐகான்கள் வைப்பதற்காக, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் குயிக் லாஞ்ச் பார் இல்லை. அதற்குப் பதிலாக பின்னிங் (Pinning) என்னும் வசதி தரப்பட்டுள்ளது. எந்த அப்ளிகேஷனிலும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் PIN என்னும் பிரிவை டாஸ்க் பார் அல்லது ஸ்டார்ட் மெனு அல்லது இரண்டிலும் இருக்கும்படி செட் செய்திடலாம். மேலும் டாஸ்க்பாரில் உள்ள ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் இயங்கிக் கொண்டிருந்தால், அதன் ஐகானைச் சுற்றிச் சிறிய வட்டம் காட்டப்படுவதும் ஒரு புதுமையான வேறுபாடு.
2. விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP) பயன்படுத்தியவர்கள் மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் (My recent documents) என்னும் பிரிவை அடிக்கடி பயன்படுத்தி, அப்போதைக்குப் பயன் படுத்திய புரோகிராம்களைப் பெற்று இயக்கியிருப்பார்கள். இந்த மெனு ஸ்டார்ட் மெனுவிற்கு வலது பக்கம் கிடைக்கப் பெறும். இதில் அப்போது பயன்படுத்திய பைல், அது DOC, JPEG, MP3 என எதுவாக இருந் தாலும், பட்டியலிடப்படும். அதில் கிளிக் செய்து பெறலாம். இதனை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இன்னும் விரிவாக்கியுள்ளது மைக்ரோசாப்ட். ஒவ்வொரு அப்ளிகேசனும் ஒரு மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் பட்டியலை ஜம்ப் லிஸ்ட் (Jump List) என்ற பெயரில் கொண்டுள்ளது. ஸ்டார்ட் மெனுவில் உள்ள புரோகிராம் அருகே ஒரு அம்புக் குறி உள்ளது. இதன் அருகே மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த அப்ளிகேசன் புரோகிராம் இயக்கிய தற்போதைய பைல்களின் பட்டியல் கிடைக்கிறது.
மேலும் இந்த ஜம்ப் லிஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து, குறிப்பிட்ட பைலை பின் செய்து கொள்ளலாம். இதனால் அந்த குறிப்பிட்ட பைல் இந்த பட்டியலின் சுழற்சியில் மறையாது.
விண்டோஸ் 7 லைப்ரரி (Windows 7 Library) 3. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் பைல் மற்றும் போல்டர்களுக்குப் பழகிவிட்டனர். விண்டோஸ் வெளியாகும்போது, மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்து பவர்கள், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தங்கள் பைல்களையும், மை பிக்சர்ஸ் போல்டரில் பட பைல்களையும் மியூசிக் பைல்களை மை மியூசிக் போல்டரிலும் மட்டுமே வைப்பார்கள் என எதிர்பார்த்தது. ஒருவகையில் பார்த்தால் அது தர்க்க ரீதியாக சரி என்றே தெரிகிறது. அதன்படி பைல்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தால், பேக் அப் எடுக்கவும் பைல்கள் எங்கு இருக்கின்றன என்று தேடிப் பார்க்கவும் எளிதாக இருந்திருக்கும். நாம் இஷ்டப்படி மை டாகு மென்ட்ஸ் போல்டருக்கு வெளியே போல்டர்களை உருவாக்கி, நம் இஷ்டத்திற்கும் வசதிக்கும் ஏற்றபடி பைல்களைப் பாதுகாப்பாக வைக்கப் பழகிவிட்டோம். இதனால் டேட்டா அடங்கிய பைல்கள் டிரைவ்கள் எங்கும் சிதறிக்கிடக்க, பிரச்னைகளும் குவிந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வாக விண்டோஸ் 7 லைப்ரரி என்ற ஒரு வழியைத் தந்துள்ளது. பைல்கள் சிதறிக் கிடந்தாலும், அவற்றை இந்த ஓர் இடத்தில் வைத்துத் தேடிப்பார்த்துப் பெறும் வகையில் லைப்ரேரி அமைக்கப்படுகிறது.
மேலும் இந்த லைப்ரரியில் பைல்கள் அமைக்கப்படுகையில், பைல்களின் தன்மைக்கேற்ப பைல்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பட பைல்கள் தம்ப்நெயில் (Thumb Nail) படங்களுடன் காட்யஅளிக்கும்.
மேலே சொல்லப்பட்ட மூன்று வேறுபாடுகளும் சில அடிப்படை வேறுபாடுகளே. இன்னும் பல வேறுபாடுகளை நீங்கள் பயன்படுத்துகையில் அறிந்து கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தற்போது மக்கள் பயன்பாட்டில் பிரபல மடைந்து வரும் வேலையில் விண்டோஸ் 8 பற்றிய செய்திகள் பறக்க ஆரம்பித்து விட்டது. விண்டோஸ் 8 பற்றி செய்திகள் கசிந்து கொண்டு இருக்கிறது. விண்டோஸ் 7ல் நாம் ஃபைலை காப்பி செய்யும் போது எவ்வளவு சதவீதம் காப்பி ஆகிக் கொண்டு இருக்கிறது என்பது விசுவலாக (Visual) தெரியும். விண்டோஸ் 8ல் புதிதாக இணைக்கப்பட்ட ஒரு ஹார்ட்வேர் எத்தனை சதவீதம் இன்ஸ்ட்டால் ஆகி இருக்கிறது என்பதை காண முடியும்.
பிங் (Bing) இவ்வளவு அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மை இருந்தும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தான் இறங்கிய அனைத்துத் துறைகளிலும் முதல் இடத்தைப் பெற முடியவில்லை. குறிப்பாக, இன்டர்நெட் சர்ச் இஞ்சின் மார்க்கட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், என்ன முயன்றும் முதல் இடத்தின் அருகே கூடப் போக முடியவில்லை. இந்த தேடல் இஞ்சின் பிரிவில், கூகுள் முடி சூடா மன்னனாக மட்டுமல்ல, பேரரசனாக இன்றும் இயங்குகிறது. இந்த பிரிவைப் பொறுத்தவரை கூகுள் 60சத மார்க்கட்டை மிகக் கெட்டியாகப் பிடித்து அடுத்த நிறுவனமான யாஹூவை எங்கோ தள்ளி வைத்துள்ளது.
இந்த வேளையில் தான் கூகுள் நிறுவனத்தின் சர்ச் இஞ்சினுக்குச் சரியான சவாலைத் தர வேண்டும் என்ற எண்ணத்துடன், தன்னுடைய லைவ் சர்ச் (Live Search ) இஞ்சின் இடத்தில் பிங் (Bing) என்ற பெயரில் புதிய சர்ச் இஞ்சினைக் கொண்டு வந்தது. ஆனால் இதனை சர்ச் இஞ்சின் என மைக்ரோசாப்ட் அழைக்கவில்லை. இங்கு அதன் சில சிறப்பம்சங்கள் மற்றும் பிங் எந்த வகையில் சிறந்தது என்று மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட், பிங் சாதனத்தை ஒரு டெசிஷன் இஞ்சின் (Decision Engine)என அழைக்கிறது. இதுவரை மொத்தம் 34 கோடி இன்டர்நெட் வெப் சைட்டுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இணைய தளங்கள் இருக்கையில், தேடுதல் இஞ்சின்களின் பணி நமக்கு ஓர் அத்தியாவசியத் தேவையாகும். ஒரு சர்ச் இஞ்சின் Search Enginer பக்கம் செல்லாமல், இணையத்தில் தகவல்களைத் தேட முடியுமா என்று ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்தால், நமக்கு இதன் முக்கியத்துவம் தெரியும். சர்ச் இஞ்சினுக்கும், டெசிஷன் இஞ்சினுக்கும் என்ன வேறுபாடு? மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, தேடல் ஒன்றை மேற்கொள்கையில் தேவையில்லாமல் கிடைக்கும் குப்பை தளங்களை ஓரளவிற்காவது தடுக்க வேண்டும் என எண்ணுகிறது. இதன் மூலம் தேடும் நமக்கு வேலையை எளிதாக்கி, மிக முக்கியமான தகவல்களை மட்டும் தர திட்டமிடுகிறது.
பிங், நான்கு பிரிவுகளைத் தன் இலக்காகக் கொண்டு தகவல்களைத் தருகிறது. அதன் ஒரே நோக்கம், இணையத்தில் தேடுவதையும், தேடிப் பெறுவதையும் எளிதாக்குவதுதான். இது இதன் ஹோம் பேஜிலேயே தொடங்குகிறது. இங்கு வண்ணமயமான திரையின் நடுவே சர்ச் பாக்ஸ் தரப்பட்டுள்ளது. இடது பக்கம் தேடலுக்கான விடைகள் வீடியோ, நியூஸ், ஷாப்பிங், இமேஜஸ் மற்றும் ட்ராவல்ஸ் அல்லது மேப்ஸ் எனத் தரப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் தேடலைத் தொடங்குகையிலேயே, பிங் ஆட்டோ சஜஸ்ட் (Auto Suggest) என்னும் சாதனத்தை இயக்குகிறது. நீங்கள் தரும் ஒரு சில எழுத்துக்களின் அடிப்படையில் சொற்களைக் கொடுத்து, நீங்கள் தேடுவதில் இவை உள்ளனவா என்று ஒரு பட்டியலைக் காட்டுகிறது. best match என்று சொல்லி நீங்கள் தேடுவதற்கு இதுவே மிகச்சரியான தகவலாக இருக்கும் என்று காட்டுகிறது.
உங்கள் தேடல்களை வகைப்படுத்தி, உங்களுக்கு நினைவூட்டி நீங்கள் தேடும் வேலையை, திசையை எளிதாக்குகிறது. இது பிங் தரும் Explore pane என்பதில் தொடங்குகிறது. ஹோம் மற்றும் முடிவுகள் பட்டியல் அருகே இது காணப்படுகிறது. இதன் மூலம் நாம் நமக்குத் தேவையில்லாத தளங்களை ஒதுக்கலாம். இந்த பிரிவிலேயே, நாம் அண்மையில் மேற்கொண்ட தேடல்களையும், நாம் ஆர்வம் கொள்ளக் கூடிய தளங்களின் பெயர்களையும் காட்டுகிறது.
பிங் தளத்தில் காட்டப்படும் வசதியின் மூலம், நாம் ஒரு தளத்தின் பெயரில் கிளிக் செய்யாமலேயே, அது எப்படி இருக்கும் என ஒரு பிரிவியூவினைக் காணலாம். நம் தேடுதலுக்கானப் போதுமான தகவல்கள் இருந்தால், அந்த தளத்தின் பெயர் மீது கர்சரைக் கொண்டு சென்றால், இந்த பிரிவியூ காட்டப்படுகிறது. இதனைப் பார்த்த பின்னர் இது நாம் தேடும் தளம் என்று முடிவெடுத்து, அதன் மேல் கிளிக் செய்திடலாம். இதனால் தான் பிங் தேடல் சாதனத்தை டெசிசன் இஞ்சின் என்று மைக்ரோசாப்ட் அழைக்கிறது.
இப்படியே பல வழிகளில் தேடல்களை எளிதாக்கித் தகவல்களை நாம் தேர்ந்தெடுத்துக் காண பிங் வழி வகுக்கிறது. கூகுளைப் பொறுத்தவரை அதன் உயிர்நாடி மற்றும் வர்த்தகத்தின் மைய மூலதனமே தேடல் இஞ்சின் (Search Engine) தான். ஆனால் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் உலகில் பல பிரிவுகளைக் கையாள்கிறது. இதன் சர்ச் இஞ்சின் லைவ் சர்ச் (Live Search) ஒரு முழுமையான, இதற்கென மட்டும் வடிவமைக்கப்பட்டதாக அமையவில்லை. கூகுள் இஞ்சினுடன் அதனால் போட்டியிட முடியவில்லை.
ஆகவே தான் மைக்ரோசாப்ட் பிங் இஞ்சினை வடிவமைத்தது. இந்த பிரிவில் முதன்மை தளமாக இயங்கும் கூகுள் இஞ்சினிலிருந்து தனித்துக் காட்ட, தன் பிங் ஹோம் பேஜை வண்ணமயமாக மாற்றியது. இதில், தான் அமைத்துள்ள சில முக்கிய இடங்களை ஹாட் ஸ்பாட் (Hot Spot) என அழைத்தது. இந்த ஹாட் ஸ்பாட் மீது உங்கள் கர்சரைக் கொண்டு சென்றால், அங்குள்ள படம் குறித்து பல தகவல்கள் பாப் அப் (POPUP) ஆகி இதனையா தேடுகிறாய் என்று கேட்கும். இப்படிப் பல வித்தியாசமான வகைகள் மூலம் கூகுளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளது பிங்.
யாஹூ நிறுவனத்தின் சர்ச் இஞ்சினை மேம்படுத்த மைக்ரோசாப்ட் ஏற்படுத்திய பத்து ஆண்டு கால ஒப்பந்தம் கூகுளையும் சற்று திகைக்க வைத்தது. யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. யாஹூ தற்போது சர்ச் இஞ்சின் மார்க்கட்டில் 20 சதம் கொண்டுள்ளது. இத்துடன் மைக்ரோசாப்ட் தேடல் இஞ்சின் செயல்பாட்டினைக் கொண்டால் கூகுள் கொண்டிருப்பதில் பாதியாவது இந்தப் பக்கம் இருக்கும். பிங் வந்த பின்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு 10சதம் ஆக இருந்தது என்பது உண்மை. ஆனால் கூகுள் இடத்தைப் பிடிக்க மைக்ரோசாப்ட் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கான புதிய வழிகளை உருவாக்க வேண்டும்.
ஹாட்மெயில் (HOTMAIL)
ஹாட்மெயில், விண்டோஸ் லைவ் பகுதியாக மைக்ரோசாப்ட்டால் இயக்கப்படும் ஒரு இலவச இணைய அடிப்படையிலான மின்னஞ்சல் சேவை. இது இணையத்தின் முதல் இணைய அடிப்படையிலான மின்னஞ்சல் சேவைகளுள் ஒன்று. பிற முக்கிய மின்னஞ்சல் சேவைகளைப்போலவே ஹாட்மெயிலும் அஜாக்ஸ் நிரலாக்க தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வேலைசெய்கிறது. இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர், பயர்பாக்ஸ், சபாரி மற்றும் கூகுள் குரோம் போன்ற வலை தள உலவிகளை ஆதரிக்கிறது.
சிறப்பம்சம்
ஹாட்மெயில் பல தரப்பட்ட சிறப்பம்சங்களான, கட்டமைக்கப்பட்ட கேள்வி தொடரியல், மின்னஞ்சள் வடிகட்டிகள், மின்னஞ்சள் கோப்புறை அடிப்படையிலான அமைப்பு, குழுப்படுத்துதல் தொடர்பு, குழு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, உயர் உரை வடிவமைப்பு, உயர் உரை கையொப்பங்கள், ஸ்பேம் வடிகட்டுதல், பல முகவரி மற்றும் பல மொழிகளை ஆதரித்தல் போன்ற பண்புகளை உள்ளடக்கியுள்ளது.
நடப்பு காட்சி ஹாட்மெயிலின் நடப்பு காட்சியில் பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் செய்தியில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை நேரடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கிறது. உதாரணமாக எந்த நிகழ்வு இணைப்பு களையும் நேரடியாக நடப்பு காட்சியின் மூலம் முன்னோட்டமிட முடியும். யூடியூப், பிலிக்கர் போன்ற சேவைகளின் உள்ளடக்கங்களை மின்னஞ்சல் செய்தியின் உள்ளே நேரடியாக பார்க்க அனுமதிக்கிறது.
அலுவலக பயன்பாட்டில் ஒருங்கிணைப்பு இணைய உலாவியில் இருந்துகொண்டே, மைக்ரோசாப்ட் ஆபீஸ், வேர்ட், எக்செல், பவர்பாயின்ட் ஆவணங்களை பார்வையிடவும், திருத்தவும், பதிவிறக்கம் செய்யவும், வெப் அப்ஸ் ஒருங்கிணைக்கிறது. விண்டோஸ் லைவ் ஸ்க்கைட்ரைவ் மூலம் ஆவனங்களை 10 ஜிபி வரை பதிவேற்றவும், திருத்தவும், பிற பயனாளிகளுடன் பகிரவும், பார்க்கவும் முடியும்.
பிற அம்சங்கள்
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்-9 மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்தும் பயனாளிகளுக்கு, மின்னஞ்சல் பயன்பாடு இப்போது ஒரு டெஸ்க்டாப் நிரலாக பயன்படுகிறது.
விண்டோஸ்-7ல் நீங்கள் விரைவாக பயன்படுத்த உங்கள் டாஸ்க்பார் திட்டங்களை இணைக்கும் வசதியை அளிக்கிறது. சில பயன்பாடுகள், சில அம்சங்கள் மற்றும் விருப்பங்கள் உங்கள் திரை திறந்து இல்லாமல் இருந்தாலும், நீங்கள் டாஸ்க் பாரில் நேரடியாக பயன்படுத்தலாம். இப்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்-9 ஒரு வலை அஞ்சல் கிளையன்ட்டுக்கு மாறாக டெக்ஸ்டாப் மின்னஞ்சல் கிளையன்ட் போல குத்துதல் அம்சங்களை ஹாட்மெயில் வழங்குகிறது. நீங்கள் ஹாட்மெயில் முகப்பு, இன்பாக்ஸ், நாட்காட்டி, தொடர்புகள் அல்லது ஒரு மின்னஞ்சலை அனுப்ப டாஸ்க்பாரிலிருந்து செல்லமுடியும்.
மோசில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox)
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) க்கு பிறகு பிரபலமாக இருக்கும் பயர்பாக்ஸ் தனது அடுத்த வெளியீடான பதிப்பு 4ஐ வெளியிட்டுள்ளது. இதில் வேகத்துடன் பாதுகாப்பையும் கூட்டியுள்ளது. க்ரோம் 10, IE9 வெளியாகியுள்ள நிலையில் பயர்பாக்ஸின் இந்த பதிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மிக பரவலாக பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளுள் (BROWSER) இது ஒன்றாகும். இது மற்ற இணைய உலாவிகள் தங்கள் கணினியில் பல புதிய முன்னேற்றங்களை செய்தபோதிலும், இன்னும் இணைய பயனர்கள் மத்தியில் மோசில்லா பயர்பாக்ஸ் பிரபலமாக இருக்கிறது. பல உலாவிகளை பார்த்து அதன் நன்மைகளை ஆராய்ந்து பிறகு இணைய பயனர் மத்தியில் வலை உலாவிகளின் ஒரு பயனாளியாக தொடரவும், மோசில்லாவை ஒப்பிட்டால் நன்கு பிடித்திருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். பயர்பாக்ஸ் இணைய பயனர்களுக்கு நம்பமுடியாத அளவில் உலாவுதல் வேகம், இணைய பாதுகாப்பு, வலை இணக்கத்தன்மை மற்றும் ஒரு சிறந்த உலாவல் அனுபவத்தை விளக்குகிறது. இதன் மேம்பட்ட அம்சங்கள் மகிழ்ச்சியடைய வைக்கின்றது.
எளிதாக நிறுவல் தன்மை.அனைத்திலும் சிறந்த விஷயம் பயர்பாக்ஸ் இலவசம் மற்றும் பதிவிறக்க அளவு எளிதானது. பயர்பாக்ஸ் செய்கின்ற முதல் விஷயம் அதன் எளிதாக நிறுவல் தன்மை. பயர்பாக்ஸ் நிறுவும் பொருட்டு ஒரு வல்லுனர் தேவையில்லை. மற்றும் செட் அப் மிக விரைவானது, மற்றும் எளிதானது. மற்றும் எளிதாக ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மாற உதவுகிறது. பல மொழிகளை ஆதரிக்கும்.
வேகம்
இரண்டாவது நன்மை அதன் வேகம். மோசில்லா பெரிதும் உங்கள் உலாவல் வேகத்தை அதிகரிக்கிறது. ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின், உடன் இயக்கப்படுகிறது. எந்த புதிய வலை பக்கங்கள் ஏற்றும் போதும் எவ்வளவு தாமதங்கள் உள்ளன என்பதை உறுதி செய்கிறது.
மற்றொரு சிறப்பான அம்சம் தாவலிடப்பட்ட உலாவல் உள்ளது. இந்த எளிய வழி இன்னும் மிகவும் பயனுள்ளதாக அமைந்து உலாவுதலின் போது, ஒரு சாளரத்தின் இருந்து மற்றொரு சாளரத்தில் மாறுவதற்கு பணி எளிமைப்படுத்தும் அற்புதமான கருவியாகும்.
மோசில்லா பயன்படுத்தி எளிதாக மற்றும் வசதியாக, நேரம் சேமித்து கொடுத்து, பல திறந்த வலை பக்கங்கள் ஆகியவற்றை நிர்வகிக்க முடியும். பயர்பாக்ஸ் செருகுப் பயன்பாடு மற்றும் விரிவாக்கங்களை கொண்டுள்ளது.
செருகுப்பயன்பாடுகளை அது மிகவும் எளிதாக உலாவுதல் செய்கிறது. எந்த இணைய பயனருக்கும் ஒரு பயனுள்ள கருவியாக இருக்கிறது. ப்ளக் இன்கள் (Plug in) மற்றும் விரிவாக்கங்களை எளிதாக பதிவிறக்கம் ஆகிவை (பயர்பாக்ஸ் பதிவிறக்க) பயர்பாக்ஸ் வலைத்தளத்தில் கிடைக்கும்.
பயர்பாக்ஸ் எளிதான அம்சங்களை கொண்ட ஒரு பாப் அப் விளம்பரம் தடுப்பான், இது உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு ஆகும். விளம்பரங்கள் மற்றும் பிற அனிமேசன் பட விளம்பரங்கள் தேவையற்ற பாப் ஆஃப் வார்டுகளில் உள்ள எரிச்சல் விளம்பரங்களை கட்டுப்படுத்தி எளிதாகவும், இறுதியான தீர்வாகவும் உள்ளது. அனைத்து பயனும் நிறைந்த பயர்பாக்ஸ் புதிய மற்றும் மிகவும் பரவலான கணினி வைரஸ்களை எதிர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓபேரா பிரவுசர் (Opera Browser)பிரபலமான உலாவிகளில் ஒன்றான ஓபேரா தனது அடுத்த வெளியீடான பதிப்பு 11 வெளியிட்டு இருக்கிறது. இது 170 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஓபேரா ஒரு இணைய உலாவி இது மென்பொருளாகவும் உருவாக்கப்பட்டு இணைய தொகுப்பாகவும் உள்ளது. இது உலகம் முழுவதும் 270மில்லியன்க்கும் மேற்பட்ட பயனார்களை கொண்டுள்ளது. இந்த உலாவி பொதுவான இணைய தொடர்பான பணிகளை கையாளுகிறது. வலை தளங்களில் மின்னஞ்சல் செய்திகளை பெறவும், மேலாண்மை தொடர்புகள், பிட்டோரன்ட் (Bittorrent) வழியாக பதிவிறக்கும் கோப்புகள், வலை ஓடைகள் வாசிப்பு ஆகியவை இணைய தொடர்பான பலருக்கு முக்கிய பயணாற்றுகிறது.
ஓபேரா தனிநபர் கணினிகள் மற்றும் மொபைல் போன்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஓபேரா உக்ரைன் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமான டெஸ்க்டாப் உலாவியாகவும் உள்ளது. ஓபேரா மினி இது மிகவும் பிரபலமான மொபைல் வலை உலாவி ஆகும். அந்தந்த உற்பத்தியாளர் களின் மொபைல் கைபேசிகள் முன்னிருப்பாக ஒருங்கிணைந்த இணைய உலாவியாக தேர்வு செய்யப் பட்டிருக்கிறது.
விக்கிபீடியா (Wikipedia)
விக்கிபீடியா (Wikipedia) என்பது அனைவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் பல எழுத்தாளர் களால் உருவாகிக் கொண்டுவரும் ஒரு உன்னதமான, உபயோகமான, பாதுகாக்கப்படவேண்டிய கலைக்களஞ்சியம். அனைவருக்கும் பயன்படக்கூடிய உலகின் ஒரே ஒரு இலவச கலைக் களஞ்சியம்.
அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச்சேர்ந்த ஜிம்மி வால்ஸ் (Jimmy Wales) என்பவர் விக்கிபீடியா நிறுவனத்தை தோற்று வித்தார். பணம் சம்மந்தப்பட்ட ஒரு வியாபார நிருவனத்தில் வேலை செய்துகொண்டே இந்நிறுவனத்தை ஏற்படுத்தினார். இந்நிறுவனத்தின் வருமானத்தை எதிர் பார்க்காமால், தான் ஒரு பேச்சாளராகவும் செயல்பட்டு, செல்லும் இடமெல்லாம் பேச்சாற்றல் மூலம் தினமும் சொந்தமாக சம்பாதித்துக் கொண்டு வருகிறார்.
விக்கிலீக்ஸ் (Wikileaks)
ஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange) என்பவர் ஆஸ்த்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும். பேச்சாளராகவும் உள்ளார்.
விக்கிலீக்சைத் (Wikileaks) தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார். அசான்ச் 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்த்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங் களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார். அசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்தது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அசான்ச், இது விக்கிக் கசிவுகளினால் பாதிக்கப் பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறினார். இருப்பினும் இவர் லண்டன் போலீசாரிடம் சரணடைந்த பிறகு கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்தே பிணையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
டிஎன்ஏ கணினி (DNA Computer)
கணினியின் சில்லு உற்பத்தியாளர்கள் அடுத்த தலைமுறை மீச்சிறுசெயலி (Microprocessor) உற்பத்தி செய்வதற்கு தயாராக இருப்பார்கள். சிலிக்கன் மூலப் பொருளால் உற்பத்தி செய்யப்படும் இந்த மீச்சிறு செயலியின் வேகமும் சிற்றளவாக்கமும் (Miniaturization) அதன் எல்லையை அடைந்துவிட்டது. மேலும் ஒவ்வொரு 18 மாதத்திற்கு பிறகு மீச்சிறுசெயலியின் கொள்ளவும் வேகமும் இருமடங்கு உயர்ந்து கொண்டே யிருக்கும் என்ற மூர்ஸ் விதி அதன் எல்லையை சென்றடைந்து விட்டது. அதனால் இந்த சிலிக்கன் சில்லை விட வேகமான புதியதொரு பொருளை இதன் உற்பத்தியாளர்கள் தேடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆனால் நம்முடைய உடலிற்குள் இயற்கையாக இலட்சக் கணக்கில் உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகள் நம்மால் உருவாக்க படும் மீக்கணினியைவிட பலமடங்கு வேகத்திலும், கொள்ள ளவிலும், அதிக திறன்வாய்ந்ததாக உள்ளன என்ற செய்தியை, நாம் இதுவரையில் அறியாமலேயே உள்ளோம். இவைகளை ஒருங்கிணைத்து உயிர்சில்லு என்பது உருவாக்க பட்டு தற்போதைய கணினியைவிட பலமடங்கு வேகத்திலும் மிகச்சிறிய உருவிலும் வருங்காலத்தில் வெளியிடப்பட வுள்ளன. அவ்வாறு உருவாக்கபடும், டிஎன்ஏ கணினியானது தற்போதைய சிலிக்கன் சில்லு கணினியைவிட பில்லியன் மடங்கு அதிக நினைவக கொள்ளளவு திறனும், வேகமும், கொண்டதாக இருக்கும்.
ரோசெஸ்டர் பல்கலைகழகத்தில் ஆடில்மேன்ஸ் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்த டிஎன்ஏ உயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட லாஜிக்கேட்டை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சிலிக்கன் ட்ரான்ஸிஸ்டர் (Silicon Transistors) வாயிலாக லாஜிக்கேட்டில் வரும் மின் சைகைகள் உருமாற்றபட்டு கணினியின் சிக்கலான கணக்கீடுகளுக்கும் செயல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் இந்த டிஎன்ஏ உயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட கணினியில் ஜெனடிக்கேட் (Genetic Gate) எனப்படும் அன்டுகேட் (AND GATE ) பயன்படுத்தபட வுள்ளது. இதில் உயிர்பொருளே உள்ளீடாகவும், டிஎன்ஏ உயிர் மூலக்கூறில் ஏற்படுத்தபடும் வேதியியல் மாற்றமே, சைகைகளாகவும் கொள்ளபட்டு செயற்படுத்தபடுகின்றது.
இந்த டிஎன்ஏ உயிர்மூலக்கூறு கணினியின் பயன் பின்வருமாறு:
1.அதிகஅளவு டிஎன்ஏ உயிர்மூலக்கூறு இயற்கையில் கிடைப்பதால் கணினியின் உற்பத்தி விலை மிககுறைந்த அளவாகவே இருக்கும்.
2.இந்த டிஎன்ஏ உயிர்மூலக்கூறினால் உற்பத்தி செய்யப்படும் கணினியால் சிலிக்கன் சில்லால் உற்பத்தி செய்யபடும் கணினி போன்று சுற்றுசூழல் பாதிக்காது.
3.இந்த டிஎன்ஏ உயிர்மூலக்கூறினால் உற்பத்தி செய்யப்படும் கணினியினாது தற்போதைய கணினியைவிட உருவ அளவில் மிகமிக சிறியதாக இருக்கும்.
4.ஒரு பவுன்டு டிஎன்ஏ உயிர்மூலக்கூறானது தற்போதைய மின்னோட்ட கணியைவிட பலமடங்கு கொள்ளளவு திறன்கொண்டதாகும்.
5.டிஎன்ஏ உயிர்மூலக்கூறின் லாஜிக்கேட்டானது தற்போதைய மீள்வேக கணினியை (Supercomputer) விட அதிக திறன்வாய்ந்ததாகும்.
6.ஒரு கனசென்டிமீட்டர் டிஎன்ஏ உயிர் மூலக்கூறானது 10 டிரில்லியன் அதாவது 10 டெராபைட் கொள்ளளவு திறன் கொண்டதாகும்
7.தற்போதைய மின் கணினியானது ஒருசமயத்தில் ஏதேனுமொருபணியைமட்டும் செய்யக்கூடியதாகும். ஆனால் இந்த டிஎன்ஏ உயிர் மூலக்கூறு கணியானது ஒரே சமயத்தில் பலசெயல்களை இணையாக செய்யக்கூடியது. அதனால் மிக சிக்கலான கணக்கீடுகளை ஒரிரு மணித்துளிகளில் இது செய்யும் செயலை, தற்போதைய கணினியானது தீர்வுசெய்ய பலநூறுஆண்டுகளாகும்.
துகள் கணினி (Quantum Computer)
ஒரு கணினியென்பது (0,1) ஆகிய பைனரி (Binary) எனப்படும் இரு நிலை குறிமொழியால் கட்டமைக்கபட்டதாகும். அதனால் தரவு களனைத்தும், இந்த 0,1 ஆகிய இருநிலை குறிகளின் அடிப்படையிலேயே எந்தவொரு கணினியிலும் தேக்கி வைக்கப்படுகின்றன. இதனுடைய செயல்களும் இந்த இருநிலை குறிகளையே கட்டளையாக கொண்டு அமைகின்றன. ஆனால் இந்த இருநிலை குறியீட்டு கட்டளைகள் எந்தவொரு சமயத்திலும் 0 அல்லது 1 ஆகிய ஒன்றில் ஏதேனும் ஒருநிலை மட்டுமே, செயலில் இருக்கும். ஆனால் துகள் கணினியில் துகள் நிலைபிட்களை அதாவது quantum bits அல்லது qubits உருவாக்கபடுகின்றன. இந்த qubits ஆனது சாதாரன கணினி போன்றில்லாமல் ஒரேசமயத்தில் 0,1 ஆகிய இரண்டு நிலைகளிலும் இருக்குமாறு செயல்படுகின்றன.
இந்த qubits அடிப்படையில் மிக சிக்கலான செயல்களும் எளிதாக தற்போதைய கணினியைவிட மிகவேகமாக தீர்வுசெய்யமுடியும். மேலும் அவ்வாறான சிக்கலான பிரச்சினைகளுக்குமான பல்வேறுவகை தீர்வுகளை ஒரே சமயத்தில் ஓரிரு வினாடிகளின் கிடைக்கின்றன. அமெரிக்க ஐக்கியநாடுகள் முழுமைக்கும் இவ்வாறான ஆறு கணினியே போதுமானதாகும்.
மூர் விதியின்படி ஒவ்வொரு 18 மாதத்திலும் மைக்ரோப்ராஸஸரில் (microprocessor) உள்ள ட்ராண்ஸிஸ்ட ரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதன் அடிப்படையில் கணக்கிடும் 2020 அல்லது 2030ல் ப்ராஸஸருக்குள் ட்ரான்ஸிஸ்டர்களை உள்ளினைத்து, இடமே இல்லையெனும் நிலை ஏற்படும். அப்போது கணினியின் திறனை மேலும் அதிகப்படுத்திட இந்த துகள்கணினி எனும் கருத்தமைவுதான் கைகொடுக்கபோகின்றது.
அயர்ன் ட்ராப்ஸ், ஆப்டிக்கல் ட்ராப்ஸ், குவாண்டம் டாட்ஸ், செமிகண்டக்டர் இம்பியுரிட்டிஸ், சூப்பர் கண்டக்டிங் சர்க்யூட்ஸ் ஆகிய சாதனங்கள் Qubit Control அடிப்படையில் இந்த துகள் கணினி (Quantum Computer) யைபோன்று இயங்கவுள்ளன. இந்த ஒரேசமயத்தில் 0,1ஆகிய இரண்டும் சேர்ந்த நிலையை ணுரெவை ன் மேல்நிலையில் (Superposition) செயல்படுவதால், மில்லியன் கணினிகள் ஒரே சமயத்தில் இணையாக இயங்கமுடியும்.
தற்போதைய கணினியானது (gigaflops) ஒரு பில்லியன் செயல் ஒருநொடிக்கு என்பது துகள் கணினி (Quantum Computer)யில் 10 டிரில்லியன் (10 teraflops) செயல் ஒரு நொடிக்கு செயல்படுத்த கூடியதாகும்.
அதனால் வருங்காலத்தில் சிலிக்கனின் அடிப்படையில் உருவாக்கபடும் கணினியானது துகள்கணினியின் அடிப் படையில் உருமாறவிருக்கின்றது என்பதுதான் உண்மை.
யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் (USB Safely Remove)
விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல மூன்றாம் நபர் (third party) புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.
1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள (third party) புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோ கிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப் பார்க்கலாம்.
2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.
3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும்படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.
4. யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப் படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படவேண்டியவை!
மற்ற மின்னஞ்சல் யாஹூ, ஹாட்மெயில் நிறுவனங்களில் இருந்து தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை தற்போது பலர் கூகிள்க்கு மாற்றி விட்டார்கள். தனது மின்னஞ்சல் சேவையில் பல வசதிகளை வெளிப்படையாகவும், பல வசதிகளை வேண்டும் என்றால் பயன்படுத்திக்கொள்ளும் படியும் அமைத்துள்ளது, இதை ஆய்வுகூடமாக(Labs)கூறுகிறது. இதில் பல பயனுள்ள விஷயங்கள் உள்ளது, இதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை நீங்கள் கூகிள் மின்னஞ்சலில் Settings ஐ சொடுக்கினால் அதில் (Labs) என்று இருக்கும், அதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள், அதில் சில முக்கிய மானவற்றின் பயனை பார்ப்போம்.Inserting Images: இதன் பயன் என்னவென்றால் படங்களை நமது விருப்பப்படி மின்னஞ்சல் அனுப்பும் போது அமைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பார்வர்ட் மின்னஞ்சல்களுக்கு மிகவும் பயன் தரும். படத்தை பற்றி விளக்கம் பிறகு படம், இதே போல விளக்கங்கள் கூறி படங்களை இணைக்கலாம், இல்லை என்றால் மொத்த படங்களும் இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும். அதன் விளக்கங்கள் எதற்கு என்று தெரியாமல் அணிவகுத்து இருக்கும்.
Default Reply to all: ஒரு சிலர் குழுவாக (தனி குழும மின்னஞ்சல் இல்லாமல்) அடிக்கடி தனது நண்பர்களுக்குள் மின்னஞ்சல் செய்பவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இதை இணைத்தால் Reply to all என்பது வலது ஓரத்தில் மேலே வந்து விடும் (வழக்கமாக இருக்கும் Reply ம் இருக்கும்) இதனால் எளிதாக அனைவருக்கும் அனுப்பலாம்.
Hide Unread Counts: முன்பெல்லாம் மின்னஞ்சல் வருவது குறைவு. தற்போதெல்லாம் நண்பர்கள் மின்னஞ்சல், குழும மின்னஞ்சல், பல தளங்களில் சப்க்ரைப் (subscribe) செய்து இருந்தால் அந்த மின்னஞ்சல்கள் என ஏகப்பட்டது வருகிறது. இது எத்தனை வந்துள்ளது என்ற எண்ணிக்கை Inboxல் தெரியும், இது உறுத்தலாக தெரிந்தால் இந்த எண்ணிக்கையை இதை இணைப்பதின் மூலம் மறைக்கலாம்.
Right side chat:கூகிள் உரையாடியில் (chat)மறைந்து இருக்கும் (Invisible mode) வசதி இல்லை, ஆனால் கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் இது உள்ளது. இதனால் பலர் இந்த வசதியை பயன்படுத்த கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் தான் இணைந்து இருப்பார்கள். இது வழக்கமாக இடது புறத்தில் இருக்கும், அதனுடன் டுயடெநகள் இருப்பதால் ரொம்ப கீழே இருக்கும். இதை தவிர்க்க இதை இணைத்தால் உரையாடி பகுதி வலது புறத்தில் மாறி விடும்.
Pictures in chat: இதை இணைப்பதின் மூலம் நம்முடன் உரையாடுபவர் படம் (அவர்கள் இணைத்து இருந்தால்) நமக்கு தெரியும்.
Mark as read: தேவையற்ற மின்னஞ்சல்கள் பல நமக்கு வரும் அல்லது அந்த மின்னஞ்சலில் என்ன இருக்கும் என்று முன்பே தெரியும். எனவே படிக்காத மின்னஞ்சல்களாக (unread mails) இருப்பது எரிச்சலை தரலாம். எனவே அவை அனைத்தையும் மொத்தமாக தேர்வு செய்து Mark as read பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்தும் படிக்கப்பட்ட மின்னஞ்சல்களாக (read) மாறி விடும்.
You Tube Previews in mail : இது நமக்கு You Tube சுட்டி (link) மின்னஞ்சலில் வந்தால் அதன் முன்னோட்டத்தை நமக்கு மின்னஞ்சலின் கீழ் பகுதியில் சிறிய அளவில் காட்டும். நாம் மவுஸை எடுத்துச் (mouse) செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதைப்போல வசதி ஞைஉயளய மற்றும் Flickr க்கு உண்டு.
Undo Send: இது மிகவும் பயனுள்ள ஒன்று, நாம் எப்போதும் அவசரமாக ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மாற்றி தவறுதலாக மற்ற ஒருவருக்கு அனுப்பி விடுவோம். இதற்கு தான் கூகிள் தரும் இந்த வசதி. நாம் மின்னஞ்சல் அனுப்பிய பிறகு அதை கூகிள் அனுப்பாமல் சில நொடிகள் வைத்து இருக்கும், அதற்குள் நம் தவறை உணர்ந்து விட்டால் Undo Send ஐ அழுத்துவதன் மூலம் அதை அனுப்பாமல் தவிர்க்கலாம்.
ஜிமெயில் (Gmail)
மின்னஞ்சலுக்கான அணுகுமுறை
மின்னஞ்சலானது மிக இயல்பான தாகவும், அதிக திறனுடனும், பயனுள்ள தாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டது.
அதிக இடம், இலவச சேமிப்பிடம். குறைந்த ஸ்பேம், தேவையற்ற செய்திகளை உங்கள் இன்பாக்ஸிற்கு வெளியே வைக்கும். விரைவான தேடல், தேடலைப் பயன்படுத்தி, எப்பொழுது அனுப்பியது அல்லது பெற்றது என்ற கவலையின்றி உங்களுக்கு தேவையான செய்தியைக் கண்டறியலாம்.
ஜிமெயில் ஒரு அற்புதமான மின்னஞ்சல் சேவை என்பது இதைப்பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். பயன் படுத்தாதவர்கள் கூட இது பற்றி பல விஷயங்கள் தெரிந்து வைத்து இருப்பார்கள்.
இதில் கூறப்படும் சேவைகள்/வசதிகள் சில நீங்கள் தற்போது பயன்படுத்தும் மின்னஞ்சலில் (Yahoo , Hotmail , Rediff) இருக்கலாம். இருப்பினும் இது போல அனைத்து வசதிகளும் நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சலில் இருக்காது என்பதை உறுதியாகக் கூற முடியும். இதில் உள்ள முக்கிய பயன்கள்.
வேகம் (SPEED)
எப்போதுமே நாம் பயன்படுத்தும் மென்பொருளா கட்டும், கணினியாகட்டும், வேகமாக இருந்தால் தான் நமக்கும் பயன்படுத்த விருப்பம் இருக்கும். இல்லை என்றால் ஒன்றை க்ளிக் செய்து விட்டு அது திறப்பதற்க்காக காத்துக்கொண்டு இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனை ஜிமெயிலில் கிடையாது. தேவையற்ற விஷயங்களை நீக்கி, மல்டிமீடியா சம்மந்தப்பட்ட விஷயங்களை குறைத்து, எவ்வளவு விரைவாக திறக்க முடியுமோ அந்தளவு துள்ளியமாக உதவி செய்கிறது. ஜிமெயில் அஜக்ஸ் (Ajax) என்ற தொழில்நுட்ப முறையை சிறப்பாக பயன்படுத்துகிறது. எனவே அதனுடைய வேகம் மற்ற மின்னஞ்சல்களை விட அதிவேகத்தில் உள்ளது. புது மின்னஞ்சல் வந்தாலோ, Reply செய்தாலோ, Forward செய்தாலோ தாமதம் செய்யாமல் அடுத்த நொடியே நடக்கும். மற்ற மின்னஞ்சல்களில் சில நொடிகளுக்கு பிறகே எதுவும் நடக்கும்.
எளிமை (SIMPLICITY)
கூகுள் என்றாலே எளிமை தான். இதை கூகுள் தளத்தின் முகப்புப் பகுதியில் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இதையே தான் தன்னுடைய ஜிமெயில் சேவைக்கும் பின்பற்றுகிறது. அனைத்தையும் நீக்கி தேவைப்படும் நேரங்களில் மட்டும் அந்த வசதி நமக்கு தெரியும்படி மாற்றி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக இடது புறம் Inbox, sent mail, Compose mail மட்டுமே இருக்கும் மற்றவை தேவை என்றால் அங்கே நமது மவுசை கொண்டு சென்றால் போதும் அவை தெரியும்படி அமைத்து இருப்பார்கள். அது போல Delete, Forward spam என்று எதுவும் முகப்பில் இருக்காது. நீங்கள் ஒரு மின்னஞ்சலை தேர்வு செய்தால் மட்டுமே அவை தெரியும். காரணம் தேர்வு செய்யாமல் நாம் Delete, forward அல்லது வேறு லேபிள் செய்ய முடியாது. அப்புறம் எதற்கு அவை தெரிய வேண்டும். பல முறை யோசித்து செய்த ஏற்பாடு அனைவரையும் மலைக்கவைக்கிறது.
ஸ்பாம் (Spam)
மிகப்பெரிய பிரச்சனை இது தான். நமக்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் இருந்து எல்லாம் மின்னஞ்சல் வரும். லாட்டரி பரிசு சீட்டு விழுந்ததாக, உங்கள் வங்கி விவரங்களைக் கேட்டு, வயாகரா மாத்திரை வாங்கக்கூறி, ஆபாச மின்னஞ்சல்கள் என்று வந்து குவியும். இவை ஜிமெயிலில் கிடையாது. அல்லது மிகக் குறைவான அளவு வருகிறது. மிகத் திறமையான தொழில்நுட்ப முறையில் இவற்றை வடிகட்டி விடும். இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. விஷயம் தெரிந்தவர்கள் ஓரளவு சமாளிக்கலாம். ஒன்றுமே தெரியாதவர்கள் ஸ்பாம் விஷயத்தில் ஏமாற அதிக வாய்ப்புள்ளது. இதைவிட முக்கியமான ஒன்று. நம் அனுமதி இல்லாமலே நாம் அனுப்பவது போல வயாகரா விளம்பரங்கள் நம்முடைய உடிவேயஉவல் உள்ளவர்களுக்கு சென்று விடும். இதை சந்திக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக யாஹூ வில் இருந்து அதிகம் வரும்.
போல்டர் / லேபிள் (Folder/Label)
யாஹூல் இருந்த போல்டர் வசதி ரொம்ப உபயோகமாக இருந்தது. மின்னஞ்சல்களை பிரிக்க எளிதாக இருந்தது. ஜிமெயிலில் போல்டர் வசதி இல்லை. ஆனால் அதற்கு இணையாக லேபிள் வசதி உள்ளது. இதுவும் போல்டர் போலத் தான். ஆனால் வேறு மாதிரி. ஜிமெயில் பயன்படுத்திய பிறகு தான் இது எவ்வளவு எளிமை, இதனால் எப்படி எளிதாக அனைத்தையும் பிரிக்க முடியும் என்று புரியும்.
தேடல் (Search)
கூகுள் என்றால் தேடல் தான் பிரபலம். தனது ஜிமெயிலிலும் இதை உட்புகுத்தியுள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையான மின்னஞ்சல்களை நொடியில் கண்டறிய முடியும். அட்வான்ஸ் தேடுதல் முறையில் தேடுதலை இன்னும் எளிமை ஆக்குகிறது. கூகுள்க்கு பிடிக்காத ஒரே வார்த்தை சிரமம். சங்கடமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியும். நாம் சில நேரங்களில் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை தவறுதலாக மற்றொருவருக்கு அனுப்பி விடுவோம். SEND பட்டனை அழுத்திய பிறகே உணர்வோம் ஆனால் மின்னஞ்சல் சென்று விடும். அதே போல அவசரமாக தட்டச்சு செய்யும் போது சில விஷயங்களை மறந்து அனுப்பி இருப்போம். இதைத் தடுக்க நீங்கள் 30 நொடி வரை இதை ஜிமெயிலில் தாமதிக்க வைக்கலாம். அதாவது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியும் 30 நொடி வரை செல்லாமல் இருக்கும். உங்களுக்கு காத்திருக்க தேவையில்லை என்றால் Inbox அல்லது வேறு எதை க்ளிக் செய்தாலும் உடனே சென்று விடும். இதன் மூலம் தர்மசங்கடமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியும்.
குழும மின்னஞ்சல்கள் (மெயில் லூப்)
ஜிமெயிலில் உள்ள ஒரு அற்புதமான வசதி. இது ஒன்றிக்காகவே இதைப் பயன்படுத்துபவர்கள் பலர். இதன் வசதி என்னவென்றால் குழும மின்னஞ்சல்கள் ஒரே தலைப்பில் வரும் போது தனித்தனியாக இல்லாமல், ஒரே மின்னஞ்சலிலேயே ஒன்று இரண்டு என்று சேர்ந்து கொண்டு இருக்கும். இதன் மூலம் எடுத்துக்காட்டாக பத்து பேர் இந்தத் தலைப்பில் அனுப்பி இருந்தால், ஒரே பக்கத்தில் ஒரே முறையில் படிக்க முடியும். நமக்கு வரிசையாக படிக்க எளிதாக இருக்கும். ஒவ்வொன்றாக திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதனால் உங்கள் மின்னஞ்சல் எண்ணிக்கையின் அளவு குறைவாகத் தெரியும். இதே யாஹூ, ஹாட்மெயில் என்றால் குழும மின்னஞ்சல்களில் இருந்து மின்னஞ்சல்கள் வந்து குப்பை மாதிரி சேர்ந்து குவிந்து விடும்.
ஜிமெயில் மீட்டர்
இந்த வசதி தற்போது தான் கொண்டு வந்துள்ளார்கள். இதன் மூலம் நாம் மாதாமாதாம் என்ன செய்து இருக்கிறோம் என்ற அறிக்கையை தானியங்கியாகப் பெற முடியும். அதாவது எத்தனை மின்னஞ்சல் வந்துள்ளது, யாருக்கு அதிகம் அனுப்பி இருக்கிறோம், யார் உங்களுக்கு அதிகம் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்கள், எந்த நேரத்தில் மின்னஞ்சல் பயன்பாடு அதிகம் உள்ளது என்று விவரமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் கிராப் (Graph) முறையிலும் தகவல்கள் தரப்படும். எனவே புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். நாம் விரும்பினால் வருடத்திற்கு ஒரு முறை கூட விவரங்கள் பெற முடியும். எடுத்துக்காட்டாக 2005 ல் இருந்து எவ்வளவு மின்னஞ்சல்கள் வந்துள்ளன என்று மேற்கூறிய முறையில் பார்க்க முடியும். ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கே பலருக்கு இந்த வசதி இருப்பது தெரியாது.
பாதுகாப்பு
எல்லாவற்றையும் விட முக்கியமானது பாதுகாப்பு. நீங்கள் எதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இதை உங்களால் மறுக்க முடியாது. பாதுகாப்பில் நம்மை தயார் படுத்துவதில் ஜிமெயில்க்கு நிகர் எந்த மின்னஞ்சல் நிறுவனமும் இருக்க முடியாது. நீங்கள் வழக்கமாக ஒரு இடத்தில் லாகின் செய்கிறீர்கள் என்றால் உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து பயன்படுத்திக்கொண்டு இருந்தால் நம்மை உஷார் படுத்தும். வேறு IP-யில் இருந்து லாகின் செய்து இருக்கிறார்கள் என்று.
இன்டர்நெட் சென்டர் செல்கிறீர்கள். Login லாகின் செய்து விட்டு மறந்து லாஃகவுட் Logout செய்யாமல் வந்து விடுகிறீர்கள். உடனே வேறு இடத்தில் லாகின் செய்து மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள அமர்வுகளை (session) நீங்கள் லாஃகவுட் செய்து விடலாம். திரும்ப அங்கேயே சென்று இதைச் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. அதே போல Account Activity யில் சென்று எந்தெந்த IP யில் இருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் உடனடியாக நமது கடவுச்சொல்லை Password மாற்றி விடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் கணக்கு திறந்து இருந்தால் நமக்கு எச்சரிக்கைப்படுத்தும். நாட்டின் பெயருடன் இருப்பதால் நம்மால் எளிதாக அறிய முடியும்.
இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!
2 step verification என்ற வசதி இருக்கிறது. இது தான் முதன்மை வசதி ஆகும். இது என்ன வசதி என்றால் வழக்கமாக நாம் எல்லோரும் கடவுச்சொல் (Password) கொடுத்து உள்ளே செல்வோம். இந்த வசதியை செயல்படுத்தி விட்டால் அதன் பிறகு நமக்கு ஒரு SMS வரும் அதை இதில் கொடுத்த பிறகு தான் நுழைய முடியும். இதன் மூலம் உங்கள் (Password) கடவுச்சொல்லை தெரிந்து கொண்டாலும், உங்கள் SMS பார்க்க முடியவில்லை என்றால் யாரும் ஹேக் செய்ய முடியாது. உதாரணத்திற்கு உங்கள் வங்கிக்கணக்கில் நுழைய சில வங்கிகள் SMS மூலம் code அனுப்புவார்கள் அதே முறை தான் இதற்கும்.
ஹேக் என்பது ஒரு திறமையான செயல். உங்கள் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தம் இல்லை. உங்களை யாரும் ஹேக் செய்ய முயற்சிக்கவில்லை என்று அர்த்தம். இந்த இரட்டை அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஹேக் செய்பவர்கள் இருப்பார்கள். விக்கி லீக்ஸ் அசாங்கே பற்றி எல்லாம் தெரிந்து இருப்பீர்கள். கடுமையான பாதுகாப்பு களைக் கொண்ட பல இடங்களையே ஆட்டிப்படைத்தவர்கள். எப்படி இருந்தாலும் ஹேக் செய்து விடுவார்கள் என்று அசட்டையாக இருப்பதை விட இது போல பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொள்வது நமக்கு நல்லது. ஹேக் வாய்ப்புகளை குறைக்கும்.
மின்னஞ்சலில் கூடுதல் வசதி
நீங்கள் ஒரு மின்னஞ்சல் தட்டச்சு செய்யும் போது உங்களுடைய ஐேடெஒ செல்ல வேண்டும் என்றால் அதாவது வேறு மின்னஞ்சலை சரி பார்க்க வேண்டும் என்றால் இதை னுசயகவ ல் போட்டு விட்டு தான் போக முடியும், ஒரே சமயத்தில் செய்ய முடியாது. இதற்கு கூகிள் தரும் புதிய வசதி தான் Fast Window. நீங்கள் புதிய மின்னஞ்சல் தட்டச்சு செய்யும் போதே உங்கள் Inbox செல்ல விரும்பினால் நீங்கள் கம்போஸ் செய்யும் ஜன்னலில் வலது பக்கம் இரு சிறு பெட்டி இருக்கும் அதை க்ளிக் செய்தால் உங்களுடைய தற்போதைய ஜன்னல் (compose window) தனியாகவும் உங்கள் மின்னஞ்சல் முகப்பு பக்கம் அதாவது Inbox பகுதி முழுமையாகவும் வந்து விடும், பிறகு உங்களுக்கு தேவையான தகவல்களை அங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்.
இழுத்தலும் இணைத்தலும் (Attachment Drag and Drop)
மின்னஞ்சலில் புயலைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் ஜிமெயிலின் அடுத்த வசதி இது. இனி நீங்கள் உங்கள் ஃபைல் மற்றும் படங்களை எளிதாக னுசயப யனே னுசடியீ செய்து இணைக்கலாம். பழைய முறையும் அப்படியே உள்ளது. உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அந்த முறையில் நீங்கள் உங்கள் இணைப்பை மேற்கொள்ளலாம். கூகுள்ப்ரோபைல் (Google Profile)
கூகுள் தன்னுடைய பயனாளர்கள் ப்ரோபைலை மேம்படுத்தியுள்ளது. நம் விருப்பப்படி எளிதாக மாற்றிக்கொள்ள வசதி ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு பழைய வடிவமைப்பை விட இது அழகாகவும் உள்ளது.
பழைய மின்னஞ்சல்களை ஜிமெயில்க்கு கொண்டு வருவது?
இது மிக மிக அடிப்படையானது. ஏனென்றால் அனைத்தையும் மாற்றுவது என்பது ஒரு அலுவலகத்தை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு மாற்றுவதற்கு நிகரானது. முகவரி, தொலைபேசி எண், பொருட்கள், கணினி, நெட்வொர்க் என்று அனைத்தையும் மாற்றம் செய்வது போல சிரமமான பணி.
ஜிமெயில் இதற்காகவே ஒரு வசதி தந்துள்ளது. உங்களுடைய தற்போதைய மின்னஞ்சல் முழுவதையும் ஒன்று விடாமல் உங்கள் புதிய ஜிமெயில் கணக்கில் இம்போர்ட் செய்ய முடியும், அதாவது எந்த வித மாற்றமுமில்லாமல் தேதி, நேரம், உட்பட. மிக மிக எளிதானது. இதை தொடங்கி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். உங்களின் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். முடிந்தவுடன் உங்களுக்கு தானியங்கியாக அறிவிப்பு வரும். இதில் மின்னஞ்சல் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள் முகவரிகளையும் இதுபோல செய்து விடலாம். உங்கள் மின்னஞ்சல்கள் ஒரு லேபிளில் வகைப்படுத்தப்படும் எடுத்துக்காட்டு contact@gmail.com இதன் மூலம் நீங்கள் பழைய முகவரி மின்னஞ்சல்களை எளிதாக இனம் காண முடியும்.
உங்களுடைய புதிய மின்னஞ்சல் கணக்கில் இருந்து உங்கள் contact ல் உள்ள அனைவருக்கும் நான் இந்த புதிய முகவரிக்கு மாறி விட்டேன். எனவே உங்கள் contact ல் இந்த முகவரியை அப்டேட் செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விடுங்கள்.
ஜிமெயில்க்கு மாறினாலும் தொடர்ந்து பழைய மின்னஞ்சலுக்கே அனுப்புவார்களே?
இது நடைமுறை பிரச்சனை தான். நீங்கள் ஜிமெயில்க்கு மாறிய பிறகு Auto Reply / Vacation response Enable செய்து விடலாம். அதிக பட்சம் ஒரு மாதம் உங்கள் பழைய மின்னஞ்சல் கணக்கில் பதில் அளிக்கலாம். அது கூட இனி இதற்கு அனுப்பாதீர்கள்! என்னுடைய புதிய ஜிமெயில் ஐடிக்கு அனுப்பி விடுங்கள், என்று கூறி விடுங்கள். அப்புறமும் ஒரு சிலர் தங்கள் contact அப்டேட் செய்யாமல் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். அதற்கு பதில் தராதீர்கள். பின் அவர்களே அதற்கு அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள். நீங்கள் பதில் அனுப்பிக்கொண்டு இருந்தால், இதிலேயே தான் வந்து கொண்டு இருக்கும். எப்படி உங்கள் மொபைல் எண்ணை மாற்றினால் நீங்கள் அறிவித்தும் உங்கள் பழைய எண்ணையே தொடர்பு கொள்வார்கள். அது போலத் தான். எனவே இந்தத் தவறை செய்யாதீர்கள். இதோடு மிக முக்கியமான விஷயம் பல்வேறு இடங்களில் (வங்கி, மொபைல் நிறுவனம்) உங்களுடைய பழைய மின்னஞ்சல் முகவரியே இருக்கும். இங்கே சென்று உங்கள் புது முகவரியை மறக்காமல் அப்டேட் செய்ய வேண்டும்.
மேற்கூறியவை எல்லாம் மிக முக்கியமான வசதிகள் மட்டுமே. இவை அல்லாமல் ஏராளமான வசதிகளை ஜிமெயில் தருகிறது. வாரம் ஒரு புது வசதி வந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு சிறப்புள்ள ஜிமெயிலை பயன்படுத்தி புதிய வசதிகளை, தொழில்நுட்பங்களை அனுபவியுங்கள். இது ஜிமெயில் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமல்ல பயன் படுத்துகிறவர்களுக்குக் கூட, காரணம் பலர் இதன் அருமை தெரியாமலே பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிறப்பான மின்னஞ்சலை பயன்படுத்திக்கொண்டு இருக் கிறோம் என்று தெரிந்து பயன்படுத்துங்கள். பணம் கொடுத் தால் கூட இவ்வளவு வசதி தருவார்களா என்பது சந்தேகம் தான்.
யூ டியூப் (YouTube)
இணையத்தை பயன்படுத்துபவர்களில் யூடியூப் (YouTube) பற்றி தெரியாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு. தற்போது தினமும் ஒரு பில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த தளம் துவங்கப்பட்டது ஏப்ரல் 23, 2005அன்று. இந்த வீடியோ உடன், இது வரை பல கோடி பேர் இதை பார்த்துள்ளனர். அதன் பிறகு 2005 அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக துவங்கப்பட்டது. இதன் பிறகு 2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்ததளத்தை கூகிள் கையகப்படுத்தியது. தற்போது கூகிளின் மார்க்கெட் தந்திரத்தால் பணம் கொழிக்கும் ஒரு தளமாக உள்ளது.
யூடியூப் இல்லாத இணையத்தை நினைத்து பார்க்கவே முடியாது, என்ற நிலையில் இதன் பயன்பாடு நிறைந்துள்ளது. உலகளவில் பாண்ட் விட்த்தை (Band Width) ஐ அதிகம் எடுத்துகொள்ளும் ஒரு தளமாகவும், அதிகளவில் பயனாளர் களால் பயன் படுத்தப்படும் தளமாகவும் புகழ்பரப்பி வருகிறது.
யூடியூப்-ல் உள்ள காணொளிகளை தரவிறக்கம் (Download) செய்ய எளிதான இலவசமான மென்பொருள் YouTube Downloader உங்களுக்கு பிடித்த காணொளியை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், அந்த காணொளியின் முகவரியை காப்பி செய்து இந்த மென்பொருள் முகவரி இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே கொடுத்தால் போதுமானது. இதை நீங்கள் உங்களுக்கு பிடித்த ஃபார்மட்டில் (AVI, WMV, MP3, MP4, 3GP) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையத்தில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் இருக்கும் என்றால் அதில் குறிப்பிடத்தக்க இடம் யூடியூப்க்கு நிச்சயம் உண்டு. கூகிள் இதை கையகப்படுத்தியதில் இருந்து இதை சிறப்பாக கையாண்டு வருகிறது. இதன் மூலம் விளம்பரத்தில் பெருமளவு சம்பாதித்துக்கொண்டுள்ளது, உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு சூடான செய்தி என்றாலும் உடனே இதில் பயனாளர் களால் ஏற்றப்படும். இதில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். சமீபத்தில் ஐபிஎல் கிரிகெட் (IPL Criket) போட்டிகளை கூகிள் தனது தளத்தில் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
கூகிள் என்றாலே அது மாற்றம் தான். அதற்கேற்ப தற்போது தன் வடிவமைப்பிலும் தரத்திலும் சில மாற்றங்களை செய்துள்ளது, சரியாக கவனித்தவர்கள் உணர்ந்து இருப்பார்கள். அனுமதி இல்லாத வீடியோக்களை ஏற்றுவது தொடர்ந்தால் அந்த யூடியூப்-ஐ முடக்கி விடுகிறார்கள். இது முன்பே இருந்தாலும், தற்போது இதை கண்டறிவதில் தொழில் நுட்பத்தை அதிகம் பயன் படுத்துகிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு வீடியோ ஃபைல் ஏற்றப்பட்ட பிறகு அது பப்ளிஷ் ஆக நீண்ட நேரம் எடுக்கும். தற்போது நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. வீடியோ சப்ஸ்க்ரைப் செய்யவும், வீடியோ பற்றிய தகவலை படிக்கவும், (முன்பு இது வலது பக்கம் மேலே இருந்தது. தற்போது வீடியோ அடியி லேயே கொடுக்கப்பட்டுள்ளது) வசதி ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஓட்டு போட 5 நட்ஷட்திரங்கள் இருந்தது. தற்போது இது விரல் போன்று (Thump Style) அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய முறையை விட ஓட்டளிக்க எளிதாக உள்ளது.
எபிசோடிக் (www.episodic.com)
கூகிள் சமீபத்தில் எபிசோடிக் (www.episodic.com) என்ற வீடியோ தளத்தை கையகப்படுத்தியுள்ளது. தற்போது அதன் வீச்சு என்னவென்பதை நாம் அறிவோம். இணையத்தில் வீடியோவிற்கு இருக்கும் சிறப்பான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூகுள் இந்த தளத்தையும் வாங்கியுள்ளது.
பிகாசோ (Picasa)
கூகுள் பிகாசோவில் நமது படங்களை சேமிக்கலாம் என்பதும் அதனுடைய இலவச அதிகபட்ச அளவு 1GB என்பதும் அனைவரும் அறிந்தது. இதில் காணொளிகளையும்(Video) இணைக்கலாம் என்பதை சிலர் அறிந்து இருப்பார்கள். பலருக்கு இது தெரியாது. தற்போது கூடுதல் சேவையாக கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் வசதி என்னவென்றால் நீங்கள் 800 பிக்சல் அளவுடைய (அல்லது அதற்குக் குறைவாக) படங்களை எவ்வளவு வேண்டு மென்றாலும் சேமிக்கலாம். இது 1 GB கணக்கில் வராது அதே போல காணொளிகளை 15 நிமிடம் மற்றும் அதற்கு குறைவாக ஓடக்கூடிய அளவில் சேமித்தாலும் இந்த இலவசக்கணக்கில் வராது.முன்பு ஒவ்வொரு படமாக தேர்வு செய்து அப்லோடு செய்ய வேண்டும். (Easy Up loader இல்லாமல்) தற்போது எத்தனை படங்களை வேண்டும் என்றாலும் மொத்தமாக தேர்வு செய்து இணைக்கலாம். இது ரொம்ப எளிதாக உள்ளது.
கூகுள் டிரைவ்(Google Drive)
கூகுள் தனது அடுத்த முயற்சியாக கூகுள் டிரைவ் (Google Drive)வசதியை ஆரம்பித்துள்ளது. இணையத்தில் உலவிக்கொண்டுள்ள முக்கிய செய்தியே கூகுள் டிரைவ்தான்.
தற்போது இணையம் அனைவரிடையே மிக வேகமாக பிரபலமாகி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எப்போதுமே ஒரு விஷயம் பிரபலம் ஆகிறது என்றால் அதனோடு தொடர்புடைய விஷயங்களும் வளர்ச்சியடைந்து வரும். எடுத்துக்காட்டாக அனிமேசன் 3D கிராபிக்ஸ் மற்றும் சினிமாத்துறை என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. இவை எல்லாம் வரும் என்று கருப்பு வெள்ளை காலங்களில் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
இது போல இணையத்திலும் கணக்கில் அடங்கா தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இன்றைய புதிய வசதி ஒரு வருடத்தில் பழையதாகி விடுகிறது. அந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில்நுட்பம் தான்
கிளவுட் கம்ப்யூட்டிங்.
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்பது நமது தகவல்களை ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு அதை நாம் எந்த இடத்தில் இருந்தும் இணையம் அல்லது வழக்கமான நமது நெட்வொர்க் மூலம் பயன்படுத்தும் ஒரு வசதியாகும். இதன் மூலம் எந்த இடத்தில் இருந்து வேண்டும் என்றாலும் நாம் தகவல்களை பெற முடியும்.
எவ்வாறு நமது மின்னஞ்சலை எங்கே இருந்து வேண்டும் என்றாலும் நம்மால் எந்த வித சிக்கலும் இல்லாமல் நமது தகவல்கள் யாஹூ, ஜிமெயில், ஹாட்மெயில் போன்ற வழங்கிகளில்(server) பயன்படுத்த முடியுமோ அதேவாறு.
கொஞ்சம் பெரிய அளவில் அதாவது உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் இது போன்ற இடத்தில் இருந்தால்! இது தான் மேககணினி (கிளவுட் கம்ப்யூட்டிங்). உங்கள் தகவல்கள் அனைத்தும் எடுத்துக் காட்டாக கூகுள் வழங்கியில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் இருந்தால் போதும். உங்கள் தகவல்களைப் பெற முடியும். அதாவது உங்கள் வீட்டில் இருக்கும்போது தான் இதை பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இல்லை. எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் கோப்பை (file) அப்டேட் செய்ய முடியும்.
உங்களில் ஒரு சிலர் சில முக்கிய கோப்புகளை மின்னஞ் சல்களிலோ அல்லது வேறு தளங்களிலோ சேமித்து வைத்து இருப்பீர்கள். அவசரமாக தேவைப்படும் போது பயன்படுத்து வதற்காக. உதாரணத்திற்கு உங்கள் பிறப்பு சான்றிதழ் அவசரமாக தேவைப்படுகிறது. ஆனால் அதனுடைய கோப்பு (file) உங்கள் வீட்டு கணினியில் இருக்கிறது. ஆனால் வீட்டிற்கு சென்று எடுத்து வரும் அளவிற்கு நேரமில்லை அல்லது நீங்கள் தொலைவில் இருக்கிறீர்கள் என்ன செய்வது? இதை நீங்கள் கூகுள் பிகாசாவிலோ அல்லது வேறு இடத்திலோ சேமித்து வைத்து இருந்தால் உடனடியாக உங்களால் அருகில் உள்ள ஏதாவது ஒரு பிரவுசிங் சென்டர் சென்று பிரிண்ட் செய்து பயன்படுத்த முடியும். எவ்வளவு நேரம் மிச்சம்! அதோடு வேலையும் விரைவாக முடியும்.
முன்பு இணையத்தின் வேகத்தின் அளவு மிக மிக மெதுவாக இருந்தது. ஆனால் தற்போது இதன் வேகம் அதிகரித்து இருக்கிறது. எனவே இது போன்ற வசதிகள் உருவாகி வருகின்றன.
ட்ராப்பாக்ஸ் (Dropbox)
ட்ராப்பாக்ஸ் என்பது ஒரு தளம். இதில் இலவசமாக நமக்கு 2 GB இடம் தருகிறார்கள். மற்றும் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் இன்னும் சில MB களை பெற முடியும். பணம் கட்டினால் மேலும் நமக்கு தேவையான அளவு இட வசதியைப் பெற முடியும்.
இது எப்படி வேலை செய்கிறது என்றால் இவர்கள் தரும் ஒரு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் (வீட்டுக்கணினி அலுவலக கணினி என்று எங்கு தேவையோ அங்கு) இதை நிறுவியவுடன் உங்களுடைய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைந்து கொண்டால் உங்களது கணினியில் ட்ராப்பாக்ஸ் (Dropbox) என்ற பெயரில் ஒரு ஃபோல்டர் வந்து விடும். இதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவு வரை சேமிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டு கணினியில் JPG கோப்பை சேமிக்கிறீர்கள். பின் அலுவலகம் வந்து உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் நீங்கள் வீட்டுக் கணினியில் சேமித்த கோப்பு இங்கேயும் வந்து விடும். இணையம் அவசியம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
இணையம் இல்லாமலும் உங்கள் கணினியில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும். ஆனால் அப்டேட் செய்தால் இங்கே மட்டுமே அப்டேட் ஆகும். மற்ற இடங்களில் ஆகாது காரணம் இணைய இணைப்பு இல்லாதது.
அதே போல நீங்கள் ஒரு TEXT கோப்பை அடிக்கிறீர்கள் அதை வேறு கணினியில் அப்டேட் செய்தால் உங்கள் வீடு அலுவலகம் என்று அனைத்து இடத்திலும் அப்டேட் ஆகி விடும். காரணம் உண்மையாக அந்த கோப்பு இருக்கும் இடம் வழங்கி ஆகும். நீங்கள் இதைப் பயன்படுத்த கண்டிப்பாக இணையம் அவசியமாகும். iPhone, Android என்று தொலைபேசிகளிலும் இந்த வசதி உள்ளது. எனவே இணையம் இருந்தால் எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் தகவல்களை பார்க்க முடியும்.
இதை விண்டோஸ், மேக்ஸ், லினஸ்(Windows, Mac, Linux) மற்றும் கைபேசி (Mobile)-ல் பயன்படுத்தலாம். உங்கள் ஹார்ட்டிஸ்க் செயலிழந்து விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் தகவல்கள் மற்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்கும், இதுவும் இந்த சேவையின் மிக முக்கிய பயன்.
மைக்ரோசாப்ட் கூட இது போல தருகிறது. ஆனால் இது போல மென்பொருள் வைத்தல்ல. சென்ற வருடம் iOS5 மூலம் Cloud Storage வந்த ஆப்பிள் நிறுவனம் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனாளர்களைப் பெற்று இந்த தொழில் நுட்பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. அதிலும் கடைசி 15 மில்லியன் பயனாளர்களை 21 நாட்களில் பெற்று இருக்கிறது.
இந்த Dropbox வசதியைத் தான் கூகுள் தரப்போகிறது. கூகுள் ஏற்கனவே தனது Google Docs என்ற வசதி மூலம் இதை தருகிறது. ஆனால் Dropboxபோன்று இதற்கு என்று தனியாக மென்பொருள் வைத்து அல்ல. தற்போது இதற்கு வரவேற்பு அதிகமாவதை உணர்ந்து இந்த வசதியைத் தர திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
இலவசமாக 1 GB கொடுக்கிறார்கள். நமக்கு அதிக அளவில் இடம் வேண்டும் என்றால் பணம் கட்டி இதில் பெற்றுக்கொள்ளலாம். இனி வரும் காலங்களில் நமது கணினிகளில் ஹார்ட் டிஸ்க் இயங்கு தளத்திற்கு (OS) மட்டுமே பயன்படும் என்று கருதப்படுகிறது. நம் தகவல்கள் எல்லாம் ஊடடிரன Cloud Computing முறையில் வந்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு இது போல வர சில வருடங்கள் ஆகும். காரணம் இணைய வேகம் தான். தென் கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற இணைய வசதி சிறப்பாக உள்ள நாடுகள் இதில் முதலில் வர வாய்ப்பு உள்ளது. அதோடு நமது நாட்டில் இன்னும், இணையம் செலவு மிக்கதாகவே உள்ளது. அளவில்லாத (Unlimited) வசதி இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். இல்லை என்றால் மிகுந்த செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கும். ஊடடிரன ஊடிஅயீரவைபே என்பது மிகப்பெரிய விஷயம் அதில் ஏகப்பட்ட தகவல்கள் விஷயங்கள் அடங்கி உள்ளது.
ஆன்ட்ராய்டு (Android)
மொபைல் மற்றும் Tablet PC மென்பொருளான ஆன்ட்ராய்டு (Android) தற்போது அதிகளவில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஏற்கனவே ஆப்பிள்க்கு கடும் சவாலாக உள்ளது. தற்போது வளர்ச்சியில் ஆப்பிளை மிஞ்சி விட்டதாக சர்வேக்கள் கூறுகின்றன. ஆன்ட்ராய்டு(Android) நிறுவனம் கூகுளால் ஆகஸ்ட் 2005 ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.
மொபைல் இயங்குதளத்தில் (os) தற்போது ஆன்ட்ராய்டு (Android) சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் எளிமை மற்றும் வசதிகள் காரணமாக தற்போது இதனுடைய பயனாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் சென்றால் 2015 ல் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.
இது ஒரு சுதந்திர மென்பொருள் (Open Source) என்பதும் இது மிக பிரபலமானதிற்கு முக்கிய காரணமாகும். இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் இன்று வரை தமிழ் மொழியை புறக்கணித்தே வருகிறது. பலர் இது குறித்து குற்றம் சாட்டியும் இன்னும் தமிழை படிக்க வசதி ஏற்படுத்தாமல் இருப்பது பல Android தமிழ் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. வேறு வழியில் தமிழை படிக்க முடியும் என்றாலும் ஆப்பிள் உடன் ஒப்பிடும் போது அது நிறைவானதாக இல்லை. கூகுள் விரைவில் இந்த வசதியை தரும் என்று நம்புவோமாக.
கூகுளின் ஆன்ட்ராய்டு (Google -Android)
கூகுளின் ஆன்ட்ராய்டு வேகமாக வளர்ந்து வரும் மொபைல் இயங்கு தளம் ஆகும். இது வரை 200 மில்லியன் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம். மிகக்குறைந்த நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. தற்போது ஆப்பிளின் iOSக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. விரைவில் முதல் இடத்தைப் பிடித்து விடும் என்று கூறி இருக்கிறார்கள். தினமும் 550000 சாதனங்களில் Android இயங்கு தளம் நிறுவப்படுகிறது.
ஸ்மார்ட் ஃபோன் இயங்குதளத்தில் (OS) கூகுள் சாதனை செய்து வருகிறது. குறுகிய காலத்தில் பலரிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது மொத்த ஸ்மார்ட் ஃபோன் இயங்குதள சந்தையில் 39 சதவீத இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம் இயங்குதளத்தை சாம்சங்,எச்டிசி, மோட்டோரோலா (Samsug, HTC, Motorala), மற்றும் சில நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் ஆப்பிள் டைளு ஒரு தொலைபேசியிலேயே இந்த சதவீதத்தை எட்டி இருக்கிறது. தற்போது ஆன்ட்ராய்டுக்கும், ஆப்பிள்க்கும் தான் கடும் போட்டி. 2015ல் ஆன்ட்ராய்டு இயங்குதளமே முன்னணியில் இருக்கும் என்று கூறுகிறார்கள் வல்லுனர்கள்.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இது தான் சூப்பர் என்பார்கள். ஆப்பிள் ஃபோன் பயன்படுத்து பவர்கள் iOS தான் சூப்பர் என்பார்கள். ஆனால் இரண்டுமே சிறப்பான இயங்கு தளம்தான். அது பயன்படுத்துவோரின் தன்மையைபொறுத்தது.
ஆன்ட்ராய்டு - ஐஓஎஸ் (iOS Vs Android)
தற்போது மொபைல் மற்றும் Tablet PCயில் பயன்படுத்தப் படும் ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ஐஓஎஸ் இயங்குதளமான iOSம் கடும் போட்டியை சந்தித்து வருகின்றன. குறுகிய காலத்தில் கூகுள் இயங்கு தளம் பலரின் விருப்பமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. வேகமாகவும் அதே சமயம் சுதந்திர மென்பொருளாகவும் (open source) இருப்பதால் பலரையும் கவர்ந்துள்ளது. தற்போது Blaze என்ற நிறுவனம் இந்த இரு இயங்கு தளங்களுக்கும் சோதனை நடத்தி iOSஉலவியை விட Android உலவி 52 சதம் வேகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் இது ஒரு தவறான சோதனை இவர்கள் கூறுவதைப்போல எதுவுமில்லை சிறப்பாகவே செயல் படுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
டால்பின் உலவி (Dolphin Browser)
iPhone பயன்படுத்துபவர்கள் இணைய உலவிக்கு சஃபாரியை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். Androidல் பிரபலமான டால்பின் உலவியை பலரும் iPhoneல் எப்போதும் வரும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். தற்போது இதிலும் வந்துவிட்டது. இதை iPadலும் பயன்படுத்தலாம். விரைவில் வரும் iOS5ல் சஃபாரியை ஆப்பிள் மேம்படுத்தியுள்ளதாக கூறி உள்ளது. எனவே அதிலும் விரைவில் புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்.
யாஹூ மெயில்(Yahoo Mail)
ஒரு நேர்த்தியான தோற்றம், அதிக சேமிக்கும் திறன், நாள்காட்டி போன்ற பயன்பாடுகள் கொண்டது, முன் எப்போதும் இல்லாத வகையில் அனுபவரீதியாக வழங்கப்படும் ஒரு இலவச மின்னஞ்சல் சேவை.
மறக்கமுடியாத அனுபவத்தையும், முக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நம்ப முடியாத விஷயங்களை இலவசமாகவே வழங்கிடும் மின்னஞ்சல் சேவையே யாஹூவின் முக்கிய அம்மசங்கள்.
படத்தின் தரம்
படத்தின் தரம் MMSஐ விட மின்னஞ்சல் குறிப்பிடத்தக்க அளவு நல்லதாக அமையவும். மொபைலில் யாஹூ MMS ஒரு சிறந்த தரத்துடன் தெளிவான தன்மையை கிடைக்கவும் செய்கிறது. அனைத்து படங்களையும் ஒருங்கிணைக்கிறது. யாஹூ மின்னஞ்சல் மோசடி மற்றும் பிஷிங் லிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.டொமைன்கீஸ்
டொமைன்கீஸ் குறியாக்க மின்னஞ்சல் அங்கீகார தீர்வு என்பது மின்னஞ்சல் மோசடியான பிரச்சினையை யாஹூ சிறப்பாக செய்கிறது. நாம் டொமைன்கீஸ் மின்னஞ்சல் மோசடி மற்றும் பிஷிங் எதிர்த்து ஒரு பயன்மிக்க மற்றும் அளவிடக் கூடிய தொழில்நுட்ப தீர்வை யாஹூவில் பெறமுடிகிறது.
எளிமை
இணைய மின்னஞ்சல் கணக்குகள் என வரும் போது பல விருப்பங்களை நிறைவுசெய்கிறது. எளிமையான தோற்றத் துடன் Mac போன்ற ஒரு மின்னஞ்சல் நிரலை மென் பொருளாக கொண்டு சில நன்மைகளை அளிக்கிறது.
அணுகல்
அணுகல் - இது ஒரு இணைய மின்னஞ்சல் நிரலில் முக்கிய நன்மையாகும். உங்கள் மின்னஞ்சல் எந்த நேரத்திலும், எந்த கணினியில் இருந்தும் இன்பாக்ஸ் ல் அணுக முடியும். தேவையான அனைத்து புகுபதிவும் மற்றும் கடவுச்சொல்லும் (Username & Password) போதுமானது.
மற்ற மின்னஞ்சல் கணக்கு
மற்ற மின்னஞ்சல் கணக்கு - யாஹூ பெரும்பாலான மற்ற மின்னஞ்சல் வழங்குநர்கள் கணக்கை வழங்க கூடாது என்ற ஒரு விருப்பத்தை கொண்டிருந்தாலும் நீங்கள் அவர்களை அங்கே சேர்ப்பதன் மூலம், யாஹூவில் அனைத்தும் உங்கள் POP மின்னஞ்சல் கணக்குகளில் பார்க்கலாம். அதே இடத்தில் உங்கள் வேலையில் இருந்துகொண்டே தனிப்பட்ட மின்னஞ்சலை சரிபார்க்கலாம்.
வடிகட்டிகள் (பில்ட்டர்)
வெவ்வேறு கோப்புறைகளுடன் மின்னஞ்சல்களை அனுப்புவது அல்லது வண்ணங்களில் அவர்களை குறிக்க வடிகட்டிகள் (பில்ட்டர்) அமைக்கவும் யாஹூவில் முடியும்.
பலதரப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து உங்கள் தேர்வு: நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கிலிருந்து மின்னஞ்சல் பெரும்போதும், யாஹூவி லிருந்து பதில் அனுப்பும்போதும் எது முதலில் என்பதை வரையரை செய்கிறது. எப்போதும் ஒன்றே பயன்படுத்தலாம், அல்லது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பப்டும் கணக்கைப் பொறுத்து இது மாறுபடும்.
கோப்புறைகளை - உங்கள் மின்னஞ்சல் ஏற்பாடு வைத்திருக்க உதவும் கோப்புறைகளை அமைக்கவும் முடியும். நீங்கள் குறிப்பிட்ட கோப்புறைகளை நேரடியாக செல்ல வடிகட்டப்பட்டு அங்கேயே நகர்த்த முடியும்.
பெரிய கோப்புகளை இணைக்க - சில மின்னஞ்சல் வழங்குநர்கள் உங்கள் கணக்கு மூலம் அனுப்ப அல்லது பெற முடியும் என்று கோப்புகளை அளவை வரம்புகளை கொண்டிருக்கலாம். Yahoo அவர்களை வெளியே அனுப்புவதற்கான பெரிய கோப்புகளை சுருக்க ஒரு வழிமுறையாக வழங்குகிறது. நீங்கள் இந்த வசதியை 2 ஜிபி வரை கோப்புகளை அனுப்ப முடியும்.
வரம்பற்ற சேமிப்பிடம்
வரம்பற்ற சேமிப்பிடம் - பெரும்பாலான ஆன்லைன் மின்னஞ்சல் கணக்குகள் சேமிக்க குறிப்பிட்ட தொகை தரவேண்டும். இந்த சேமிப்பு தொப்பிகளை பெரும்பாலான பயனர்களுக்கு நிறைய உள்ளன, ஆனால் அனைத்து கோப்புகளும் உங்கள் கணக்கில் மின்னஞ்சல்களுக்கு வரம்பற்ற சேமிப்பிடம் கொடுக்கிறது.
யாஹூ-ல் உங்களுக்கு பிடித்தமான,உங்கள் நாட்காட்டி யில், புகைப்படங்கள், மற்றும் பல பிரபலமான ஆன்லைன் பயன்பாடுகள் இணைந்து இன்பாக்ஸ் பட்டியலிடப் பட்டுள்ளன. ஒரே ஒரு கிளிக் தான் அனைத்தும் கிடைக்கும்.
மின்னஞ்சல் தாவல்கள்
மின்னஞ்சல் தாவல்கள் - நீங்கள் இன்பாக்ஸிலிருந்து மின்னஞ்சல்களை திறக்கும் போது, அவர்கள் உங்கள் இன்பாக்ஸை மேலே தாவல்கள் மாறுகின்றன. இது மிகவும் எளிதாக நீங்கள் சமீபத்தில் திறந்து விட்ட மின்னஞ்சல்களுக்கு போகச் செய்கிறது.மெயில் பிளஸ்
மெயில் பிளஸ் - நீங்கள் யாஹூ இலவச மின்னஞ்சல் கணக்கை கொண்டு (எந்த இன்னும் பல) மேலே பட்டியலிடப் பட்ட அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும், ஆனால் நீங்கள் ஒரு சிறிய ஆண்டுசந்தா செலுத்தவும், மேம்படுத்தல் தொகையாகவும் பெற்று யாஹூ மெயில் பிளஸ் தனது சேவையை அளிக்கிறது. அவுட்லுக் போன்ற வேறு மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் யாஹூ மின்னஞ்சலை அனுப்பமுடியும். மின்னஞ்சல் வாடிக்கை யாளர்களுக்கு மின்னஞ்சல். மிக தெளிவான தோற்றம், உங்கள் கணக்கில் இலவச விளம்பரம். தேவையில்லா முகவரிகளை அழிக்க உதவும் மற்றொரு பெரிய அம்சம். இது ஸ்பேம் ஜெனரேட்டர் களாகவும் இருக்கலாம். வலை தளங்கள் உள்நுழைந்து பயன்படுத்த உங்களுக்கு தற்காலிக மின்னஞ்சல் முகவரிகளை அமைக்க அனுமதிக்கிறது.
யாஹூ மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை! மின்னஞ்சலில், கூகிள் தனது பல புதிய உத்திகளை புகுத்தியதன் மூலம், யாஹூவின் இடத்தை தற்போது பிடித்து விட்டது. யாஹூ இதை செய்யத்தவறியதால் தன் இடத்தை மட்டுமல்ல தன் பெயரையே இழந்து வருகிறது.
கூகிள் தினமும் ஒரு மாற்றம் என்று அசத்திக்கொண்டு வரும் வேளையில், வருடத்திற்கு சில மாற்றங்கள் கூட இல்லாமல் இன்னும் பழைய வசதிகளையே அப்படியே பயன்படுத்திவருவது வருத்தமளிக்கிறது. பத்து வருடங்களாக யாஹூ மின்னஞ்சலை பயன்படுத்தி எந்த ஒரு குறிப்பிடத் தக்க முன்னேற்றமும் தராததால் பொறுத்து பொறுத்து பொறுமை இழந்து தற்போது கூகிள் மின்னஞ்சலுக்கு மாறிக்கொண்டுவருகிறார்கள். இருந்தாலும் யாஹூ மின்னஞ்சல் பயன்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு, பயனுள்ளதாக இருக்கும் சிலவற்றை காணலாம்.
யாஹூ மின்னஞ்சலின் இடது புறத்தில் கீழே application என்ற வசதி உள்ளது. இதை சிலர் கவனித்து பயன்படுத்திக் கொண்டு இருப்பார்கள். பலர் கவனித்து இருக்க மாட்டார்கள். அல்லது கவனித்தும் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். அதில் உள்ள முக்கியமான இரு வசதிகள்.
யாஹூ தரும் இந்த வசதிகள் யாஹூ வின் சொந்த வசதிகள் இல்லை. மற்ற நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுடன் இந்த சேவையை உங்களுக்கு தருகிறது. (அதாவது) External application இதை பயன்படுத்த விரும்பினால் உங்கள் அனுமதியை கேட்டு நீங்கள் அனுமதித்தபிறகே செயல்படும். யாஹூ பரிந்துரைப்பதால் இவர்கள் நம்மை தவறாக பயன்படுத்தமாட்டார்கள் என்பதால், நம்பிக்கையுடன் இவற்றை பயன்படுத்தலாம். ஏனென்றால் யாஹூ இதை எல்லாம் உணர்ந்தே இருக்கும், அதனால் நீங்களும் இதை தைரியமாக பயன்படுத்தலாம்.
இந்த வசதிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது நம்பிக்கையில்லை என்று நீங்கள் கருதினால், எப்போது வேண்டும் என்றாலும், இந்த வசதிகளை உங்கள் மின்னஞ்சலில் இருந்து நீக்கிக் கொள்ளலாம்.
யாஹூ - பேஸ்புக் (Yahoo & Facebook)
யாஹூ, கூகிள் மற்றும் மற்ற மின்னஞ்சல்களின் போட்டியை சமாளிக்க அவ்வப்போது சில மாற்றங்களை செய்து வருகிறது. யாஹூல் உள்ள குயஉநடெடிம நண்பர்களை மின்னஞ்சல்களை இம்போர்ட் செய்ய அனுமதித்து இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் வசதியானது, நீங்கள் யாஹூவில் இருந்தபடியே உங்கள் (Facebook Status)ஸ்டேட்டஸ் மெசேஜ்ஐ அனுப்பவும். அதோடு உங்கள் நண்பர்கள் யாராவது உங்களுக்கு மின்னஞ்சல் செய்தால் அவர்களது ஃப்ரோபைல் படம் தெரியும்படியும் அமைக்கப்பட்டுள்ளது. யாஹூவும் இதைப்போல மாற்றங்கள் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
சூமோ ட்ரைவ் (Zumo Drive)
இதை நாம் இணைத்துக்கொண்டால் 1 ஜிபி அளவுக்கு உங்கள் தகவல்களை நீங்கள் இங்கே சேமித்து வைக்க முடியும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்தில் உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு ஏற்படுத்த வேண்டியது மட்டுமே. ஒருமுறை நீங்கள் இதை செய்து விட்டால், நீங்கள் யாஹூ கணக்கில் நுழைந்தாலே போதுமானது. ஒவ்வொரு முறையும் இதை பயன்படுத்தும் போதும், பயனர் கடவுச்சொல் (password) கொடுக்கத் தேவையில்லை.
நீங்கள் யாஹூ கணக்கில் இருந்து எந்த ஃபைல் (setup, doc) வேண்டும் என்றாலும் அப்லோட் செய்து கொள்ளலாம். ஒரு ஃபைல் அளவு 100எம்பி வரை மட்டுமே இருக்க முடியும், இதை பின்னாளில் மாற்ற வாய்ப்புண்டு.
100எம்பி ஃபைலை விட அதிகமாக எப்படி அப்லோட் செய்வது?
அதற்கும் வழி இருக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சூமோட்ரைவ்-ல் சென்று அங்குள்ள மென் பொருளை தரவிறக்கி நிறுவ வேண்டியது மட்டுமே. இதை நீங்கள் செய்து விட்டால் உங்கள் சூமோட்ரைவ்-ல் உள்ள தகவல் உள்ள இடம் உங்கள் கணிப்பொறியில் Z:\ (Virtual) டிரைவாக வந்து விடும். இதில் வழக்கமாக நீங்கள் காப்பி, பேஸ்ட் செய்வது போல செய்தால் போதும். அதுவே செய்து விடும். வழக்கமாக அப்லோட் செய்யும் போது ஆகும் நேரம் போல் ஆகாது.
இதில் உள்ள ஒரு ஃபைலை (தரவிறக்க சுட்டியை) நீங்கள் யாருக்கு வேண்டும் என்றாலும் யாஹூ மின்னஞ்சலில் இருந்தே அனுப்பலாம். இடது புறம் உள்ள மைட்ரைவ்ஐ க்ளிக் செய்து அதில் உள்ள உங்கள் ஃபைலை தேர்வு செய்து பொத்தானை க்ளிக் செய்தால் போதும். பின் நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்கள் மின்னஞ்சலை வழக்கம் போல கொடுத்து அனுப்பிட வேண்டியது தான்.
இதன் முக்கியமான சேவை உங்களுக்கு இலவசமாக இடம் கொடுப்பது மட்டுமே! மின்னஞ்சலில் அனுப்புவது எல்லாம் அவர்கள் தரும் கூடுதல் வசதி. இவர்கள் 1ஜிபி இடம் கொடுத்தாலும் அதன் பின் சில போட்டிகள் வைக்கிறார்கள் அதில் நீங்கள் வெற்றி பெற்றால் இன்னும் 1ஜிபி தருகிறார்கள், ஆகமொத்தம் 2ஜிபி. இந்தப் போட்டி கூட நீங்கள் அதில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற் காகவே. எளிதான ஒன்றுதான். அதிக இடம் வேண்டும் என்றால் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
ட்ராப்.ஐஓ (Drop I.O)
இதுவும் மேற்கூறிய ஒன்றைப் போலவே தான் ஆனால் மின்னஞ்சலுக்காக மட்டுமே. 100 எம்பி அளவிற்கு நீங்கள் இதில் ஃபைலை அனுப்பலாம் என்பதே இதன் பயன்.இதை இணைத்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டியது இடது புறம் உள்ள Attach Large Filesஐ க்ளிக் செய்தால் வரும் Select Files ஐ க்ளிக் செய்து உங்கள் ஃபைலை தேர்வு செய்து பின் Upload and Compose E-mail - என்ற பொத்தானை அழுத்த வேண்டியது தான். பின் உங்கள் அப்லோட் ஆன ஃபைலை நீங்கள் யாருக்கு அனுப்ப விரும்புகிறீர்களோ, அவர்கள் மின்னஞ்சலை அதில் வழக்கம் போல கொடுக்க வேண்டியது தான்.
இந்த ஃபைல் 30 நாட்களுக்கு மட்டுமே இருக்கும், அதற்குள் நீங்கள் மின்னஞ்சல் செய்த நபர் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் அதில் உள்ள தகவல்கள் காலாவதியாகி விடும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, ஃபைல் இவர்களது தளத்திலே இருக்கும். எனவே 100 ஃபைலை நீங்கள் மின்னஞ்சல் செய்தால் உங்கள் நண்பருக்கு செல்வது தரவிறக்க சுட்டி மட்டுமே. உங்கள் ஃபைல் அல்ல. நீங்கள் எதிர்பாராதவிதமாக ஒருவருக்கு அனுப்ப வேண்டிய ஃபைலை இன்னொரு வருக்கு அனுப்பி விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கவலைப்பட வேண்டாம், திரும்பி அதே பகுதிக்கு வந்து அங்கே உள்ள ஃபைலை நீங்கள் நீக்கி விடலாம். இதன் மூலம் அவர் இதை தரவிறக்கம் செய்ய முடியாது.
ஆப்பிள் (Apple)
உலகம் முழுவதும் குறிப்பாக மேலை நாடுகளில் தற்போதைய பரபரப்பு ஆப்பிள் தொலைபேசி, (iPhone, iPod, iPod Touch) போன்ற சாதனங்கள் தான். தனது தயாரிப்பை ஒவ்வொரு முறை வெளியிடும் போதும், மக்களிடையே அதை வாங்க அதிக வரவேற்பு இருக்கிறது. ஆப்பிள் நிறுவனமும் பல்வேறு வகையான விளம்பரங்கள் மூலம், அதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. சமீபமாக ஒரு சிறு குழந்தையும் ஒரு வயதான பெண்மணியும் இதை பயன்படுத்துவதைப்போல வெளியிட்ட விளம்பரங்கள் பலரை வெகுவாக கவர்ந்து விட்டது. தற்போது ஜப்பானில் அசைக்க முடியாமல் இருந்த Smart Phoneஐ ஆப்பிள் விற்பனை தாண்டிவிட்டது.
ஆப்பிளும் Vs அடோபும்
பிரபல நிறுவனங்களான அடோப் மற்றும் ஆப்பிள் சண்டைப் போட்டு பிரிந்து விட்டன. இனி அடோப் ப்ளாஷ் தனது ஐபோனில் பயன்படுத்தப் போவதில்லை என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்து விட்டது. இதற்கு ஆப்பிள் கூறும் காரணங்கள் பாதுகாப்பின்மை, பல குறைபாடுகள் மற்றும் அதிகளவில் சக்தியை எடுத்துக் கொள்வது போன்றவை. இந்த இரண்டு நிறுவனங்களும் மறுபடியும் இணைய வேண்டும் என்பது இதைப் பயன்படுத்தும் ரசிகர்களது விருப்பம்.
ஆப்பிள் டேபிளட் பிசிஅறிமுகம்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2010 ல் முதன் முதலில் அறிமுகப்படுத்திய சாதனம் இதுவாகும். நோட்புக் என்ற சிறிய கணினி சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருந்தபோது அதை இன்னும் சுருக்கி வித்தியாசமாக டேபிளட் பிசி என்று அறிமுகப்படுத்தினார். இதை அறிமுகப்படுத்திய போது இதற்கு வரவேற்பு சுத்தமாக இல்லை. பலரும் இதை தோல்வி அடைந்த தயாரிப்பு என்று கூற துவங்கினார்கள். ஆனால் அதன் பிறகு இதனுடைய எளிமை மற்றும் பயன்பாடு ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களே வியக்கும் அளவிற்கு வெற்றி பெற்று விட்டது. சாதாரண வெற்றி எல்லாம் இல்லை மாபெரும் வெற்றி. நோட்புக்கையே பின்னுக்கு தள்ளி தனது மாபெரும் வளர்ச்சியை அடைந்துவருகிறது. நோட்புக் வாங்கியவர்கள் எல்லாம் டேபிலேட் பிசி வாங்கி அதன் பயனை அடைந்தே ஆகவேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அளவு 9.73, பிக்செல் 1024 க்கு 768 ஆகும். இது ஐஓஎஸ் ((iOS))என்ற இயங்குதளத்தில் (Operating System)ல் செயல்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தாரின் பலமே புதுமை, எளிமை மற்றும் கவர்ச்சி தான். இதனால் தான் போட்டிகள் பல இருந்தாலும் இதற்கு என்ற அசைக்க முடியாத ரசிகர் கூட்டம் உள்ளது. இதனுடைய அடுத்த வெளியீடு ஐபேட் 2 (iPad-2) விரைவில் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் இது பற்றிய பரபரப்பு இப்போதே பலரை தொற்றிக்கொண்டது. முதல் மாடலில் இல்லாத front facing camera (for Video chat) உட்பட பல வசதிகளை தரப்போகிறது.
டேபிளட் பிசியின் பயன்பாடு
இது பெரும்பாலும் இணையம், அலுவலக மின்னஞ்சல்கள்(Outlook). விளையாட்டுகள் போன்ற வற்றிற்காகவே உருவாக்கப்பட்டது. இதில் நாம் விண்டோஸ் இயங்கு தளத்தில் நிறுவும் (Install) மென்பொருளைப் போல இதில் நாம் நிறுவ முடியாது. இதற்க்கென்று உள்ள மென்பொருளை மட்டுமே நிறுவ முடியும். அலுவலக மின்னஞ்சல் மற்றும் இணையம் மட்டுமே பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள எளிமையான ஒன்றாகும்.
டேபிளட் பிசி என்றால் ஆப்பிள் மட்டும் தானா?
இல்லை. தற்போது இதில் பிரபலமாக இருப்பது ஆப்பிள் உடன் சாம்சங், மோட்டாரோலா, மற்றும் பல நிறுவனங் களாகும். ஆனால் இன்று வரை முதலிடத்தில் இருப்பது ஆப்பிள் தான்.
டேபிளட் பிசி யின் இயங்குதளம் (Operating System)
ஆப்பிள் iOS என்ற இயங்குதளத்திலும், Samsung, Motorala போன்றவை கூகுள் உடைய இயங்கு தளமான Androidல் இயங்குகிறது. இவை மட்டுமல்லாமல் பல டேபிளட் பிசி க்களுக்கு ஆன்ட்ராய்டு(Android) இயங்குதளமாக பயன்படுத்தப் படுகிறது. ஆப்பிள் தனது அடுத்த இயங்கு தளத்தை (Operating System) அறிமுகப்படுத்தியுள்ளது. இது Mac OS X Lion என்று கூறப்படுகிறது.
சாம்சங் டேபிலேட் பிசி (Samsung Tablet PC)
ஆப்பிள் ஞையன க்கு ஓரளவு போட்டியாக வளர்ந்து கொண்டு இருக்கும் ஒரு நிறுவனம் சாம்சங் (ளுயஅளரபே)ஆகும். இதனுடைய முதல் வெளியீடு ழுயடயஒல கூயெ யின் அளவு 7" மட்டுமே ஆகும். இது பேட் குஹகூ32 ல் இயங்குவதால் 4ழுக்ஷ க்கு மேல் உங்களால் ஒரு பைலை காபி செய்ய முடியாது. இதனால் படங்களை காப்பி (copy) செய்வதில் சிக்கல் உண்டு. ஆப்பிள் அளவிற்கு இல்லை என்றாலும் இதற்கும் ஓரளவு ஆதரவு உள்ளது. இதனுடைய அடுத்த வெளியீடான Samsung Galaxy 10.1 ல் பல அதி நவீன உத்திகள் கையாளப்பட்டுள்ளன.
ஆன்ட்ராய்டு (Andriod) இது வரை தொலைபேசிகளுக்கு தயாரித்த இயங்கு தளத்தையே டேபிலேட் பிசி ((Tablet PC)) க்கும் பயன்படுத்தி வந்தது. ஹனேசடைன ன் அடுத்த வெளியீடான "“Honeycomb” Tablet PC" க்கு என்றே தயாரிக்கப்பட்ட இயங்கு தளமாகும். இது சாம்சங் (Samsung) ல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே Motorola லும் இந்த இயங்கு தளம் பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிள் டேபிலேட் பிசி தமிழ் பான்ட் வசதியை செய்துள்ளது. ஆனால் ஹனேசடைனல் அது இல்லை. ஆனால் ஒபரா உலவியின் (browser) மூலம் தமிழ் படிக்க முடியும். இணையத்தில் பலரும் தமிழ் வசதியை ஆன்ட்ராய்டு((Andriod) ) இன்னும் ஏற்படுத்தாமல் இருப்பது பற்றி தமிழ்மக்கள் கவலை கொண்டுள்ளார்கள். ஆனால் கூகுள் இதை கவனிக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இதனாலே சிலர் வர யோசிக்கிறார்கள். கூகுளின் தாமதம் தமிழ் பயனாளிகளுக்குதான் ஏமாற்றமாக உள்ளது.
நோக்கியா (Nokia)
நோக்கியா நிறுவனம் செல் போன் தயாரிப்பில் புகழ்பெற்றது அனைவரும் அறிந்தது. இந்தியாவில் அசைக்க முடியாத விற்பனையை கொண்டு இருந்தது. ஆனால் தற்போது போட்டிகள் மற்றும் ஸ்மார்ட் போன் வருகை போன்றவற்றால் உலகளவில் லாபத்தின் அளவில் 2009 ஐ விட 2010 ல் அளவு குறைந்துள்ளது. தற்போது மேலும் ஒரு சோக செய்தியாக நோக்கியாவின் செல் போன் மென் பொருளான சிம்பியானை ஆன்ட்ராய்டு மென்பொருள் பயன்பாட்டில் மிஞ்சியுள்ளது.
டேபிலேட் பிசி (Tablet PC •Application )
டைளுக்கான இயங்கு தளத்திற்கு http://store.apple.com/ மற்றும் Andriodஇயங்கு தளத்திற்கு https://market.android.com/ இதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. நமக்கு தேவையான அனைத்து மென்பொருளையும் இங்கே சென்று தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனம் Apple Store அறிமுகப்படுத்தியதும் அது மிகப்பெரிய வெற்றியடைந்தது. 10 பில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை செய்துள்ளது.
ஆப்பிள் ஐபேட் (Apple iPad)
ஆப்பிள் அறிமுகப்படுத்திய போது ஆப்பிள் நிறுவனர் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். இந்த அளவிற்கு அசூர வெற்றி பெரும் என்று. ஆப்பிள் ஐபேட் வெளியிட்டபோது இதை எல்லாம் யார் வாங்கப்போகிறார்கள் என்று நினைத்த வர்கள் அதிகம். அப்படி நினைத்தவர்களை வியப்பில் ஆழ்த்தி சாதனை புரிந்து விட்டது. இதன் மாபெரும் வெற்றி. கிறிஸ்துமஸ் அன்று அமெரிக்காவில் அதிகம் பேருக்கு பரிசளிக்கப்பட்ட பொருள் iPad என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகெங்கும் பலர் ஐபேட்-ன் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆப்பிள் ஐட்யூன் (Apple iTunes)
ஆப்பிள் நிறுவனம் (Apple) தனது ஐபாட் மற்றும் ஆப்பிள் கணிப்பொறியில் பல சாதனைகளை செய்து வருவது, அனைவருக்கும் தெரிந்ததே! இதன் ஐபாட் (iPad) மற்றும் அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் பயன்படுத்த ஐட்யூன் (iTunes) என்ற மென்பொருள் தேவை. இது இல்லாமல் நீங்கள் பாடலோ படமோ எதையும் பயன்படுத்த முடியாது. சில நேரங்களில் இது மிகவும் கடினமாக இருந்தாலும் இந்த மென்பொருள் கொடுக்கும் வசதிகள் அளவில்லாதது. இது தற்போது தனது புதிய வெளியீடான ஐட்யூன் 9.1 ஐ அறிமுகப் படுத்தியுள்ளது. ஐபாட் போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் இதை அப்டேட் செய்துகொள்ளுங்கள். இதில் குறிப்பிடத்தக்க புதிய மாற்றம் எது என்றால் நீங்கள் உங்கள் கணிப்பொறியில் உங்கள் ஐபாட்ஐ இணைத்தவுடன் இது வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
மைக்ரோசாப்ட் (Microsoft)
ஒரு வர்த்தகத்தை வளர்க்கும் சாதனமாக பெர்சனல் கம்ப்யூட்டர் மாறுவதற்கு இரண்டு மா மனிதர்கள், பால் ஆலன் (Paul Alan) மற்றும் பில்கேட்ஸ் (Bill Gates) ஆகியோரே காரணமாக இருந்தனர். 1975ல் இவர்கள் பேசிக் ((Basic) என்னும் புரோகிராமிங் மொழியை உருவாக்கி மைக்ரோசாப்டை (Microsoft) நிறுவினார்கள்.
இன்றைக்கு 37 ஆண்டுகள் கழித்து எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும், எத்தனை ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வந்தாலும், இன்னும் மைக்ரோசாப்ட் தான் முதல் இடத்தில் உள்ளது. இந்த கால கட்டத்தில் பால் ஆலன் மற்றும் பில் கேட்ஸ் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றனர். 2008 ஆம் ஆண்டில் 1800 கோடி டாலர் நஷ்டம் அடைந்த பின்னரும், பில் கேட்ஸ் தொடர்ந்து பணக்காரராக உள்ளார்.
பில்கேட்ஸ் நிறுவனமான மைக்ரோசாப்ட் வெறும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை (Operating System) மட்டும் தயாரிக்கவில்லை. உலகெங்கும் பிரபலமாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் எம்.எஸ். ஆபீஸ் (Microsoft), எக்ஸ் பாக்ஸ் வீடியோ கேம் விளையாட்டு சாதனம் (Xbox Video Games), ஸூன் போர்ட்டபிள் மியூசிக் பிளேயர் என இன்னும் பல டிஜிட்டல் சாதனங்களை முதல் முதலாக உருவாக்கி மக்களிடையே விற்பனை செய்து வருகிறது.
விண்டோஸ் 7 புதுமைகள் (Windows 7 New Facilities)
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், விஸ்டா போல இல்லாமல் பல பயனாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்த கம்ப்யூட்டரின் திறன் சற்று கூடுதலாக இருக்கவேண்டும். பல சிறப்பம்சங்களைப் பெற்று சிறப்பாக வேலை செய்கிறது.ஸ்லீப் மற்றும் ரெஸ்யூம் (Sleep and Resume)
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஸ்லீப் மற்றும் ரெஸ்யூம் (தற்காலிகமாக நிறுத்திப் பின் மீண்டும் இயக்கும் வசதி) செயல்பாடு மிக நேர்த்தியாகவும் எந்த பிரச்சனையுமின்றியும் செயல்படுகிறது. இதனால் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தினை அடிக்கடி நிறுத்தி இயக்க வேண்டிய தேவை இல்லை. விண்டோஸ் லோகோ கீயுடன் வலது மற்றும் இடது ஆரோ கீகளை இயக்குகையில் அப்போதைய விண்டோ அந்த திசைகளில் ஒதுங்கி இடம் பிடித்து மற்ற விண்டோக்களுக்கு இடம் தருகிறது. இதனால் இரண்டு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு விண்டோவில் இன்டர்நெட் பிரவுஸ் செய்து கொண்டே, இன்னொன்றில் இமெயில் தொடர்புகளைக் காணலாம். ஒரே டாகுமெண்ட்டில் இரு வேறு இடங்களில் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம்.
ஸ்நிப்பிங் டூல் (Snipping Tool)
திரைக் காட்சியை அப்படியே படம் பிடித்து பைலாக மாற்ற பல வழிகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்நிப்பிங் டூல் (ளுேயையீீைபே கூடிடிட) என்ற ஒரு வசதியைத் தருகிறது. ஸ்நாப் சாட் எடுப்பது போல ஒரே கீ அழுத்தத்தில் இதனை மேற்கொள்ள முடிகிறது.
புரஜக்சன் ஸ்கிரீன் (Projection Screen)
விண்டோஸ் 7, கம்ப்யூட்டரை புரஜக்டர் ஒன்றுடன் இணைத்து இயக்குவதை எளிதாக்குகிறது. விண்டோஸ் + பி (றைே மநல +யீ) கீகளை அழுத்தினால், காட்சி கம்ப்யூட்டருக்கும் புரஜக்ஷன் ஸ்கிரீனுக்குமாக மாறுகிறது.
இதில் இணைத்துத் தரப்படும் கால்குலேட்டரில் புதிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன. சயின்டிபிக் புரோகிராமர், புள்ளியியல் செயல்பாடுகள், யூனிட் மாற்றுதல் (கி.மீ-மைல், லிட்டர்-காலன், செல்சியல் -பாரன்ஹீட்) போன்றவை தரப்பட்டுள்ளன.
எக்ஸ்பி மோட் (XP Mode)
இதில் தரப்பட்டுள்ள எக்ஸ்பி மோட் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. எக்ஸ்பியில் மட்டும் இயங்கும் பல தேர்ட்பார்ட்டி புரோகிராம்களை (Third Party Program) எளிதில் இதன் மூலம் இயக்க முடிகிறது. விண்டோஸ் 7 விஸ்டா போலவே பல வழிகளில் இருந்தாலும் மேலே தரப்பட்டுள்ள பல புதிய வசதிகள், கூடுதல் பாதுகாப்பு, நிலையாக இயங்கும் தன்மை ஆகியவற்றிற்காக நிச்சயம் இதற்கு நம் கம்ப்யூட்டரை மேம்படுத்திக் கொள்ளலாம். விண்டோஸ் 7 தரும் சில புதிய டூல்களை இங்கு காணலாம்.
ப்ராப்ளம் ஸ்டெப்ஸ் ரெகார்டர் (Problem Steps Recorder (PSR)
விண்டோஸ் 7 சிஸ்டத்தினைக் காப்பாற்றும் ஒரு வசதி. உங்கள் கம்ப்யூட்டர் ஏதேனும் ஒரு பிரச்னையால் பாதிக்கப் படுவதாகத் தெரிந்தால், அந்த பிரச்னை உருவாகும் விதத்தினை இந்த வசதி பதிவு செய்திடும். இதன் மூலம் அந்த பதிவினை, பிரச்னையைத் தீர்க்கக் கூடிய நபருக்கு அனுப்பி, வழிமுறைகளைக் கேட்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது (Problem Steps Recorder (PSR) என்பதனைத் திறந்து "Record" என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். இதனை அழுத்தியபின் ஒவ்வொரு மவுஸ் கிளிக் செய்திடும்போதும் ஒரு ஸ்கிரீன் சாட் எடுக்கப்படும். இவற்றுடன் நம்முடைய குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த ஸ்கிரீன் சாட்கள் அனைத்தும் அடங்கிய எச்.டி.எம்.எல். பைல் (HTML FILE) ஒன்று உருவாக்கப்படும். அது ஸிப் (ZIP) செய்யப்பட்டு டெஸ்க் டாப்பில் வைக்கப்படும். பின் அது தானாக பிரச்னையின் அடிப்படையில் வல்லுநர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த PSR பைலை PSR.EXE என்று டாஸ் கமாண்ட் புள்ளியில் கொடுத்தும் இயக்கலாம்.கிரெடென்சியல் மேனேஜர் (Credential Manager)
இது விண்டோஸ் 7 இயக்கத்தில் தரப்பட்டுள்ள ஒரு புதிய வசதி. விஸ்டாவில் யூசர் அக்கவுண்ட்டில் தரப்பட்ட பாஸ்வேர்ட் மேனேஜர் போன்ற வசதியை விரிவாகத் தருகிறது. இந்த டூல் மூலம் நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் நுழைந்தாலும் அந்த செயல்பாட்டிற்கான கிரெடென்சியல் உருவாக்கப்பட்டு ஒரு போல்டரில் தக்கவைக்கப்படுகிறது. இதே போல இமெயில் அக்கவுண்ட் மற்றும் வெப் அக்கவுண்ட் ஆகியவற்றிற்கும் உருவாக்கலாம். இவற்றை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்துக் கொண்டால், சிஸ்டம் கிராச் ஏற்படுகையில் இவற்றை மீண்டும் புதுப்பித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disc)
சிஸ்டம் கரப்ட் ஆகி, கம்ப்யூட்டர் பூட் ஆக மறுக்கையில் உங்களுக்கு மறு வாழ்வு தரும் டிஸ்க்கினை உருவாக்கும் அருமையான வசதி இது. இந்த வசதியைப் பயன்படுத்தி சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றை உருவாக்கலாம். அதன் மூலம் கிராச் ஆன கம்ப்யூட்டரை இயக்க முடியும். இதனை உருவாக்க ஸ்டார்ட் அழுத்தி சர்ச் பாக்ஸில் சிஸ்டம் ரிப்பேர் (System Repair) என டைப் செய்திடவும். அதன்பின் கிடைக்கும் விண்டோவில் (Create a System repair Disc) என்பதில் அழுத்தவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உங்கள் சிஸ்டத்தில் உள்ள சிடி பர்னர் திறக்கப்படும். இதில் கிரியேட் டிஸ்க் (Create Disc)) என்பதில் கிளிக் செய்திடவும். இனி உருவாக்கப்படும் டிஸ்க்கை எடுத்துப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.சிஸ்டம் கிராஷ் (System Crash) ஆனால் இந்த டிஸ்க்கை எடுத்து, அதன் டிரைவில் போட்டு இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன் ரெக்கவரி ஆப்ஷன்ஸ் ஒரு பட்டியல் கிடைக்கும். இதில் Startup repair, System restore, System image recovery, Windows memory diagnostic and Command prompt எனப் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்களுக்கு எது தேவையோ அதனைக் கிளிக் செய்து, சிஸ்டத்தினை சரி செய்து கொள்ளலாம்.
பேக் அப் டூல் (Backup utility): விஸ்டாவில் ஒரு பேக் அப் டூல் கிடைத்தது. அது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிறைய ஆப்சன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் (Hard Disk) உள்ள பைல்களின் பேக் அப் காப்பியை அதே ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு பகுதி, செருகி எடுத்துச் செல்லக்கூடிய ஹார்ட் டிஸ்க், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவ் ஆகிய ஒன்றில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பேக் அப் செய்திடுகையில், பேக் அப் தேவையற்ற போல்டர்கள் மற்றும் டிரைவ்களை விலக்கியும் எடுக்கலாம்.
திரைத் தோற்றத்தை அமைத்தல் (Text tuning and color calibration):
விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் நல்ல டூல்களில் இதுவும் ஒன்று. நம்மில் பலர் சிஸ்டம் மானிட்டரில் என்ன காட்சி கிடைக்கிறதோ, அதனை அப்படியே வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை இயக்குகிறோம். நம் கண்களுக்கு இந்த தோற்றம் சரியாக உள்ளதா, எரிச்சலைத் தருகிறதா, வண்ணக் கலவை சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. கிடைக்கின்ற இமேஜை ஒன்றும் செய்திட முடியாது என்ற எண்ணத்துடன் செயலாற்றுகிறோம்.
விண்டோஸ் 7 இந்த இமேஜை எடிட் செய்திடும் டூல் ஒன்றை நமக்குத் தருகிறது. இந்த டூல் பெயர் Clear Type Text Tuner . இதனை கண்ட்ரோல் பேனல் சென்று இயக்கலாம். இந்த டூல் மூலம், மானிட்டரில் தெரியும் காட்சியினை ட்யூன் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட் டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்கள் இணைக்கப் பட்டிருந்தால், ஒவ்வொரு மானிட்டரின் இமேஜையும் ட்யூன் செய்து வைத்திடலாம்.
இவ்வாறு எடிட் செய்திடுகையில் வண்ணக் கலவை யினை சரி செய்திட விண்டோஸ் 7 Display Color Calibration என்ற டூலைத் தருகிறது. கலர் இணைப்பு, பிரைட்னெஸ், காண்ட் ராஸ்ட் ஆகிய வசதிகள் இந்த டூல் மூலம் பெற்று வண்ணக் கலவையை நம் கண்கள் விரும்பும் வகையில் சரி செய்திடலாம்.
மேட் இன்புட் பேனல் (Math Input Panel) விண்டோஸ் 7 தொகுப்பை உங்கள் டேப்ளட் பிசி அல்லது டச் ஸ்கிரீன் (Touch Screen) கொண்ட மானிட்டருடன் இயக்கு கிறீர்களா? அப்படியானால் சில மேத்ஸ் கால்குலேசனை மேற்கொள்கையில் அதற்கான சிறப்பு கீகளைத் தேடிப் பயன்படுத்த வேண்டியதில்லை. திரையில் மேத்ஸ் சிம்பல்(Maths Symbol) மற்றும் பார்முலாக்களை அமைத்தால், இந்த மேத் இன்புட் டூல் தானாக அதனை அறிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றி, கணக்கினை செயல்படுத்துகிறது. சாதாரண வழக்கமான திரை கொண்டு இயக்கிக் கொண்டிருந்தால், திரையில் மவுஸ் மூலம் இந்த பார்முலாக்களை எழுதியும் இந்த டூல் மூலம் முயற்சிக்கலாம்.
பிரைவேட் கேரக்டர் எடிட்டர் (Private Character Editor)
ஒரு சிலரின் கையெழுத்து அழகாக இருக்கும். அச்சிடுவதற்குப் பதிலாக இதனையே வைத்துக் கொள்ள லாமே என்று விரும்புவார்கள். கம்ப்யூட்டரில் ஒரு சில எழுத்துக்களில் நீங்கள் சிறிய மாற்றங்களை விரும்புவீர்கள். அல்லது எழுத்து வகைகளை நீங்களே மாற்றி அமைக்க ஆசைப்படலாம். அப்படிப்பட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த கேரக்டர் எடிட்டர் டூல் உதவுகிறது. கேரக்டர்களை எடிட் செய்து, பின் கேரக்டர் மேப் (Character Map) மூலம் இவற்றை இன்புட் செய்து டாகுமென்ட்களிலும் பிற பைல்களிலும் பயன்படுத்தலாம்.
சில வேறுபாடுகள்:நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்திருந்தாலும், புதிய கம்ப்யூட்டர் ஒன்றை விண்டோஸ்-7 சிஸ்டத்துடன் வாங்கி இருந்தாலும், பெரும்பாலானவர்கள், விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்துதான் விண்டோஸ்-7 சிஸ்டத்திற்கு மாறுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சந்திக்க நேரும் சில அடிப்படை வேறுபாடுகளை இங்கு காணலாம்.
1. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை குயிக் லாஞ்ச் பாரில் (Quick Launch) கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கிளிக் செய்து, புரோகிராமினை இயக்கிச் செயல்படுவார்கள். இதற்காகவே சிலர் கீழாக உள்ள டாஸ்க் பாரில் அதிக ஐகான்கள் வைப்பதற்காக, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் குயிக் லாஞ்ச் பார் இல்லை. அதற்குப் பதிலாக பின்னிங் (Pinning) என்னும் வசதி தரப்பட்டுள்ளது. எந்த அப்ளிகேஷனிலும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் PIN என்னும் பிரிவை டாஸ்க் பார் அல்லது ஸ்டார்ட் மெனு அல்லது இரண்டிலும் இருக்கும்படி செட் செய்திடலாம். மேலும் டாஸ்க்பாரில் உள்ள ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் இயங்கிக் கொண்டிருந்தால், அதன் ஐகானைச் சுற்றிச் சிறிய வட்டம் காட்டப்படுவதும் ஒரு புதுமையான வேறுபாடு.
2. விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP) பயன்படுத்தியவர்கள் மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் (My recent documents) என்னும் பிரிவை அடிக்கடி பயன்படுத்தி, அப்போதைக்குப் பயன் படுத்திய புரோகிராம்களைப் பெற்று இயக்கியிருப்பார்கள். இந்த மெனு ஸ்டார்ட் மெனுவிற்கு வலது பக்கம் கிடைக்கப் பெறும். இதில் அப்போது பயன்படுத்திய பைல், அது DOC, JPEG, MP3 என எதுவாக இருந் தாலும், பட்டியலிடப்படும். அதில் கிளிக் செய்து பெறலாம். இதனை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இன்னும் விரிவாக்கியுள்ளது மைக்ரோசாப்ட். ஒவ்வொரு அப்ளிகேசனும் ஒரு மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் பட்டியலை ஜம்ப் லிஸ்ட் (Jump List) என்ற பெயரில் கொண்டுள்ளது. ஸ்டார்ட் மெனுவில் உள்ள புரோகிராம் அருகே ஒரு அம்புக் குறி உள்ளது. இதன் அருகே மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த அப்ளிகேசன் புரோகிராம் இயக்கிய தற்போதைய பைல்களின் பட்டியல் கிடைக்கிறது.
மேலும் இந்த ஜம்ப் லிஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து, குறிப்பிட்ட பைலை பின் செய்து கொள்ளலாம். இதனால் அந்த குறிப்பிட்ட பைல் இந்த பட்டியலின் சுழற்சியில் மறையாது.
விண்டோஸ் 7 லைப்ரரி (Windows 7 Library) 3. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் பைல் மற்றும் போல்டர்களுக்குப் பழகிவிட்டனர். விண்டோஸ் வெளியாகும்போது, மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்து பவர்கள், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தங்கள் பைல்களையும், மை பிக்சர்ஸ் போல்டரில் பட பைல்களையும் மியூசிக் பைல்களை மை மியூசிக் போல்டரிலும் மட்டுமே வைப்பார்கள் என எதிர்பார்த்தது. ஒருவகையில் பார்த்தால் அது தர்க்க ரீதியாக சரி என்றே தெரிகிறது. அதன்படி பைல்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தால், பேக் அப் எடுக்கவும் பைல்கள் எங்கு இருக்கின்றன என்று தேடிப் பார்க்கவும் எளிதாக இருந்திருக்கும். நாம் இஷ்டப்படி மை டாகு மென்ட்ஸ் போல்டருக்கு வெளியே போல்டர்களை உருவாக்கி, நம் இஷ்டத்திற்கும் வசதிக்கும் ஏற்றபடி பைல்களைப் பாதுகாப்பாக வைக்கப் பழகிவிட்டோம். இதனால் டேட்டா அடங்கிய பைல்கள் டிரைவ்கள் எங்கும் சிதறிக்கிடக்க, பிரச்னைகளும் குவிந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வாக விண்டோஸ் 7 லைப்ரரி என்ற ஒரு வழியைத் தந்துள்ளது. பைல்கள் சிதறிக் கிடந்தாலும், அவற்றை இந்த ஓர் இடத்தில் வைத்துத் தேடிப்பார்த்துப் பெறும் வகையில் லைப்ரேரி அமைக்கப்படுகிறது.
மேலும் இந்த லைப்ரரியில் பைல்கள் அமைக்கப்படுகையில், பைல்களின் தன்மைக்கேற்ப பைல்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பட பைல்கள் தம்ப்நெயில் (Thumb Nail) படங்களுடன் காட்யஅளிக்கும்.
மேலே சொல்லப்பட்ட மூன்று வேறுபாடுகளும் சில அடிப்படை வேறுபாடுகளே. இன்னும் பல வேறுபாடுகளை நீங்கள் பயன்படுத்துகையில் அறிந்து கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தற்போது மக்கள் பயன்பாட்டில் பிரபல மடைந்து வரும் வேலையில் விண்டோஸ் 8 பற்றிய செய்திகள் பறக்க ஆரம்பித்து விட்டது. விண்டோஸ் 8 பற்றி செய்திகள் கசிந்து கொண்டு இருக்கிறது. விண்டோஸ் 7ல் நாம் ஃபைலை காப்பி செய்யும் போது எவ்வளவு சதவீதம் காப்பி ஆகிக் கொண்டு இருக்கிறது என்பது விசுவலாக (Visual) தெரியும். விண்டோஸ் 8ல் புதிதாக இணைக்கப்பட்ட ஒரு ஹார்ட்வேர் எத்தனை சதவீதம் இன்ஸ்ட்டால் ஆகி இருக்கிறது என்பதை காண முடியும்.
பிங் (Bing) இவ்வளவு அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மை இருந்தும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தான் இறங்கிய அனைத்துத் துறைகளிலும் முதல் இடத்தைப் பெற முடியவில்லை. குறிப்பாக, இன்டர்நெட் சர்ச் இஞ்சின் மார்க்கட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், என்ன முயன்றும் முதல் இடத்தின் அருகே கூடப் போக முடியவில்லை. இந்த தேடல் இஞ்சின் பிரிவில், கூகுள் முடி சூடா மன்னனாக மட்டுமல்ல, பேரரசனாக இன்றும் இயங்குகிறது. இந்த பிரிவைப் பொறுத்தவரை கூகுள் 60சத மார்க்கட்டை மிகக் கெட்டியாகப் பிடித்து அடுத்த நிறுவனமான யாஹூவை எங்கோ தள்ளி வைத்துள்ளது.
இந்த வேளையில் தான் கூகுள் நிறுவனத்தின் சர்ச் இஞ்சினுக்குச் சரியான சவாலைத் தர வேண்டும் என்ற எண்ணத்துடன், தன்னுடைய லைவ் சர்ச் (Live Search ) இஞ்சின் இடத்தில் பிங் (Bing) என்ற பெயரில் புதிய சர்ச் இஞ்சினைக் கொண்டு வந்தது. ஆனால் இதனை சர்ச் இஞ்சின் என மைக்ரோசாப்ட் அழைக்கவில்லை. இங்கு அதன் சில சிறப்பம்சங்கள் மற்றும் பிங் எந்த வகையில் சிறந்தது என்று மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட், பிங் சாதனத்தை ஒரு டெசிஷன் இஞ்சின் (Decision Engine)என அழைக்கிறது. இதுவரை மொத்தம் 34 கோடி இன்டர்நெட் வெப் சைட்டுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இணைய தளங்கள் இருக்கையில், தேடுதல் இஞ்சின்களின் பணி நமக்கு ஓர் அத்தியாவசியத் தேவையாகும். ஒரு சர்ச் இஞ்சின் Search Enginer பக்கம் செல்லாமல், இணையத்தில் தகவல்களைத் தேட முடியுமா என்று ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்தால், நமக்கு இதன் முக்கியத்துவம் தெரியும். சர்ச் இஞ்சினுக்கும், டெசிஷன் இஞ்சினுக்கும் என்ன வேறுபாடு? மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, தேடல் ஒன்றை மேற்கொள்கையில் தேவையில்லாமல் கிடைக்கும் குப்பை தளங்களை ஓரளவிற்காவது தடுக்க வேண்டும் என எண்ணுகிறது. இதன் மூலம் தேடும் நமக்கு வேலையை எளிதாக்கி, மிக முக்கியமான தகவல்களை மட்டும் தர திட்டமிடுகிறது.
பிங், நான்கு பிரிவுகளைத் தன் இலக்காகக் கொண்டு தகவல்களைத் தருகிறது. அதன் ஒரே நோக்கம், இணையத்தில் தேடுவதையும், தேடிப் பெறுவதையும் எளிதாக்குவதுதான். இது இதன் ஹோம் பேஜிலேயே தொடங்குகிறது. இங்கு வண்ணமயமான திரையின் நடுவே சர்ச் பாக்ஸ் தரப்பட்டுள்ளது. இடது பக்கம் தேடலுக்கான விடைகள் வீடியோ, நியூஸ், ஷாப்பிங், இமேஜஸ் மற்றும் ட்ராவல்ஸ் அல்லது மேப்ஸ் எனத் தரப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் தேடலைத் தொடங்குகையிலேயே, பிங் ஆட்டோ சஜஸ்ட் (Auto Suggest) என்னும் சாதனத்தை இயக்குகிறது. நீங்கள் தரும் ஒரு சில எழுத்துக்களின் அடிப்படையில் சொற்களைக் கொடுத்து, நீங்கள் தேடுவதில் இவை உள்ளனவா என்று ஒரு பட்டியலைக் காட்டுகிறது. best match என்று சொல்லி நீங்கள் தேடுவதற்கு இதுவே மிகச்சரியான தகவலாக இருக்கும் என்று காட்டுகிறது.
உங்கள் தேடல்களை வகைப்படுத்தி, உங்களுக்கு நினைவூட்டி நீங்கள் தேடும் வேலையை, திசையை எளிதாக்குகிறது. இது பிங் தரும் Explore pane என்பதில் தொடங்குகிறது. ஹோம் மற்றும் முடிவுகள் பட்டியல் அருகே இது காணப்படுகிறது. இதன் மூலம் நாம் நமக்குத் தேவையில்லாத தளங்களை ஒதுக்கலாம். இந்த பிரிவிலேயே, நாம் அண்மையில் மேற்கொண்ட தேடல்களையும், நாம் ஆர்வம் கொள்ளக் கூடிய தளங்களின் பெயர்களையும் காட்டுகிறது.
பிங் தளத்தில் காட்டப்படும் வசதியின் மூலம், நாம் ஒரு தளத்தின் பெயரில் கிளிக் செய்யாமலேயே, அது எப்படி இருக்கும் என ஒரு பிரிவியூவினைக் காணலாம். நம் தேடுதலுக்கானப் போதுமான தகவல்கள் இருந்தால், அந்த தளத்தின் பெயர் மீது கர்சரைக் கொண்டு சென்றால், இந்த பிரிவியூ காட்டப்படுகிறது. இதனைப் பார்த்த பின்னர் இது நாம் தேடும் தளம் என்று முடிவெடுத்து, அதன் மேல் கிளிக் செய்திடலாம். இதனால் தான் பிங் தேடல் சாதனத்தை டெசிசன் இஞ்சின் என்று மைக்ரோசாப்ட் அழைக்கிறது.
இப்படியே பல வழிகளில் தேடல்களை எளிதாக்கித் தகவல்களை நாம் தேர்ந்தெடுத்துக் காண பிங் வழி வகுக்கிறது. கூகுளைப் பொறுத்தவரை அதன் உயிர்நாடி மற்றும் வர்த்தகத்தின் மைய மூலதனமே தேடல் இஞ்சின் (Search Engine) தான். ஆனால் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் உலகில் பல பிரிவுகளைக் கையாள்கிறது. இதன் சர்ச் இஞ்சின் லைவ் சர்ச் (Live Search) ஒரு முழுமையான, இதற்கென மட்டும் வடிவமைக்கப்பட்டதாக அமையவில்லை. கூகுள் இஞ்சினுடன் அதனால் போட்டியிட முடியவில்லை.
ஆகவே தான் மைக்ரோசாப்ட் பிங் இஞ்சினை வடிவமைத்தது. இந்த பிரிவில் முதன்மை தளமாக இயங்கும் கூகுள் இஞ்சினிலிருந்து தனித்துக் காட்ட, தன் பிங் ஹோம் பேஜை வண்ணமயமாக மாற்றியது. இதில், தான் அமைத்துள்ள சில முக்கிய இடங்களை ஹாட் ஸ்பாட் (Hot Spot) என அழைத்தது. இந்த ஹாட் ஸ்பாட் மீது உங்கள் கர்சரைக் கொண்டு சென்றால், அங்குள்ள படம் குறித்து பல தகவல்கள் பாப் அப் (POPUP) ஆகி இதனையா தேடுகிறாய் என்று கேட்கும். இப்படிப் பல வித்தியாசமான வகைகள் மூலம் கூகுளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளது பிங்.
யாஹூ நிறுவனத்தின் சர்ச் இஞ்சினை மேம்படுத்த மைக்ரோசாப்ட் ஏற்படுத்திய பத்து ஆண்டு கால ஒப்பந்தம் கூகுளையும் சற்று திகைக்க வைத்தது. யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. யாஹூ தற்போது சர்ச் இஞ்சின் மார்க்கட்டில் 20 சதம் கொண்டுள்ளது. இத்துடன் மைக்ரோசாப்ட் தேடல் இஞ்சின் செயல்பாட்டினைக் கொண்டால் கூகுள் கொண்டிருப்பதில் பாதியாவது இந்தப் பக்கம் இருக்கும். பிங் வந்த பின்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு 10சதம் ஆக இருந்தது என்பது உண்மை. ஆனால் கூகுள் இடத்தைப் பிடிக்க மைக்ரோசாப்ட் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கான புதிய வழிகளை உருவாக்க வேண்டும்.
ஹாட்மெயில் (HOTMAIL)
ஹாட்மெயில், விண்டோஸ் லைவ் பகுதியாக மைக்ரோசாப்ட்டால் இயக்கப்படும் ஒரு இலவச இணைய அடிப்படையிலான மின்னஞ்சல் சேவை. இது இணையத்தின் முதல் இணைய அடிப்படையிலான மின்னஞ்சல் சேவைகளுள் ஒன்று. பிற முக்கிய மின்னஞ்சல் சேவைகளைப்போலவே ஹாட்மெயிலும் அஜாக்ஸ் நிரலாக்க தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வேலைசெய்கிறது. இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர், பயர்பாக்ஸ், சபாரி மற்றும் கூகுள் குரோம் போன்ற வலை தள உலவிகளை ஆதரிக்கிறது.
சிறப்பம்சம்
ஹாட்மெயில் பல தரப்பட்ட சிறப்பம்சங்களான, கட்டமைக்கப்பட்ட கேள்வி தொடரியல், மின்னஞ்சள் வடிகட்டிகள், மின்னஞ்சள் கோப்புறை அடிப்படையிலான அமைப்பு, குழுப்படுத்துதல் தொடர்பு, குழு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, உயர் உரை வடிவமைப்பு, உயர் உரை கையொப்பங்கள், ஸ்பேம் வடிகட்டுதல், பல முகவரி மற்றும் பல மொழிகளை ஆதரித்தல் போன்ற பண்புகளை உள்ளடக்கியுள்ளது.
நடப்பு காட்சி ஹாட்மெயிலின் நடப்பு காட்சியில் பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் செய்தியில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை நேரடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கிறது. உதாரணமாக எந்த நிகழ்வு இணைப்பு களையும் நேரடியாக நடப்பு காட்சியின் மூலம் முன்னோட்டமிட முடியும். யூடியூப், பிலிக்கர் போன்ற சேவைகளின் உள்ளடக்கங்களை மின்னஞ்சல் செய்தியின் உள்ளே நேரடியாக பார்க்க அனுமதிக்கிறது.
அலுவலக பயன்பாட்டில் ஒருங்கிணைப்பு இணைய உலாவியில் இருந்துகொண்டே, மைக்ரோசாப்ட் ஆபீஸ், வேர்ட், எக்செல், பவர்பாயின்ட் ஆவணங்களை பார்வையிடவும், திருத்தவும், பதிவிறக்கம் செய்யவும், வெப் அப்ஸ் ஒருங்கிணைக்கிறது. விண்டோஸ் லைவ் ஸ்க்கைட்ரைவ் மூலம் ஆவனங்களை 10 ஜிபி வரை பதிவேற்றவும், திருத்தவும், பிற பயனாளிகளுடன் பகிரவும், பார்க்கவும் முடியும்.
பிற அம்சங்கள்
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்-9 மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்தும் பயனாளிகளுக்கு, மின்னஞ்சல் பயன்பாடு இப்போது ஒரு டெஸ்க்டாப் நிரலாக பயன்படுகிறது.
விண்டோஸ்-7ல் நீங்கள் விரைவாக பயன்படுத்த உங்கள் டாஸ்க்பார் திட்டங்களை இணைக்கும் வசதியை அளிக்கிறது. சில பயன்பாடுகள், சில அம்சங்கள் மற்றும் விருப்பங்கள் உங்கள் திரை திறந்து இல்லாமல் இருந்தாலும், நீங்கள் டாஸ்க் பாரில் நேரடியாக பயன்படுத்தலாம். இப்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்-9 ஒரு வலை அஞ்சல் கிளையன்ட்டுக்கு மாறாக டெக்ஸ்டாப் மின்னஞ்சல் கிளையன்ட் போல குத்துதல் அம்சங்களை ஹாட்மெயில் வழங்குகிறது. நீங்கள் ஹாட்மெயில் முகப்பு, இன்பாக்ஸ், நாட்காட்டி, தொடர்புகள் அல்லது ஒரு மின்னஞ்சலை அனுப்ப டாஸ்க்பாரிலிருந்து செல்லமுடியும்.
மோசில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox)
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) க்கு பிறகு பிரபலமாக இருக்கும் பயர்பாக்ஸ் தனது அடுத்த வெளியீடான பதிப்பு 4ஐ வெளியிட்டுள்ளது. இதில் வேகத்துடன் பாதுகாப்பையும் கூட்டியுள்ளது. க்ரோம் 10, IE9 வெளியாகியுள்ள நிலையில் பயர்பாக்ஸின் இந்த பதிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மிக பரவலாக பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளுள் (BROWSER) இது ஒன்றாகும். இது மற்ற இணைய உலாவிகள் தங்கள் கணினியில் பல புதிய முன்னேற்றங்களை செய்தபோதிலும், இன்னும் இணைய பயனர்கள் மத்தியில் மோசில்லா பயர்பாக்ஸ் பிரபலமாக இருக்கிறது. பல உலாவிகளை பார்த்து அதன் நன்மைகளை ஆராய்ந்து பிறகு இணைய பயனர் மத்தியில் வலை உலாவிகளின் ஒரு பயனாளியாக தொடரவும், மோசில்லாவை ஒப்பிட்டால் நன்கு பிடித்திருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். பயர்பாக்ஸ் இணைய பயனர்களுக்கு நம்பமுடியாத அளவில் உலாவுதல் வேகம், இணைய பாதுகாப்பு, வலை இணக்கத்தன்மை மற்றும் ஒரு சிறந்த உலாவல் அனுபவத்தை விளக்குகிறது. இதன் மேம்பட்ட அம்சங்கள் மகிழ்ச்சியடைய வைக்கின்றது.
எளிதாக நிறுவல் தன்மை.அனைத்திலும் சிறந்த விஷயம் பயர்பாக்ஸ் இலவசம் மற்றும் பதிவிறக்க அளவு எளிதானது. பயர்பாக்ஸ் செய்கின்ற முதல் விஷயம் அதன் எளிதாக நிறுவல் தன்மை. பயர்பாக்ஸ் நிறுவும் பொருட்டு ஒரு வல்லுனர் தேவையில்லை. மற்றும் செட் அப் மிக விரைவானது, மற்றும் எளிதானது. மற்றும் எளிதாக ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மாற உதவுகிறது. பல மொழிகளை ஆதரிக்கும்.
வேகம்
இரண்டாவது நன்மை அதன் வேகம். மோசில்லா பெரிதும் உங்கள் உலாவல் வேகத்தை அதிகரிக்கிறது. ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின், உடன் இயக்கப்படுகிறது. எந்த புதிய வலை பக்கங்கள் ஏற்றும் போதும் எவ்வளவு தாமதங்கள் உள்ளன என்பதை உறுதி செய்கிறது.
மற்றொரு சிறப்பான அம்சம் தாவலிடப்பட்ட உலாவல் உள்ளது. இந்த எளிய வழி இன்னும் மிகவும் பயனுள்ளதாக அமைந்து உலாவுதலின் போது, ஒரு சாளரத்தின் இருந்து மற்றொரு சாளரத்தில் மாறுவதற்கு பணி எளிமைப்படுத்தும் அற்புதமான கருவியாகும்.
மோசில்லா பயன்படுத்தி எளிதாக மற்றும் வசதியாக, நேரம் சேமித்து கொடுத்து, பல திறந்த வலை பக்கங்கள் ஆகியவற்றை நிர்வகிக்க முடியும். பயர்பாக்ஸ் செருகுப் பயன்பாடு மற்றும் விரிவாக்கங்களை கொண்டுள்ளது.
செருகுப்பயன்பாடுகளை அது மிகவும் எளிதாக உலாவுதல் செய்கிறது. எந்த இணைய பயனருக்கும் ஒரு பயனுள்ள கருவியாக இருக்கிறது. ப்ளக் இன்கள் (Plug in) மற்றும் விரிவாக்கங்களை எளிதாக பதிவிறக்கம் ஆகிவை (பயர்பாக்ஸ் பதிவிறக்க) பயர்பாக்ஸ் வலைத்தளத்தில் கிடைக்கும்.
பயர்பாக்ஸ் எளிதான அம்சங்களை கொண்ட ஒரு பாப் அப் விளம்பரம் தடுப்பான், இது உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு ஆகும். விளம்பரங்கள் மற்றும் பிற அனிமேசன் பட விளம்பரங்கள் தேவையற்ற பாப் ஆஃப் வார்டுகளில் உள்ள எரிச்சல் விளம்பரங்களை கட்டுப்படுத்தி எளிதாகவும், இறுதியான தீர்வாகவும் உள்ளது. அனைத்து பயனும் நிறைந்த பயர்பாக்ஸ் புதிய மற்றும் மிகவும் பரவலான கணினி வைரஸ்களை எதிர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓபேரா பிரவுசர் (Opera Browser)பிரபலமான உலாவிகளில் ஒன்றான ஓபேரா தனது அடுத்த வெளியீடான பதிப்பு 11 வெளியிட்டு இருக்கிறது. இது 170 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஓபேரா ஒரு இணைய உலாவி இது மென்பொருளாகவும் உருவாக்கப்பட்டு இணைய தொகுப்பாகவும் உள்ளது. இது உலகம் முழுவதும் 270மில்லியன்க்கும் மேற்பட்ட பயனார்களை கொண்டுள்ளது. இந்த உலாவி பொதுவான இணைய தொடர்பான பணிகளை கையாளுகிறது. வலை தளங்களில் மின்னஞ்சல் செய்திகளை பெறவும், மேலாண்மை தொடர்புகள், பிட்டோரன்ட் (Bittorrent) வழியாக பதிவிறக்கும் கோப்புகள், வலை ஓடைகள் வாசிப்பு ஆகியவை இணைய தொடர்பான பலருக்கு முக்கிய பயணாற்றுகிறது.
ஓபேரா தனிநபர் கணினிகள் மற்றும் மொபைல் போன்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஓபேரா உக்ரைன் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமான டெஸ்க்டாப் உலாவியாகவும் உள்ளது. ஓபேரா மினி இது மிகவும் பிரபலமான மொபைல் வலை உலாவி ஆகும். அந்தந்த உற்பத்தியாளர் களின் மொபைல் கைபேசிகள் முன்னிருப்பாக ஒருங்கிணைந்த இணைய உலாவியாக தேர்வு செய்யப் பட்டிருக்கிறது.
விக்கிபீடியா (Wikipedia)
விக்கிபீடியா (Wikipedia) என்பது அனைவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் பல எழுத்தாளர் களால் உருவாகிக் கொண்டுவரும் ஒரு உன்னதமான, உபயோகமான, பாதுகாக்கப்படவேண்டிய கலைக்களஞ்சியம். அனைவருக்கும் பயன்படக்கூடிய உலகின் ஒரே ஒரு இலவச கலைக் களஞ்சியம்.
அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச்சேர்ந்த ஜிம்மி வால்ஸ் (Jimmy Wales) என்பவர் விக்கிபீடியா நிறுவனத்தை தோற்று வித்தார். பணம் சம்மந்தப்பட்ட ஒரு வியாபார நிருவனத்தில் வேலை செய்துகொண்டே இந்நிறுவனத்தை ஏற்படுத்தினார். இந்நிறுவனத்தின் வருமானத்தை எதிர் பார்க்காமால், தான் ஒரு பேச்சாளராகவும் செயல்பட்டு, செல்லும் இடமெல்லாம் பேச்சாற்றல் மூலம் தினமும் சொந்தமாக சம்பாதித்துக் கொண்டு வருகிறார்.
விக்கிலீக்ஸ் (Wikileaks)
ஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange) என்பவர் ஆஸ்த்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும். பேச்சாளராகவும் உள்ளார்.
விக்கிலீக்சைத் (Wikileaks) தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார். அசான்ச் 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்த்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங் களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார். அசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்தது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அசான்ச், இது விக்கிக் கசிவுகளினால் பாதிக்கப் பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறினார். இருப்பினும் இவர் லண்டன் போலீசாரிடம் சரணடைந்த பிறகு கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்தே பிணையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
டிஎன்ஏ கணினி (DNA Computer)
கணினியின் சில்லு உற்பத்தியாளர்கள் அடுத்த தலைமுறை மீச்சிறுசெயலி (Microprocessor) உற்பத்தி செய்வதற்கு தயாராக இருப்பார்கள். சிலிக்கன் மூலப் பொருளால் உற்பத்தி செய்யப்படும் இந்த மீச்சிறு செயலியின் வேகமும் சிற்றளவாக்கமும் (Miniaturization) அதன் எல்லையை அடைந்துவிட்டது. மேலும் ஒவ்வொரு 18 மாதத்திற்கு பிறகு மீச்சிறுசெயலியின் கொள்ளவும் வேகமும் இருமடங்கு உயர்ந்து கொண்டே யிருக்கும் என்ற மூர்ஸ் விதி அதன் எல்லையை சென்றடைந்து விட்டது. அதனால் இந்த சிலிக்கன் சில்லை விட வேகமான புதியதொரு பொருளை இதன் உற்பத்தியாளர்கள் தேடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆனால் நம்முடைய உடலிற்குள் இயற்கையாக இலட்சக் கணக்கில் உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகள் நம்மால் உருவாக்க படும் மீக்கணினியைவிட பலமடங்கு வேகத்திலும், கொள்ள ளவிலும், அதிக திறன்வாய்ந்ததாக உள்ளன என்ற செய்தியை, நாம் இதுவரையில் அறியாமலேயே உள்ளோம். இவைகளை ஒருங்கிணைத்து உயிர்சில்லு என்பது உருவாக்க பட்டு தற்போதைய கணினியைவிட பலமடங்கு வேகத்திலும் மிகச்சிறிய உருவிலும் வருங்காலத்தில் வெளியிடப்பட வுள்ளன. அவ்வாறு உருவாக்கபடும், டிஎன்ஏ கணினியானது தற்போதைய சிலிக்கன் சில்லு கணினியைவிட பில்லியன் மடங்கு அதிக நினைவக கொள்ளளவு திறனும், வேகமும், கொண்டதாக இருக்கும்.
ரோசெஸ்டர் பல்கலைகழகத்தில் ஆடில்மேன்ஸ் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்த டிஎன்ஏ உயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட லாஜிக்கேட்டை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சிலிக்கன் ட்ரான்ஸிஸ்டர் (Silicon Transistors) வாயிலாக லாஜிக்கேட்டில் வரும் மின் சைகைகள் உருமாற்றபட்டு கணினியின் சிக்கலான கணக்கீடுகளுக்கும் செயல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் இந்த டிஎன்ஏ உயிர் மூலக்கூறை அடிப்படையாக கொண்ட கணினியில் ஜெனடிக்கேட் (Genetic Gate) எனப்படும் அன்டுகேட் (AND GATE ) பயன்படுத்தபட வுள்ளது. இதில் உயிர்பொருளே உள்ளீடாகவும், டிஎன்ஏ உயிர் மூலக்கூறில் ஏற்படுத்தபடும் வேதியியல் மாற்றமே, சைகைகளாகவும் கொள்ளபட்டு செயற்படுத்தபடுகின்றது.
இந்த டிஎன்ஏ உயிர்மூலக்கூறு கணினியின் பயன் பின்வருமாறு:
1.அதிகஅளவு டிஎன்ஏ உயிர்மூலக்கூறு இயற்கையில் கிடைப்பதால் கணினியின் உற்பத்தி விலை மிககுறைந்த அளவாகவே இருக்கும்.
2.இந்த டிஎன்ஏ உயிர்மூலக்கூறினால் உற்பத்தி செய்யப்படும் கணினியால் சிலிக்கன் சில்லால் உற்பத்தி செய்யபடும் கணினி போன்று சுற்றுசூழல் பாதிக்காது.
3.இந்த டிஎன்ஏ உயிர்மூலக்கூறினால் உற்பத்தி செய்யப்படும் கணினியினாது தற்போதைய கணினியைவிட உருவ அளவில் மிகமிக சிறியதாக இருக்கும்.
4.ஒரு பவுன்டு டிஎன்ஏ உயிர்மூலக்கூறானது தற்போதைய மின்னோட்ட கணியைவிட பலமடங்கு கொள்ளளவு திறன்கொண்டதாகும்.
5.டிஎன்ஏ உயிர்மூலக்கூறின் லாஜிக்கேட்டானது தற்போதைய மீள்வேக கணினியை (Supercomputer) விட அதிக திறன்வாய்ந்ததாகும்.
6.ஒரு கனசென்டிமீட்டர் டிஎன்ஏ உயிர் மூலக்கூறானது 10 டிரில்லியன் அதாவது 10 டெராபைட் கொள்ளளவு திறன் கொண்டதாகும்
7.தற்போதைய மின் கணினியானது ஒருசமயத்தில் ஏதேனுமொருபணியைமட்டும் செய்யக்கூடியதாகும். ஆனால் இந்த டிஎன்ஏ உயிர் மூலக்கூறு கணியானது ஒரே சமயத்தில் பலசெயல்களை இணையாக செய்யக்கூடியது. அதனால் மிக சிக்கலான கணக்கீடுகளை ஒரிரு மணித்துளிகளில் இது செய்யும் செயலை, தற்போதைய கணினியானது தீர்வுசெய்ய பலநூறுஆண்டுகளாகும்.
துகள் கணினி (Quantum Computer)
ஒரு கணினியென்பது (0,1) ஆகிய பைனரி (Binary) எனப்படும் இரு நிலை குறிமொழியால் கட்டமைக்கபட்டதாகும். அதனால் தரவு களனைத்தும், இந்த 0,1 ஆகிய இருநிலை குறிகளின் அடிப்படையிலேயே எந்தவொரு கணினியிலும் தேக்கி வைக்கப்படுகின்றன. இதனுடைய செயல்களும் இந்த இருநிலை குறிகளையே கட்டளையாக கொண்டு அமைகின்றன. ஆனால் இந்த இருநிலை குறியீட்டு கட்டளைகள் எந்தவொரு சமயத்திலும் 0 அல்லது 1 ஆகிய ஒன்றில் ஏதேனும் ஒருநிலை மட்டுமே, செயலில் இருக்கும். ஆனால் துகள் கணினியில் துகள் நிலைபிட்களை அதாவது quantum bits அல்லது qubits உருவாக்கபடுகின்றன. இந்த qubits ஆனது சாதாரன கணினி போன்றில்லாமல் ஒரேசமயத்தில் 0,1 ஆகிய இரண்டு நிலைகளிலும் இருக்குமாறு செயல்படுகின்றன.
இந்த qubits அடிப்படையில் மிக சிக்கலான செயல்களும் எளிதாக தற்போதைய கணினியைவிட மிகவேகமாக தீர்வுசெய்யமுடியும். மேலும் அவ்வாறான சிக்கலான பிரச்சினைகளுக்குமான பல்வேறுவகை தீர்வுகளை ஒரே சமயத்தில் ஓரிரு வினாடிகளின் கிடைக்கின்றன. அமெரிக்க ஐக்கியநாடுகள் முழுமைக்கும் இவ்வாறான ஆறு கணினியே போதுமானதாகும்.
மூர் விதியின்படி ஒவ்வொரு 18 மாதத்திலும் மைக்ரோப்ராஸஸரில் (microprocessor) உள்ள ட்ராண்ஸிஸ்ட ரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதன் அடிப்படையில் கணக்கிடும் 2020 அல்லது 2030ல் ப்ராஸஸருக்குள் ட்ரான்ஸிஸ்டர்களை உள்ளினைத்து, இடமே இல்லையெனும் நிலை ஏற்படும். அப்போது கணினியின் திறனை மேலும் அதிகப்படுத்திட இந்த துகள்கணினி எனும் கருத்தமைவுதான் கைகொடுக்கபோகின்றது.
அயர்ன் ட்ராப்ஸ், ஆப்டிக்கல் ட்ராப்ஸ், குவாண்டம் டாட்ஸ், செமிகண்டக்டர் இம்பியுரிட்டிஸ், சூப்பர் கண்டக்டிங் சர்க்யூட்ஸ் ஆகிய சாதனங்கள் Qubit Control அடிப்படையில் இந்த துகள் கணினி (Quantum Computer) யைபோன்று இயங்கவுள்ளன. இந்த ஒரேசமயத்தில் 0,1ஆகிய இரண்டும் சேர்ந்த நிலையை ணுரெவை ன் மேல்நிலையில் (Superposition) செயல்படுவதால், மில்லியன் கணினிகள் ஒரே சமயத்தில் இணையாக இயங்கமுடியும்.
தற்போதைய கணினியானது (gigaflops) ஒரு பில்லியன் செயல் ஒருநொடிக்கு என்பது துகள் கணினி (Quantum Computer)யில் 10 டிரில்லியன் (10 teraflops) செயல் ஒரு நொடிக்கு செயல்படுத்த கூடியதாகும்.
அதனால் வருங்காலத்தில் சிலிக்கனின் அடிப்படையில் உருவாக்கபடும் கணினியானது துகள்கணினியின் அடிப் படையில் உருமாறவிருக்கின்றது என்பதுதான் உண்மை.
யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் (USB Safely Remove)
விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல மூன்றாம் நபர் (third party) புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.
1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள (third party) புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோ கிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப் பார்க்கலாம்.
2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.
3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும்படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.
4. யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப் படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Posted by Sakthivel - 9841787137